This entry is in the series 20010917_Issue


சிக்கன் –1/2கிலோ

சிறிய வெங்காயம் –100கிராம்

தக்காளி –100கிராம்

இஞ்சி –1துண்டு

பூண்டு –8பற்கள்

கொத்துமல்லித் தழை –தேவையான அளவு

எலுமிச்சம் பழம் –அரைமூடி

மிளகு –1 1/2டாஸ்பூன்

தனியா –2டாஸ்பூன்

சீரகம் –1/2டாஸ்பூன்

சோம்பு –1/2டாஸ்பூன்

பட்டை –1துண்டு

ஏலக்காய் –2

கிராம்பு –2

தேங்காய் –1/2மூடி

கசகசா –1/2டாஸ்பூன்

சிக்கனை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, உப்புத்தூள், எலுமிச்சம்பழச்சாறு, மஞ்சள்தூள் தடவி ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை மைப்போல் அரைக்கவும். தேங்காயைத் துருவி கசகசாவுடன் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், தனியா, மிளகு, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்புஇவைகளை வறுத்து, கடைசியில் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து நன்கு மைப் போல் அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சுருளக் கிளறவும்.

ஊறவைத்திருக்கும் கோழித் துண்டுகளைச் சேர்த்து சிறு தீயில் வேகவைக்கவும். கோழித் துண்டுகள் எண்ணெயிலேயே வதங்கியதும் அரைத்த மசாலா, மஞ்சள்தூள் திட்டமாக, நீர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

குழம்பு நன்கு கொதிக்கையில் அரைத்த தேங்காய் சேர்க்கவும்.

கோழி நன்கு வெந்து குழம்பு கெட்டிப்படுகையில் கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.

20010917_Issue

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.