சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

வாஸந்தி


ஒரு சாம்ராஜ்ஜாயத்தின் குடிமகன் என்ற நிலையில் பேசுகிறேன். தன் மன்னனை

விமர்சிக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட அடிமை என்ற நிலையில் பேசுகிறேன்.—- நியூ யார்க்கில் போருக்கு எதிராக அருந்ததி

ராய் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

உலகத்து எல்லா ஜனநாயக அமைப்புகளும் தங்ககளது பலத்துக்கு அஸ்திவாரமாக நினைப்பது நாட்டின் அரசியல் சாஸனத்தை. சாஸனம்

வரையப்படவேண்டியது அவசியமானது. பிரஜைகளின் உாிமைகளுக்கு அது ஒன்றே உறுதி அளிப்பது. 1215-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, இங்கிலாந்து நாட்டின் அன்றைய கொடுங்கோல் மன்னன் ஜானின் ஆட்சியை எதிர்த்துக் குரல் எழுப்பிய பாதிக்கப்பட்ட மக்கள், மாக்ன கார்ட்டா [MAGNA CARTA]என்ற 63 ஷரத்துகள் கொண்ட சாஸனத்தில் மன்னனிடமிருந்து கையெழுத்து வாங்கிய சாித்திர முக்கியத்துவம் பெற்ற சம்பவம் ஜனநாயக மரபின் முன்னோடியாகப்பார்க்கப்படுகிறது. மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் என்பதைப்பற்றின சிந்தனையே புகாத மன்னராட்சி காலத்தில், அரசனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல என்பதையும், பிரஜைகளுக்குக் கருத்துச் சுதந்திரம் என்பது மிக அவசியமானது என்பதையும் ஒரு கொடுங்கோல் மன்னனைப் ஏற்கவைத்த ,செயல்படுத்த வைத்த சாஸனம் அது.பின்னால் வரையப்பட்ட பிாிட்ஷ் சாசனத்தின் அடித்தளம் அது. அதன் நகலில்தான், இருபதாம் நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பல அறிவு ஜ ‘விகளால் மிக கவனமாக வரையப்பட்டது நமது பாரதத்தின் சாஸனம்..அதுவே நமது ஜனநாயகத்தின் பலம். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அதுவே எளியோாின் பாதுகாப்புக் கவசமாக இருக்கவேண்டும். இல்லாமல் போவது, சாஸனத்தின் குறையல்ல. அதைப் புாிந்துகொள்ளாமல் ஆட்சியைப் பிடிக்க வரும், துஷ்பிரயோகிக்கும் அரசியல் கலாச்சாரப் போக்கே காரணம்..

நடிகர் விஜயகாந்துக்கும் பா.ம.க தலைவர் ராமதாசுக்கும் இடையே கிளம்பிய சர்ச்சை இப்போதைக்கு ஓய்ந்திருந்தாலும் அது ஜனித்ததை ஆராய்வதே சோர்வைத் தருகிறது.

ஜனநாயகத்தில் ஒரு கருத்தை இன்னின்னார் சொல்லலாம் இன்னார் சொல்லக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. பாரதத்திற்குச் சுதந்திரம் வந்து விட்டால் எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்றார் பாரதி.மன்னராகும் பேராசை எமக்கு இல்லை ஐயா. ஒரு சாதாரணப்பிரஜையாக இருக்க ஆசைப்படுகிறேன்.எந்தத் தொழிலை செய்யவும் எனக்கு உாிமை உண்டு. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் நம் முன்னோர்கள்.உங்களுக்கு[மத போதகர் மாதிாி பேசினாலும்] தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதனால் நடிப்புத் தொழிலுக்கு நான் வந்தால் அது நீசத் தொழில் என்று சொல்வது நியாயமில்லை. நடிகன் என்பதால் எனக்கு அரசியல் ஞானம் இல்லை என்ற முடிவுக்கு வருவது எந்த அடிப்படையில் என்று எனக்குப் புாியவில்லை. உமக்கு தமிழ் நாட்டு அரசியல் சாித்திரமே தொியாது போலிருக்கு. அரசியல் பிறந்ததே சினிமாவில்தான் இங்கு.

