சொல் எரித்த சொல்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

ஹெச்.ஜி.ரசூல்உன்னிடம் மிச்சமிருக்கிறது
என் விரல்களும் கண்களும்
தொடாத சொல்.
பேச்சுக்களின் துவக்கமே
அவரவர்க்கான சொல்லை நெய்தது.
பேச்சால் அமைதி நிலவுமென்பது
பொய்யாய் போனது.
இரைச்சல்களின்
கூக்குரல்களின் வன்மங்கள்
பகலற்ற இரவுகளையும்
கிழிபடச் செய்கின்றன.
பேச்சு கனத்து
அணுகுண்கு வெடிப்பை செய்தபோது
சொல்லை எரித்து முடித்த சாம்பலில்
மெளனம் மிஞ்சியது.
இரவென்றும் பகலென்றும் பாராமல்
உதடுகளின் விளிம்பில்
முத்தமிட்டு செல்லும் காற்றுக்கு
பேசா அனுபூதி நிலை.
வெளிமீறி நிற்கும்
இருளின் துவக்கத்தில்
முடிவொன்று தொடரும்
இக்ரஹ்வில் துவங்கியது
அல்லாஹ்வின் சொல்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்