தீபாவளி 2008
Published November 20, 2008 • By
ரஜித்
ரஜித்

காட்டுத் தீப்பொறியில்
காதல் விளக்கேற்றும் தீபாவளி
முடிச்சுக்கள் வாழ்க்கை
முறியாமல் அவிழ்க்கும் தீபாவளி
தீவுகளாய் மனிதர்கள்
பாலங்கள் தீபாவளி
அடைமழை நீரெல்லாம்
ஆனந்தக் கண்ணீராய்த் தீபாவளி
தெப்பமாய் நனைந்தாலும்
மத்தாப்பாய்ச் சிரிக்கும் தீபாவளி
சரவெடி உறவுள்
சமரசம்¢ சரிசமம் தீபாவளி
சுடும் மதங்களுள்
சம்மதம் விசிறும் தீபாவளி
சொட்டுச் சொட்டாய்ச் சேர்த்ததை
குடம்குடமாய்க் குடிக்க தீபாவளி
தலைத் தீபாவளி தரிகிடதோம்
தபேலா அடிக்கிறது இதயம்
தம்புரா இசைக்கிறது நாளம்
இக்கரையில் நான்
அக்கரையில் அவள்
சட்டைப்பையில் கைப்பேசியாய்
என் தமிழும் தமிழனும்
சங்குச்சக்கரமாகிறேன்
சிங்கைத் தீபாவளியில்
rajid_ahamed@yahoo.com.sg