சு.ரா வுடனான கலந்துரையாடல் மேலும் கிளர்த்தும் என்ணங்கள்

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

மலர் மன்னன்


‘திண்ணை ‘யில் சு.ரா வுடனான கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக மட்டுமின்றிப் பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டுவதாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அவர் இருக்கும்போதே இது வெளியாகி, அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் நான் உற்சாகத்துடன் சில விஷயங்களைச் சொல்லியிருப்பேன்.

மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கருத்துகளைக் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் படியாகச் சொல்பவர் சுந்தர ராமசாமி. இடைவிடாது சிரித்துவிட்டு அப்புறந்தான் யோசிக்கத் தொடங்குவோம்! அவருடன் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்த இரவுகள் நினைவுக்கு வந்து மனதைச் சங்கடப்படுத்துகின்றன.

அங்கு நடந்த கலந்துரையாடலில் கருணாநிதிஎம்ஜிஆர் கொள்கை பற்றியெல்லாம் பேசியிருக்கிறீர்கள். சு.ரா உங்களனைவரையும் எப்படியெல்லம் சிரிக்கவைத்திருப்பார் என்பதை என்னால் யூகித்துக்கொள்ள முடிகிறது.

பத்திரிகைத் துறையைச் சேர்ந்த ஒரு பார்வையாளன் என்ற முறையில் கருணாநிதி, எம்ஜிஆர் இருவர் பற்றியும் ஓரளவு கூடுதலான தகவல்களைச் சார்பு எதுவும் இன்றி என்னால் தரமுடியும்.

முதலில் கருணாநிதிக்கு என்று ஒரு கொள்கை இருக்குமானால் அது அவரே பதிவு செய்திருக்கிற மாதிரி பதினான்கு வயதிலேயே ஒரு கையில் முஸ்லிம் லீக் கொடியும் மறு கையில் திராவிடக் கழகக் கொடியுமாகத் தெருக்களில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் ‘ என்றும் ‘திராவிட நாடு திராவிடருக்கே ‘ என்றும் கூவிக்கொண்டு போனது. முளையிலேயே தான் பிறந்து வளரும் தேசத்தின் மீது அவருக்கு அவ்வளவு பக்தி! மற்றபடி அரசியல்

பொருளாதார அடிப்படை ஏதுமற்ற, வெள்ளைக்காரன் கற்பித்த ஆரியதிராவிட அடிப்படையிலான, பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சாதகமான திராவிட இயக்கக் கோட்பாடுதான் எஞ்சும். ஈ.வே.ரா ரஷ்யாவுக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து மார்க்சியம் என்றால் இன்னது என்று தெரியாமலேயே கம்யூனிசத்தை ஆதரித்துப் பேசத் தொடங்கியதால் பொதுவுடைமை என்பதைத் தங்கள் பொருளாதாரக் கொள்கைபோலப் பேசத் தலைப்பட்டவர்கள், அவர்கள். மற்றபடி அதில் எல்லாம் அவர்களுக்குத் தெளிவான கருத்தோ சித்தாந்தப் பிடிப்போ கிடையாது. பொருளாதாரம் படித்த அண்ணாவுக்கே பொருளாதார ரீதியிலான சிந்தனை இல்லாதபோது, கருணாநிதி போன்றவர்களிடம் அதனை எதிர்பார்க்கக் கூடாதுதான். ‘எங்கள் இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல ‘ என்று சொல்லிக் கொண்டு சமூக சீர்திருத்தம் என்ற பெயரால் பிராமண துவேஷப் பிரச்சாரம் செய்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

அண்ணாவும் திரைப் படத் துறையில் ஈடுபட்டார், கருணாநிதியும் அதேமாதிரி ஈடுபட்டார். ஆனல் இருவருக்கும் இதில் வித்தியாசம் உண்டு. அண்ணா (அண்ணாதுரை என்று சொல்ல மனம் வரவில்லை. அந்த அளவுக்கு அவரது அன்பால் கட்டுப்பட்டவன்இன்றளவும்! அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் ?ிந்து, எக்ஸ்பிரஸ், மெயில் உள்ளிட்ட மூத்த பிராமண நிருபர்களும் அரசின் தலைமைச் செயலரும் தமிழக அரசின் கடைசி ஐசிஎஸ் கேடருமான சிவராமகிருஷ்ணன் அவரும் பிராமணர்! ஆக எனக்குத் தெரிந்து அனைவருமே அண்ணாவை, அவரது இனிய சுபாவத்தாலும் மனிதாபிமானத்தாலும் ஈர்க்கப்பட்டு ‘அண்ணா ‘ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தோம்! ) தமக்குக் கிடைத்த அழைப்பைப் பயன்படுத்தித் தமக்குச் சரியென்றுபட்ட சமூக சீர்திருத்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்பாகத் திரைப்படத் துறையில் இறங்கினார். கருணாநிதியோ சினிமாவுக்கு வசனம் எழுதுவதை ஒரு தொழிலாக மேற்கொள்ள முடிவு செய்து முட்டி மோதி

மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர்ந்தவர். திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு முழு நேரமும் அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்கிற கொள்கை உத்வேகம் ஏதும் தொடக்கத்தில் அவருக்கு இருந்ததில்லை. அப்படி இருந்திருக்குமானால் ஈவெராவின் குடியரசு அலுவகத்திலேயே சம்பளம் இல்லாமல் வெறும் சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும் அல்லவா (அண்ணாத்துரைக்கு 45 ரூபா சம்பளம், கருணாநிதிக்கு வெறும் சாப்பாடு மட்டுந்தான் என்று ஈவெரா அவர்களே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்) ? ஆகையால் கருணாநிதிக்கும் கொள்கைப் பிடிப்பு என்பதாக ஒன்று இருந்ததாகக் கொள்ளமுடியாது. மேலும், ஈவெராவுடன் கருத்து மாறுபட்டு அண்ணாவும் அவரால் கவரப் பட்டவர்களும் தி முக வைத் தொடங்கியபோது கருணாநிதி அந்தக் குழுவில் இல்லை. தி.க. விலேயே தங்கிவிட்டார். கட்சியில் காற்று அண்ணா பக்கம் வீசுகிறது என்பதைக் கண்டுகொண்ட பிறகுதான் கருணாநிதி திமுகவுக்கு வந்து சேர்ந்தார். அப்படி வந்த பிறகும் அவர் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருந்தது. திராவிட இயக்கத்திற்குக் கொள்கை என்று பிரமாதமாக ஏதும் இல்லாவிட்டாலும், இருக்கின்ற மிச்ச சொச்சத்தில்கூட கருணாநிதிக்கு அந்த அளவுக்குத்தான் ஈடுபாடு இருந்தது.

எம்ஜிஆரை எடுத்துக் கொண்டால் அவர் காலத்து காந்தி மகாத்மியம் காரணமாகக் கொள்கை விசாரம் என்கிற சிரமம் ஏதும் இல்லாமல் பேதமைத்தனமாக தெய்வ நம்பிக்கையும், தேசிய என்ணமுமாக இருந்து பின்னர் கருணாநிதியின் வற்புறுத்தலால் அரை மனதுடன் திமுகவுக்கு வந்தவர். அண்ணாவின் இனிய பண்புதான் அவரை திமுகவில் நிலைகொள்ளச் செய்தது. பிறகு அவர் மக்களிடையேயும் கட்சியிலும் தன் செல்வாக்கை உறுதியாக ஊன்றிக்கொள்ள சினிமாவைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். பிற்பாடுதான் நெய்க்கு தொன்னையா, தொன்னைக்கு நெய்யா என்கிற மாதிரி திமுகவால் எம்ஜிஆரா, எம்ஜிஆரால் திமுகவா என்றாகிவிட்டது.

