கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

எச் . பீர்முஹம்மது


வளைந்து செல்லும் கோடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். முடிவற்ற வெளியாய் விாிந்து செல்லும் அந்த கோடு தன்னை தாண்டி சலனித்து கொள்கின்றது.

மரபு சார்ந்த தமிழ் கதை மரபு இன்னும் விாிவடையாமல் நேராக செல்கின்றது. உடைபடாத கண்ணாடி சில்லுகளாக ஒன்றை மட்டுமே தானாக பிரதிபலித்து கொள்ளும். வாழ்வனுபவங்கள்/ சம்பவ போக்குகள் இவை கோர்க்கப்பட்டு கதைகளாக பின்னப்படுகிறது. எதார்த்தம் என்பதற்காக எழுத்துப் போக்காக தன்னை அடையாளப்படுத்தி வந்தது/

வருகிறது. இவற்றுடனான முறிதலாக வெளிப்படுத்தி கொள்கிறது. இந்நாவல் சொற்கள் ஒலிக்கப்படுகின்றன. மீண்டும் அதே சொல்லாக தன்னை உருமாற்றி கொள்கிறது ஒரு சொல்.

மொத்தம் 23 காதைகளாக கதைக்காக வகுத்திருக்கிறது. சங்க இலக்கியங்கள் இம்மாதிாியான வரைமுறைக்குள் தன்னை இருத்தி கொண்டிருந்தது. செவ்வியல் தமிழ் மனம் எல்லா திசைகளிலும் கதையிடலாக தன் இருப்பை நிர்ணயித்து/ பதினெட்டு வகையான அறிவு ஜீவிகள் அக்கதைப்பரப்பிற்குள் வந்தார்கள். பிரேதா/ அரூபதர்சினி/ஆத்மிர்த்தி இன்னும் தொடர்ந்ததான அறிவு ஜீவிகள் தங்களுக்குள்ளே பல்வேறுபட்ட இயக்கங்களுக்குள் விளையாடி கொள்கிறார்கள். உடலில் இருந்து வெளியேறல்/ உடலை மிதக்கவிடுதல்/ உடலில் இருத்தல்/ உடலாக தன்னை அடையாளமாக்கி கொள்ளல்/ கலைத்து போடப்படுகிறது இவ்வாறான உடல். உடலின் இருப்பே பிரபஞ்சத்தின் இருப்பாக மாறுகிறது. தாந்திாீக வெளிப்பாடாக இந்த வெளியில் கதை விாிவடைகிறது. ‘தப்பித்தல ‘ நிகழ்வு குறித்து இன்னும் நனவிலியாக மனச் செயல்பாடு இருக்கிறது. பயச்சிக்கலில் இருந்து தப்பித்தலாக அடையாளம் காணும் அது தற்கொலைக்குள்ளும்/ சுயஇன்பத்திற்குள்ளும் முடித்து கொள்கிறது. இரண்டுமே இருவேறு நிலைகளாக அதற்குள் ஊடுபாவும்.

சைவ / சமண எழுச்சிகள்/ சைவ ஓ சமண எழுச்சிகள் இரண்டிற்குமான இடைவெளிகளை இடாமல் நிரப்புகிறது இந்நாவல். சமணர்கள் கழுவிலேற்றப்பட்ட கதை சைவ ஆதிக்கம் என்பன போன்ற சம்பவங்கள் மாந்திாீக வடிவில் வெளிப்படுகின்றன. வார்த்தைக்குள்ளிருந்து தப்பித்து வெளியேறி வேறு வார்த்தைகளாக வெளியில் உலவுகிறது ஒரு காதை. இனி ஒளிந்து கொள்வது சாத்தியபாட்டை மீறிய செயல் ஆகையால் இன்னொரு வார்த்தையாக மாற்றி கொள்கிறது. பிரக்ை ‘யற்ற மனித இருப்பு பிரபஞ்சத்தை சாராத நிலைபாடு இதனை தொடர்ந்து பிணமாக தன்னை மாற்றிக் கொள்ளும் அது நான் ஓ நானல்லது இரண்டுமாக வெளிப்படும். நானும் எனது பிணமும் இப்படியாகத் தான் உரையாடுகிறது. ‘ நான் என் பிணத்தை/ என் சடத்தை பார்க்கிறேன் ‘. அதனோடு புணர்கிறேன். புணர்தலிருந்து பிரக்ை ‘க்கு மீள்கிறேன். மீண்டும் புணர்கிறேன். ‘வாழ்ந்திருப்பவற்றோடு புணர்ந்து பிரேதமாக உணர்வதிலும் பிரேதங்களுடன் புணர்ந்து வாழ்வனாக உணர்வது மேலானது ‘.

