This entry is in the series 20091009_Issue

ஜனா கே


நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும்
தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது
தேவை புதிய நினைவுகள்

கிளம்பி போகமுடியாமல் காலெங்கும்
அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின்
நூலாம்படைகள்

சுவர்களில் வழியும் வக்கிரங்கள்
துரத்துகின்றன துர்நாற்றமென

தப்பிக்கும் வழிகள் தேடி
ஓடி அலைந்த இடமெல்லாம்
தனிமையின் வசிப்பிடம்.
தனிமை வசிக்காத இடமென்று
ஏதும் இல்லையென
அந்த அறையை
ஒழுங்கு செய்தேன்.

Series Navigation