ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
இராம. வயிரவன்

குழந்தையே!
வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டு
விரல்களை நீட்டிக் கொண்டு
உலகம்; – உதறி விடு!
விளக்கை அணைத்து விடுகிறேன் நான்
என்பதைத் தவிர
வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை
முடிந்தால் உன் ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு
மீண்டும் பிற!
நீ எதுவானாலும் எனக்குச் சரி!
rvairamr@gmail.com