சாதிகள் உண்டடி பாப்பா

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

பிச்சுமணி வே


நீ வளர வளர தெரியும் பாப்பாபத்தாவதில் கேட்பாங்க பாப்பா
நிறத்தை வைத்து சாதியை கொள்வார் பாப்பா
ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா
சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா
சாதி பகுப்புக்குள்ளும் உயர்வு தாழ்வு உண்டு பாப்பா
ஒரு சாதிக்குள்ளும் உயர்வு தாழ்வு உண்டு பாப்பா
சாதி பார்த்து காதலித்தால் காதல் கைகூடலாம் பாப்பா
கல்யாணம் என்றால் கட்டாயம் சாதி உண்டு பாப்பா
கட்டும் தாலியில் சாதி உண்டடி பாப்பா
கலப்பு திருமண பெற்றோரே என்றாலும் தன் பிள்ளைக்கு சாதியில் பார்பார் பாப்பா
மதம் மாறினாலும் சாதி மாறாது பாப்பா
உயர்த்தி சொல்லியதால் மதத்தை பிடித்து கொண்டிருக்கும் சாதி உண்டடி பாப்பா
வேட்பாளர் தேர்வில் சாதி உண்டடி பாப்பா
வாக்கு கேட்கும் போது உன்சாதியை உனக்கே ‌அறிமுகம் செய்வார் பாப்பா
சமுதாய பிற்போக்குக்கு சாதியே அடையாள மாய் கொள்வார் பாப்பா
அது உண்மையும் கூட பாப்பா
தேச தலைவர்களில் சாதி அடையாளம் கண்டு போற்றுவார் பாப்பா
திரைப்பட நடிகர்களிலும் சாதி பார்த்து ரசிகர் மன்றம் ‌அமைப்பார் பாப்பா
சுடுகாட்டில் கூட சாதி உ ண்டடி பாப்பா
வாடகைக்கு குடி போனால் சாதியை துப்பறிவார்கள் பாப்பா
இந்தியர்கள் சாதி கூட்டம் கூட்டமாய் வாழ்வார்கள் பாப்பா
கடவுள்களில் கூட சாதி உண்டு பாப்பா
கோயில்கள் தேவலாயங்களையும் சாதி வாரியாக பிரிப்பார் பாப்பா
வளர்ப்பு பிராணிகளில் கூட சாதி பார்பார் பாப்பா
சாதிக்காக உயிரை மாய்த்து கொள்வார் பாப்பா
சாதிகளில் தாழ்வு மனப்பான்மை குறைந்து உள்ளது பாப்பா
சாதிகள் இல்லாமல் போக வேண்டும் பாப்பா
அதற்கு ஒரு நல்வழி கண்டு பிடி பாப்பா

Series Navigation

பிச்சுமணி வே

பிச்சுமணி வே