This entry is in the series 20020629_Issue


தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ் மாவு –1/2 கப்

கடலை மாவு –1/2கப்

ஓமம் –1டாஸ்பூன்

சோடா உப்பு –1/4 டாஸ்பூன்

அரிசி மாவு –2 டாஸ்பூன்

எண்ணெய் –தேவையான அளவு

உப்பு –தேவையான அளவு

மிளகாய்த்தூள் –1 1/2 டாஸ்பூன்

முட்டை –5

சோயா பீன்ஸ் மாவு, அரிசி மாவு, கடலை மாவு, சோடாஉப்பு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு இவற்றுடன் சிறிது சூடாக்கிய எண்ணெய் ஒரு கரண்டியும் ஊற்றி பஜ்ஜி மாவு போல் நீர் ஊற்றி கரைக்க வேண்டும். முட்டையை வேகவைத்துக் கொள்ளவேண்டும். பின் ஒவ்வொரு முட்டையையும் நான்கு பாகங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்து சூடாக்கப்பட்ட எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். சூடான சோயா முட்டை பஜ்ஜி ரெடி.

Series Navigation