சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

வ.ந.கிாிதரன் –


இருண்ட அடிவானை நோக்குவீர்.

ஆங்கு

இலங்கிடும் சுடர்பெண்கள்

சொல்லிடும்

இரகசியம் தானென்ன ?

புாிந்ததா ?

சூன்யத்தைத் துளைத்து

வருமொளிக் கதிர்கள்.

‘அஞ்சுதலற்ற கதிர்கள்.

அட! அண்டத்தே யார்க்கும்

அஞ்சுவமோ ?

ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்

ஓடியே வந்தோம்.

வருகின்றோம்.வருவோம்.

காலப் பாிமாணங்களை

வெளியினில்

காவியே வந்தோம்.சூன்யங்கள்

கண்டு சிறிதேனும்

துவண்டுதான் போனோமோ ?

அஞ்சுதலற்ற நெஞ்சினர்

எம்முன்னே மிஞ்சி நிற்பவர்

தானெவருமுண்டோ ?

தொிந்ததா ? விளக்கம்

புாிந்ததா ? ‘

நோக்குங்கள்! நோக்குங்கள்!

நோக்கம் தான்

தொிந்ததுவோ ? சுடர்ப்

பெண்கள் பகரும்

இரகசியம் தான்

புாிந்ததுவோ ?

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்