தமிழா எழுந்துவா!
கரு.திருவரசு

எடுப்பு
தமிழா தமிழா எழுந்துவா – அட
தரமாய் உரமாய் உயர்ந்துவா -தமிழா
தொடுப்பு
எழுந்த விதைதான் மரமாகும் – அட
கடந்த பலவும் கதையாகும் -தமிழா
கண்ணி
பணிவு என்பது பண்பாடு – என்றும்
படுத்துக் கிடப்பவன் கிழமாடு
துணிவு முதலெனச் செயலோடு – அட
எழுந்து நடந்துவா தமிழோடு -தமிழா
thiruv@streamyx.com