‘சோ ‘ எனும் சந்தனம்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

வரதன்


—-

வணக்கம்.

சோவைப் பற்றிய சிலரின் அரிப்பு நிறைந்த துவேஷங்களையும், பதிலாக சிலரின் அவரைப்பற்றிய உயர்வு எண்ணங்களையும் படிக்க நேர்ந்தது.

தமிழக மக்களின் வாழ்வின் சோவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் , நல் செயல்பாடுகளையும் நினைத்துப் பார்த்தாலே அவரின் தரம் புரியும்.

சோவிற்கு திராவிடக் கட்சிகளின் மீதோ அல்லது பிற்படுத்தப்பட்டவர்கள் மீதோ எந்த மனமாச்சரியமும் கிடையாது.

உதாரணமாக அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பின் சோவின் ‘மை டியர் பிரம்ம தேவா ‘ பேச்சைப் படித்தாலே புரியும், அண்ணா அவர்களின் மீது அவர் கொண்ட மரியாதை & அன்பு பற்றி.

அவரது பத்திரிக்கையில் கூட அற்புத எழுத்தாளரான ‘வண்ண நிலவனுக்கு ‘ பிரதான இடம் இருந்தது. அது தமிழ் மேல் அவருக்கு உண்டான பற்றைக் காட்டியது.

ஊர்பணத்தைக் கொள்ளையடித்து உல்லாச வயாகரா வாழ்க்கை நடத்தியது கிடையாது.

தம்ழர் தலைவன் என்று சொல்லி, தனது குடும்பத்தை ராஜா குடும்பமாக மாற்றத் தெரியாது.

அர்த்தமற்ற சினிமா எடுத்து விட்டு, அது ஓட தம்பிகளின் வசூல் காட்டியது கிடையாது.

பிறாமணவர்களின் எதிர்ப்பாளராகக் காட்டிவிட்டு, பிள்ளவாள், முதலியார் என்று கதாபாத்திரங்கள் ஏற்படுத்திக் கேவலப்படுத்தியது கிடையாது.

‘மலையாளத்தான் ‘ ‘கன்னடிகா ‘ என்று அடுத்தவரைக் கேவலகாமப் பேசியது கிடையாது.

சினிமா கவர்ச்சியால் எம்.ஜி.ஆர் ஊரை ஏமாற்றுகிறார் என்று சொல்லி விட்டு, தனது மகனை யோக்கியமாகக் காட்ட, நா.பா -வின் ‘குறிஞ்சி மலர் ‘ தொடரில் அற்புத ‘அரவிந்தன் ‘ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மக்களிடம் ஏதோ புத்த சிகாமணி போல் காட்டியது கிடையாது.

தனது பத்திரிக்கையில், அனைவரையும் கேவலமாக மூன்றாந்தர தமிழில் எழுதி விட்டு தன்னை முத்தமிழ் வித்தகராக காட்டிக் கொண்டது கிடையாது.

உதய சூரியனின் வெப்பத்தில் புண்ணாகிப் போன தமிழர் உடல் நலம் காப்பாற்றி வரும் சந்தனம் ‘சோ ‘

வரதன்

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்