சொல்லுவதெல்லாம்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

கு.முனியசாமி


காதலின் வலியைத்
தாடி சொல்லும்
காவிரிப் பெருக்கை
ஆடி சொல்லும்
காற்றின் திசையை
நாணல் சொல்லும் – இளம்
கன்னியர் மனதை
நாணம் சொல்லும்…

வானின் அழகை
மேகம் சொல்லும்
வறுமையின் கொடுமை
தேகம் சொல்லும்
தந்து உண்பதை
காகம் சொல்லும் – தண்ணி
தராமை என்பதை
கன்னடம் சொல்லும்…

அடக்கம் என்பதை
ஆமை சொல்லும்
அஞ்சாமை, வீரம்
ஆண்மை சொல்லும்
இருப்பது குறையென
ஆசை சொல்லும் – நிலை
இல்லமை நிலையென
ஞானம் சொல்லும்…

பூக்களின் மேன்மை
வாசம் சொல்லும்
புன்னகையோ கோடி
நேசம் சொல்லும்
அன்னையின் வார்த்தைகள்
பாசம் சொல்லும் – ஜன்னல்
கம்பிகள் ஆயிரம்
காதல் சொல்லும்….
———————–

gms@globaltrustbank.com

Series Navigation