This entry is in the series 20040415_Issue

புதியமாதவி


====

உங்கள்
டாலர்க் கனவுகள்
இந்தியக் குடிசையை
இன்னும்
திறக்கவில்லை

திடார்த் திருப்பங்கள்
உங்களுக்குப்
பொழுதுபோக்கு
அதுவே
எங்களுக்கு
வாழ்க்கை

நட்சத்திர இரவுகளில்
உங்கள் பாடல்
நாடோடியாய் திரிகின்றது
எங்கள் கூத்து.

உங்களிடம்
உங்கள் முகமில்லை
உங்கள்
முகங்களில்
எங்கள் முகவரியில்லை.
எங்கள் வலிகளில்
உங்கள் கனவுகள்
கலைந்துவிடுமா ?
தூங்கும் கனவுகளைத்
தட்டி எழுப்பலாம்
தூங்குவதுபோல
கண்மூடிக்
காணும் கனவுகளைக்
கலைக்கமுடியுமா ?

அன்புடன்,

புதியமாதவி
—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation