தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

கண்ணன்,


தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி எழுதியிருக்கிறார். அதாவது கால்டுவெல்லுக்கு முன்பு எங்கெல்லாம் ‘திராவிடம்” வந்துள்ளது என்று; அது சரிதான்; ஆனால் அதெல்லாம் ‘இனம்’ என்று பொருள் தரும்படியா வந்துள்ளது.

பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம் என்று பாரதத்தின் நிலப்பகுதிகளையல்லவா இரண்டகாப் பிரித்துக் குறிப்பிட்டார்கள்; இதில் இனம் எங்கே வந்தது அல்லது எப்போது வந்தது? கால்டுவெல்லுக்கு முன்பா பின்பா? அதைத் தெளிவுப்டுத்தினால் நல்லது.

இன்னொரு சுவாரஸ்யம்; இந்த பஞ்ச திராவிடத்தில் இன்றய குஜராத் பகுதியும் உண்டு!

கண்ணன், கும்பகோணம்.

Series Navigation