தீ தந்த மனசு

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சாமிசுரேஸ்


காத்;திருப்புகளின்
கொடிய சிறகுகள்
நிரந்தரமாய் முகம் புதைந்து
மரணச்சிசுக்களாயின

மூக்கின்
மயிர்க்குதிருக்குள்
மரணமணம்
புற்றுக்கள் வார்த்து
மனஙு ; கொள்கிறது

நான் நடக்கத்தொடங்கினேன்
ஏன் கால்களுக்கடியில்
முட்களாய் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது காலம்

பாதை ஓரங்களில்
கனவுப் புழக்களின்
கண் வடுக்கள்
முடிவிலிச்சுற்றுகளாய் வடிய
சிலுவையில் தொங்குகின்றன நதிகள்

ஏன் இந்த முடிச்சு

காற்றின் ஒவ்வொரு நுனியிலும்
விழிசிதறிய
மயிர்க்குழாய்கள்

தண்ணீரில் தொங்கும்
விம்பங்களில்
நட்சத்திரத்திட்டுக்களாய்
கரைந்துபோகிறது
நம்பிக்கை

நிலைகுத்தி நின்றன
கால்கள்
நேற்றுத் தொடக்கம்
இன்றுவரை
பயணம் முழுவதும்
இறுகிச் செல்கின்ற முடிச்சுகளில்
வட்டப்புழவொன்று
மெல்லக் கரைந்துகொண்டிருந்தது.
—-
(சாமிசுரேஸ்,சுவிஸ்)

sasa59@bluewin.ch

Series Navigation

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்