அந்தக் கண்றாவியைத் தான் மாற்றப்பார்க்கிறேன் என்கிறீர்களோ ? ஆனால் சினிமாவைவிட மோசமான வன்முறை அரசியலால் மாற்றப்பார்த்தீர்களானால், நீங்கள் எப்பாடுபட்டோ ஏற்படுத்திவரும் அடித்தளம் ஆற்று மணலாய் உங்கள் காலுக்கடியிலேயே சாிந்து புதை குழியாகிவிடும்..கூட்டணி நண்பர்கள் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள் இப்போது..சமயம் வரும்போது காலை வாாி விடுவார்கள். அரசியலில் நிரந்தர நண்பர்கள் கிடையாது என்பது உங்களுக்குத் தொியாததா என்ன ? மத்திய அரசியல் அரங்கில் தமிழ் நாட்டுப் பிரதினிதிகள் பலர் நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை.வாி செலுத்தும் இந்த நாட்டுப் பிரஜை நான். எனது அதிருப்தியைத் தொிவிக்க எனக்குச் சுதந்திரமில்லையா ? என் கருத்து உங்களுக்கு ஏற்கவில்லை என்றால்

பத்திாிக்கையிலோ தொலைக் காட்சியிலோ உங்கள் பதிலைத் தொிவியுங்களேன் ? நான் நடிகன் என்பதை ஒரு குற்றச்சாட்டாகச் சொல்வானேன் ? என் மொழியை ஜாதியை சுட்டிக்காட்டுவானேன் ? இது அரசியல் சித்து வேலை இல்லையா ? என் மன்றங்களை உங்கள் கட்சிக்காரர்கள் தாக்குகிறார்கள். ஐயா- படித்தவரான நீங்களே இதற்கு ஊக்கமளித்தால்,

படிக்காத, வேலையற்ற , ஒரு பிம்பத்தை நம்பி வாழும் ரசிகர் படை தன் கோபத்தை எப்படி வெளிப்படுத்தும் ? ஏன் இந்த வன்முறை ? உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை என்பதை என்னால் நம்பமுடியாது. தேர்தலுக்குத் தேர்தல் உங்கள் பலம் அதிகாித்து வருவதைக் காட்டிவருகிறீகள்.- ஜனநாயக மரபில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டால் உங்களுக்குக் காலப்போக்கில் நஷ்டம். பயமுறுத்தல் என்ற ஆயுதத்தை நம்பி ஆட்சி செய்தவன் தான் மன்னன் ஜான். அவனே மாக்ன கார்ட்டாவில் கை ஒப்பமிடவேண்டிவந்தது.

சினிமா கலாச்சாரமும் நடிகர் மன்றங்களும்தான் தமிழ் நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டது என்று மிக ஆவேசத்துடனும்

உத்வேகத்துடனும் சொல்லிவருகிறீர்கள். அது உண்மை என்பதை யாரும் மறுக்கமுடியாது.நீங்கள் அறிவாளி. ரசிகர் மன்றங்கள் தோன்றுவதன் காரணத்தை ஆராயுங்கள். E.J.Hobsbawn என்ற சமூகவியலாளர் சமூக விரோதிகள் உருவாவதன் காரணத்தைச் சொல்வது தமிழ் நாட்டு[ ரசிகர் மன்றங்களுக்கும்]க்குப் பொருந்தும்- ‘ மக்கள் நீதி இல்லாமல் வாழமுடியும் பொதுவாக அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் நம்பிக்கை [hope] இல்லாமல் வாழமுடியாது. ‘ சினிமா நடிகர்களின் பிம்பங்கள் எம்.ஜா.ஆர். காலத்திலிருந்து

நிதர்சன வாழ்வு கொடுக்காத நம்பிக்கையைப் பாமரர்களுக்குக் கொடுத்து வருகிறது. எம்.ஜி.ஆாின் அரசியல் வெற்றி ஒவ்வொரு நடிகனின் கனவை வளர்க்கிறது.அதன் சாத்தியகூற்றினால் மன்றங்கள் ஆதாயம் தேடப்பார்க்கின்றன. இவை எல்லாம் ஜனநாயகத்துக்கு விரோத மானவை என்று நீங்களோ நானோ சொல்லமுடியாது..ஒரு படத்தை ஓடவிடாமல் தடுப்பது குற்றம்.ஒரு நடிகனை மட்டும் அது தாக்காது. ஒரு தொழிலை நம்பியிருக்கும் சமூகத்தையே தாக்கும்.அதில் உங்களது வாக்காளர்கள் இருப்பார்கள்.

ஒரு விஷயம் நீங்கள் மறந்து விட்டார்கள்.மக்கள் உள்ளபடிக்கே மாறிவருகிறார்கள். ரஜானி சக்தி என்பது ஒரு ஸைபர் என்று அடுத்தடுத்த தேர்தல்கள் நிரூபித்துவிட்டன.சினிமா மோகத்திலிருந்து [தொடர்ந்து ]மக்கள் விடுபட்டால்தான் தமிழ் நாட்டுக்கு விமோசனம் என்று நீங்கள் உண்மையிலேயே கவலைப் படுவீர்களானால், வேறு அறிவார்த்த மார்க்கங்களை நீங்கள் யோசிக்க வேண்டும். முதலில் நீங்கள் ஒரு உதாரண ஜனநாயக தலைவர் என்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.பிறகு- அன்னியாின் வாக்கும் உங்களுக்குக் கிடைக்கலாம்.

**

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி