சூரியனின் சோக அலறல்
அவதானி கஜன்

————————————–
நானா உதிப்பது நானா மறைவது
கானா படித்து காலம் கழிக்கும் மனிதனே
தானாக சுற்றுது தரணி என்னையும் சுற்றுது
மானாக மீனாக மரமாக எதற்கும் என்நன்மையே
தையில் மட்டும் தருவாயோ வாழ்த்து
கையில் பணிகளென கைகழுவலோ – வாழ்க்கைத்
தையல்களில் தரித்து இருக்குது துக்கம்
மையல் கொண்டு மயங்குவது முறையோ
கடுகளவில் நீயங்கு கதிரவனாய் நானிங்கு
இடுகின்றாய் அசுத்தம் இதனால் அவலம்
வடியும் என்னொளியில் வருகின்றது நஞ்சொன்று
மடியும் உயிர்களுக்கு மறைமுக காரணம் நீ
——————————————————————
avathanikajan@yahoo.ca