சினிமா — Eve and the fire horse

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

T G K


அமெரிக்காவில் குடிபெயர்ந்த ஒரு சீன குடும்பத்தில், இலவசமாக வந்த “BIBLE” புத்தகம் ஏற்படுத்தும் பாதிப்பு.
அமெரிக்க வாழ் ஒவ்வொரு பிற நாட்டின , பிற மத மனிதர்கள் பார்க்க வேண்டிய படம்.

உலகின் பல பகுதிகளிலும் இயேசு வருகிறார் என்ற கோஷமுடன், அப்பாவி முகங்கள் இலவசமாக பைபிள் விநியோகிப்பதும், நற்கருணை வீரன் என்ற சிறார்களை வசீகரிக்கும் வண்ணப்புத்தகமும், குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் என்று பெரிய பெரிய குழாய் ஸ்பீக்கர்களுடன் வாத்திய முழக்கத்துடன் இரு வேறு மொழியில் மாறி மாறி பேசும் மத வேகப் பிரச்சாரம் என பன்முகம் நாமும் பார்த்திருக்கிறோம்.

அதில் சிதிலமாகிப்போன பல குடும்பங்களின் உருவாய் ஒரு அமெரிக்கா நாட்டிற்கு குடிபுகுந்த இரு அழகு வண்ணத்துப்பூச்சிகளின் நாசமாகிப்போன சோகச் சித்திரம்.
= வீட்டில் பாசம் கொட்டிய பாட்டி இறந்த பின் சோகமாகிப் போன இரு 9, 11 வயது பெண் சிறுமிகளுக்கு பாட்டியைப் பற்றி ஏக்கம்…
– அதில் ஒருத்தி 60 ஆண்டிற்கு ஒரு முறை வரும் சீன வருடமான “Fire Horse” ல் பிறந்தவள்.
> அந்த வருடம் பிறக்கும் குழந்தைகளை ஆற்றில் அமிழ்த்தி அர்பணிப்பது சீன வழக்கமாம். ஆனால் அம்மாவோ தன் குழந்தையை அப்படியன்றி வளர்க்கிறாள்.
– அந்த ரம்மியமான வீட்டிற்கு கதவு தட்டி பைபிள் இலவசமாக வருகிறது. முதலில் வேண்டாம் என்றவர்கள், இலவசம் என்றவுடன் பெற்றுக் கொள்கிறார்கள்…
அதன் பின் சம்பவங்கள் விரிகின்றன…
குழந்தைகளுக்கு கிறிஸ்துவ மதத்தில் வசீகரம் வருகிறது…..
அக்கா, தங்கையை குளியல் தொட்டியில் அமிழ்த்துகிறாள் – பிரேயர் செய்து கொண்டே………

நமக்கும் பல்பரிமாண சிந்தனைகளை தூண்டுகிறது படம்……..

…பாருங்கள் படத்தை……….

உலகமெல்லாம் தற்போது கலந்தாலோசிக்கப்படும் மதத்தீவிரவாதத்தின் வீரியம் பற்றிய விவாதம் அர்த்தமானது எனப் புரியும்…

TGK

ஒரு பகிர்தல்:::

மேலும் இந்திய வம்சாவளி மனோஜ் நைட்டின் ” wide awake” படத்தின் பார்வைக்கும், இந்த சீன இயக்குனரின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் …. அப்பப்பா…….
இரண்டும், தாத்தா பாட்டி மரணம் ஒட்டி பேரன், பேத்தி மனதில் எழும் எண்ணங்கள்…
ஆனால், பார்வையின் கோணமோ…. சீன இயக்கனருக்கு ஒரு வந்தனம் சொல்கிறது….
கட்டாயம் , wide awake” படத்தையும் பாருங்கள்…….


kgovindarajan@gmail.com

Series Navigation