தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

அருண் & குணாதொடக்க விழா: சனிக்கிழமை (10-10-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

அன்பார்ந்த வாசகர்களே.

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட வட்டம் எனும் மாதந்திர நிகழ்வு தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் நடைபெற்றுள்ளது. சென்ற அக்டோபர் மாதம் கடற்கரையில் முப்பது ஆர்வலர்களுடன் தொடங்கிய இந்த இந்த வட்டம் இன்று சற்றே விரிவடைந்து நானூற்றி ஐம்பது உறுப்பினர்கள், முப்பது சிறப்பு அழைப்பாளர்கள், முப்பத்தி மூன்று குறும்படங்கள் திரையிடல், நான்கு குறும்படங்கள் தயாரிக்க உதவி, என தன் கிளை விரித்து பரவியுள்ளது. இந்த வெற்றிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவே முதன்மையான காரணம்.

முன்னரே நாம் சொன்னது போன்று பன்னிரண்டு குறும்பட வட்டங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்று வந்தது. இனி குறும்பட வட்டம் புதுப் பொலிவுடன் நடைபெற உள்ளது. தமிழ் நாடு அரசின் திரைப்பட இயக்க சட்டத்தின் கீழ், திரைப்பட இயக்கமாக பதிவு பெற்ற ஓர் அமைப்பாக தொடர்ந்து இயங்க உள்ளது.

எதிர் வரும் சனிக்கிழமை (10/10/09) தமிழ் ஸ்டுடியோ – குறும்பட வட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடக்க விழாவிற்கு, திரைப்பட இயக்குனர் திரு. அறிவழகன் (ஈரம் திரைப்பட இயக்குனர்) தலைமை தாங்க, திரைப்பட இயக்குனர் திருமிகு. நந்தினி (திரு திரு துறு துறு திரைப்பட இயக்குனர்) அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

திருமிகு. சிவகாமி ஐ. ஏ.எஸ். மற்றும் பத்திரிக்கையாளர் திரு. மாலன் அவர்கள் சிறப்புரை ஆற்ற, திரைப்பட பாடலாசிரியர் திரு. நா. முத்துக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்.

மேலும் இந்த தொடக்க விழாவில் இதுவரை குறும்பட வட்டத்தில் திரையிடப்பட்ட குறும்படங்களின் சிறந்த மூன்று மற்றும் ஒரு சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டு அதற்கான சான்றிதலும் வழங்கப்படும்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டிருக்கிறது. விழாவிற்கு உங்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

அழைப்பிதழ்

—————————
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
—————————


அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

Series Navigation

அருண் & குணா

அருண் & குணா