தப்பும் வழி

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue


படு புத்திசாலிகலான 4 எம்பிஏ படிக்கும் நண்பர்கள் இறுதித்தேர்வுக்கு சற்று முன்னர் நன்றாக குடித்துவிட்டதானால் படிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்து எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும் தள்ளிப்போட முடியும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கை கால்கள், உடை எல்லாவற்றிலும் கிரீஸ், எண்ணெய் தடவிக்கொண்டு, தலை முடியை கலைத்துக்கொண்டு பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தார்கள். ‘அய்யோ டான் ‘, என்று கதறி டானின் முன்னர், தங்கள் சோகக்கதையைச் சொன்னார்கள். நேற்று இரவு நகரத்திலிருந்து காரில் வரும்போது, வனாந்தரத்தில், கார் டயர் பஞ்சராகி எந்தவித உதவியுமின்றி பல முயற்சிகளுக்குபின்னர் வெறும் காலில் நடந்து இப்போதுதான் வந்து சேர்வதாக புலம்பினார்கள். சில நாட்களுக்குப்பின்னர் தாங்கள் பரிட்சை எழுதுவதாக கேட்டுக்கொண்டார்கள். டான், சரி என்று ஒப்புக்கொண்டு 3 நாட்களுக்குப்பின்னர் பரிட்சை என்று சொன்னார்.

நண்பர்கள் விழுந்து விழுந்து படித்து மூன்று நாட்களுக்குப்பின்னர் டானிடம் சென்றார்கள். இது அசாதாரணமான கோரிக்கை ஆதலால், பரிட்சையும் அசாதரணமாகத்தான் இருக்கும் எனக் கூறி, நான்கு மாணவர்களுக்கும் 4 வெவ்வேறு பரிட்சை அறைகளில், ஒரே கேள்வித்தாளை கொடுத்து பரிட்சை வைக்கப்போவதாகச் சொன்னார்.

கேள்வித்தாளில் முதல் கேள்வியாக 5 மதிப்பெண்களுக்கு ஒரு எளிய கேள்வி இருந்தது. மாணவர்கள் வெகு எளிதில் அதனை முடித்துவிட்டார்கள். அடுத்து 95 மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி இருந்தது

‘எந்த டயர் ? ‘

***

Series Navigation

செய்தி

செய்தி