தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

அறிவிப்பு


நாள்: சனிக்கிழமை (14-03-06)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM – 2 PM – உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM – 7 PM – குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) – இலக்கியமும் குறும்படங்களும்

கவிஞர் திருமதி. வைகை செல்வி அவர்கள் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமக்கலம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. சரவணன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.truetamilans.blogspot.com

இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்

திரைப்பட ஒலிப்பதிவாளர் திரு. உதயகுமார் அவர்கள் ஒலித் தொழில்நுட்பம் குறித்து ஆர்வலர்களுக்கு வழிகாட்ட உள்ளார். மேலும் பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்த தனது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இவர் பணிபுரிந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “வெண்ணிலா கபடி குழு”

மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்

இம்மாதம், சென்னையை சேர்ந்த திரு. ராஜா அவர்கள் இயக்கிய “கழுவேற்றம்”, சென்னையை சேர்ந்த திரு. டென்சிங் ராஜா அவர்கள் இயக்கிய “கண்டு கேட்டு”, மற்றும் திரு. யாழினி முனுசாமி அவர்களின் “மின் நூலகம்” ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

6.30 PM – 7 PM – வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

Please forward this mail to your contacts

அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு