தாகூரின் கீதங்கள் – 62 அவனைத் தேடும் பயணத்தில் !

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இரவின் காரிருளில்
அவனைத் தேடும் பயணத்தைத்
தொடர்கிறான் மனிதன்
முடிவின்மை நோக்கி !
வரவேற்று நிற்கிறான்
அந்த இளவரசன்
கிழிந்து போனக்
கந்தை ஆடைகளை !
யாசகனாய் மாறிக் கொண்டு
சிந்தை இல்லை அவனுக்குச்
செல்வப் பகட்டுகளில் !
மாமேதைகள்
பொறுத்துக் கொள்கிறார்
பூசண உலகின்
போதா இம்சைகளை,
புல்லறிவாளர் புறஞ்சொற்களை,
அனுதின வாழ்வின்
அதிர்ச்சிக் கொடுமைகளை !

அவனைத் தேடும் பயணத்தில்
தியாகம் செய்கிறார்
செருக்குடையோர் தமது
பெருமைதனை !
கொடை அளிக்கிறார்
செல்வந்தர் தமது
சொத்து சுகங்களை !
தமக்குரிய உயிர் துறந்து
அர்ப்பணம் செய்கிறார்
வீராதி வீரர் !
ஆயிரக் கணக்கில்
பாக்களைப்
பாடுகிறான் கவிஞன்
அவனைத் தேடும் பயணத்தில் !
பாரெங்கும்
அவை எதிரொலிக்கும்
பரவிச் சென்று !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 29, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா