திரிநது போன தருணங்கள்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

சித்ரா


மலர் கண்காட்சியில்
சிவப்பு நிறத்தில் சின்னதாய்
வெள்ளை நிறத்தில் வெகுளியாய்
மஞ்சள் நிறத்தில் மகிழ்வாய் …
அத்தனையும் அழகு !!
எதை பார்ப்ப்து
எதை விடுவதென்ற
தவிப்பை தவிர்க்க தெரியாமல்
லயிக்க நேரமும் இல்லாமல் …

கால்பாத வளைகுழியில்
பிடிக்க நினைத்தும்
கடல் அலை இழுக்க …
உருளை உருளையாக
நகரும் மணல் துகல்கள்
வியப்பான கிச்சுகிச்சு …

பிடிக்க நினைத்த தருணங்கள்
உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல்
விசுக் விசுக்கென்று மறைந்து ,
ஆழ்ந்த அனுபவங்களாய் மாறாமல் –
திரிந்து போன தருணங்களாய் …
லயிக்க நேரமில்லாததால்
லயிக்க பழகாததால் …

Series Navigation