தாகூரின் கீதங்கள் – 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எதை நோக்கிச் செல்கிறாய் ?

பிரமிக்க வைக்கும் பெரும் படகு
பிரபஞ்சமே !
எங்கு நோக்கிச் செல்கிறாய் ?
ஏற்றிக் கொள் என்னை !
வைத்துக் கொள்
உன் பாதுகாப்பு வீட்டுக்குள் !
உதவி யின்றித் தனியாய்
நீந்திட அஞ்சுவேன் !
கோடிக் கணக்கில்
கடந்து செல்கிறார் அப்பாதையில்
கால்நடைப் பயணிகள் !
அவரிட மிருந்து என்னைப்
பிரித்திட
விரும்ப வில்லை !
பரிதி வெளிச்சம், நிலவொளி
பாய்ந்திடும்
பாதை உள்ள போது
அவ்வொளி விட்டு விட்டு
அப்பாதை விலக்கி விட்டு
வீணாக நானேன்
வேறோர் வழி
தேடிச் செல்ல வேண்டும்
இருட்டிலே ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 25, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts