தமிழவன் கவிதைகள்-இரண்டு

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

தமிழவன்


வெயில் மறைந்து மழைவரும்
அறிகுறி தோன்றும் நாள்களிலும்
அவன் அருவருப்பு தெரிய தூரத்தில்.

எப்போதும் மலர்கள் கொண்டு
வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய
அவன் இலைகட்டியிருப்பினும்.

ஏப்பிரல்மாத மரண காலங்களில்
சர்ச்சில் அடக்கமுடியாமல்,
ஆலமரத்திலடியில் நின்று அழுபவன்.

பஸ்ஸில் புதுசட்டையுடன் யார்வந்து
இறங்கினாலும் பாரம் தூக்குவான்
ஒருமுறைமட்டும் வானத்தில் தெரிந்தான்.

மறுநாள் ஊர்எங்கும் இருள்
அவன் கண்ஒளி மட்டும்
நடைபாதையில் மழையுடன் மினுங்க.

எப்போதும்போல அவனது
வாரறுந்த செருப்பு.
கொட்டும்
சிறிது நேரத்தில் பேரிடியுடன் மழை.
—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்