திமுகவில் சேருவதா என்று அவரது எண்ணம் ஊசலாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு அப்பொழுது ஜயப் பிரகாஷ் நாராயணும் கிருப்லானியுமாக இணைந்து செயல்படத் தொடங்கியிருந்த பிரஜா சோஷலிஸ்டு கட்சியில் ஈடுபாடு வந்தது. ஜயப்பிரகாஷள்ம் மற்ற சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களும் சென்னை வந்தபோது விருந்துபசாரம் செய்தார். அச்சமயம் கல்கிக்கும் பிரஜாசோஷலிஸ்டில் ஈடுபாடு ஏற்பட்டிருந்ததால் அதுவும் எம்ஜிஆரை ஜயப்பிரகாஷ் பக்கம் ஈர்த்தது. ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்தவரை அன்ணாவின் கவர்ச்சியும் அவர் தொங்கிய கட்சியும் அதிக கவனம் பெற்று வந்ததால் திமுகதான் தனக்குப் பயன்படும் என்று அதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கியபின் தமது கட்சிக் கொள்கை என்று ‘அண்ணாயிசம் ‘ என்பதாக ஒன்றைச் சொல்லி அனைவருக்கும் அருமையான நகைச் சுவை விருந்து அளித்தது தெரிந்த சங்கதிதான். அவருடைய கொள்கை மிகவும் எளிமையானது. ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அதற்காகவே சமுதாயத்தில் நிரந்தரமாக ஏழைகள் இருந்தாக வேண்டும் என்று விரும்புகிற அளவுக்கு அவர் குரூரமானவராக இருக்கவில்லை என்றாலும், ஏழைகள் என்பதாக ஒரு பிரிவு சமுதாயத்தில் எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கும், அதற்கு அவ்வப்போதும் அப்போதைகப்போதும் மகிழ்ச்சியடையுமாறு ஏதேனும் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆகப் பெரிய பொருளாதார சித்தாந்தம்! ஆனால் காமராஜர் போலவே நடைமுறைக்கான பிரத்தியட்ச அறிவும் இருந்ததால் சில சரியான முடிவுகளையும்

அவரால் எடுக்க முடிந்தது. டாக்டர் பா. நடராஜன் போன்றவர்களிடம் பொருளாதாரம், நிதி ஆகியவைபற்றி அவர் கேட்டுத் தெரிந்துகொள்வதையும் கண்டிருக்கிறேன்.

எம்ஜிஆருக்காவது ஏழை பாழைகளுக்கு அவர்களின் ஓட்டுகளுக்காக என்றில்லாமல் மனசாரவே அவ்வப்போது ஏதாவது உதவிசெய்துகொண்டிருக்க வேண்டும் என்பது கொள்கையாக அதனை ஒரு கொள்கை என்று பாமரத்தனமாகக் கூறமுடியுமானால், இருந்ததெனலாம்.

மாநில சுயாட்சி, அனைத்து மொழிகளுக்கும் ஆட்சிமொழி அந்தஸ்து என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தாலும், அதுபற்றிய வரையறுக்கத்தக்க கொள்கை எதுவும் கருணாநிதிக்கு இல்லை. நாட்டு நலனுக்கு மிக அவசியமான பொருளாதாரக் கொள்கையும் இல்லை. அப்படி இருக்குமானால் இப்போது அவருக்கு மத்தியில் இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்தி பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குத் தூண்டியிருக்க மாட்டாரா ? இன்ன இலாகாதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கேட்டுவாங்குவதில் இருந்த வேகத்தில் கொஞ்சமாவது இதில் காட்டியிருப்பார் அல்லவா ? கர்னாடக மாநிலத்துடன் காவிரி தாவா இருப்பதால் நீர்ப்பாசனத் துறை வேண்டும் என்று கேட்கவில்லை என விளக்கம் அளித்தார் மிகவும் நேர்மையாக. இதே நேர்மையைத் தகவல் தொழில் நுட்பம், கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளைப் பிடிவாதமாகக் கேட்டு வாங்கியதிலும் காட்டியிருக்கலாம் அல்லவா ?

கருணாநிதியின் தமிழ் பற்றியும் சு.ரா. சான்றிதழ் வழங்கியிருப்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. கி வா ஜ எழுதிய பயப்படாதீர்கள் என்ற நூலையும், ஏற்கனவே தமிழில் உள்ள திருக்குறள் உரை, புறநானூறு முதலியவற்றின் உரைகளையும் வைத்துக் கொண்டு தனது பாணியில் மறுபடைப்பாக எழுதியதற்குமேல் அவருக்குத் தமிழ்த் தேர்ச்சி ஏதும் இருப்பதாக

நிரூபணமாகவில்லை.

சமூகம், இலக்கியம், பொதுவுடைமைக்கு மாற்றான சமூகநலப் பொருளாதாரம், குறிப்பாக சாவர்கரின் ?ிந்துத்துவக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் போன்ற ஆழமான விஷயங்களைப் பற்றியே சு.ராவும் நானும் விவாதித்துக் கொண்டிருந்துவிட்டதால்தான் கருணாநிதிஎம்ஜிஆர் விவகாரங்கள் எங்கள் பேச்சில் விடுபட்டுப்போயின போலும்!

முற்றும்

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்