தாகூரின் கீதங்கள் – 53 உன்னினிய புல்லாங் குழலிசை !

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇசை முழக்கும் உன் புல்லாங் குழல்
இடி முழக்கத்தின் ஊடே !
அத்தனை எளிய கீதமா அது ?
இன்னிசைக்கு விழித்தெழுவேன் !
என் செவிகட்குத் திறன் அளி
உன்னிசையை அனுபவிக்க !
எளிய கீதங்கள்
எனைக் கவர மாட்டா !
மரணத்தின் போர்வைக்குள்
மறைந்துள்ள
முடிவில்லா வாழ்க்கை யோடு
உடன்பட நான்
மயக்கப்பட வேண்டும் !
இதய யாழின் பூரிப்போடு
மரணப் புயலைத்
தாங்கிக் கொள்வேன் !
ஏழு கடல்களும்
பத்துத் திசைகளும்
ஆட்டமிடும் அதிர்ச்சி நிலையில் !
சுமுக வாழ்வில்
எனக்கு விரிசல் உண்டாக
இதயக் கொந்தளிப்பில்
எங்கே அமைதி அரசாளுமோ
அங்கே என்னை
மூழ்க்கி விடு
வெகு ஆழத்தில் !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Ocotber 13, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா