சென்ரியு – நகைப்பாக்கள்
மாமதயானை

வழிப்போக்கனின்
பசி போக்குமா……
உணவு பற்றிய பாடல்.
தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம்;;….
சாத்தானின் ஞாபகம்.
கனவில் தினமும்
தோள் சாய்கிறாள்….
விவகரத்தான மனைவி.
தவழ்கிறது குழந்தை
சிரிக்கிறது குழந்தை….
இறந்த பிறகும் மனதில்.
அதிவேகமாய் ஓடினான்
ஓட்டபந்தயவீரன்;;;;;;;;;…….
அடுத்தவீட்டுப்பெண்ணுடன்.
– மாமதயானை
manisen37@yahoo.com