உடல் முழுமைப்பட்டதாக இல்லை. அரைநிலையில் பிரேதமாகவே எப்போதும் இருக்கிறது. நனவு/ நனவிலிக்குள்ளும் நனவிலி/ நனவுக்குள்ளும் மீண்டும் மீண்டும் இயங்கி கொள்கிறது.

ஓசோவின் பார்வையோடு ஒத்து போவதாக தொிகிறது. நிரந்தரமானதாக/ அத்தியாவசியமானதாக எதையும் ஆக்கி கொள்ளாத நிலையில்/ நனவு மனம் ஓயாத புனைவும் போர்களாக நம்மை நிகழ்த்தி கொள்கிறது.

ஆதி சமூகத்தில் சக்தி வெளிபாடுகள் பின்னர் லிங்க வழிபாடுகளாக திசைமாறுகிறது உடலில் இருந்து வெளியேறி ஙவெளிக்குள்ங நிகழ்ந்த காதையாக வருகிறது. தாந்திாீகர்கள் தங்களை உடலாக அடையாளம் கண்டார்கள். அதன் காரணமாக ஏனைய சமூக நிலைகளில் இருந்து விலக்கப்பட்டார்கள்.

மொழி குறித்தான நம் பார்வை இறுக்கப்பட்டிருக்கிறது. மொழி வார்த்தைகளை உற்பத்தி செய்கின்றது. அதுவே வரலாற்றின் உற்பத்தி பொருளாக மாறுகிறது. மொழி கிடங்கிலிருந்து பேச்சு செயல்பாடு தனியே பிாித்தெடுக்கப்படுகிறது. இங்கு மொழி முந்திவிடுகிறது. எனவேதான் ஒரே காலத்தில் வெவ்வேறு வெளியில் ஒரே இடமான வாக்கியங்கள் வெளிப்படுகின்றன.

பிறப்பும்/ மரணமும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. இரண்டின் தொடக்கமும்/ முடிவும்தான் என்ன> மொழி உற்பத்தியும்/ மொழி அழிதலும் பிறப்பும் மரணமுமாக நிகழ்த்தப்படுகிறது. கதையாடல்கள் எப்போதுமே நம்மை ஆட்டிக்கொள்ளும். சிறு X பெருங்கதையாடல் என்ற நிலையாக மனித இருப்பை/ சமூக இயக்கத்தை பெரும் கூறுகளாக பிாிவடைய செய்து பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. சிறு தெய்வங்கள் X பெருந்தெய்வங்கள் இந்த பெரும் போராட்டத்திற்குள் பங்கேற்பாளர்களாக நம்மை ஆக்கிக் கொள்கிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் எப்போதுமே ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வந்திருக்கிறது. தெய்வங்களின் போராட்டம் ஆவிகள் பற்றிய கதையாக இதிலிருந்து நமக்கு வெளிப்படுகிறது.

பெளத்தத்தின் தோற்ற நிலை குறித்து பல்வேறு விதமாக புனைவுகள் புனையப்படுகின்றன. பெளத்தம் ஸ்கந்த/ ஆயுதன்/ தாது என்பதாக தன்னை தொடங்கிக்கொள்ளும். புத்தர் தன்னுடைய பிக்குகளுக்கு இதனை உரையாடலாக வெளிப்படுத்தியதாக கதை உண்டு. இந்த வெளிப்பாடுகள் புத்தருக்கும்/ ஆனந்தருக்கும் மற்றவர்களுக்கும் இடையேயாக நீள்கிறது. இரண்டுமே நிகழ்ச்சிப்போக்குகளின் தற்காலிக நிலைதான். முடிந்துவிடும் ஒன்றல்ல. அதீதனின் துண்டறிக்கை இந்த விவரத்தை தொிவிக்கிறது.

மார்க்சீயம் இன்று செவ்வியல் ஓ அங்ககமாக அல்லது செவ்வியல் / அங்ககமாக பிாிந்து கிடைக்கிறது. செவ்வியல் மார்க்சீயம் தன்னை மந்தை நிலைப்பாடுகளுக்குள் உட்படுத்திக் கொள்ளும். இங்கு புத்த/ சமண மதங்களிலிருந்து விலகி மார்க்சீய அரசியல் அமைப்பிற்குள் நுழையும் ஒருவன் அங்கு மூலமந்திரங்கள் விஷயத்தில் குழம்பி நிற்கிறான். மீண்டும் வெளியேறி நூலகத்திற்குள் நுழைகிறான். புத்தக குவியல்களை அடையாளம் காணும்போது ஏற்கனவே பிரதிபலிப்பு செய்யப்பட்ட மனம் அதிலிருப்பதை காண்கிறான். ஓயாத சம்பவமாக மாறிமாறி நிகழ்கிறது. இங்கு அவனுக்கு தப்பித்தல் எதுவும் இல்லை. பிறவி பெருங்கடலுக்குள் இருந்து மீள முயற்சிப்பதாக வெளிப்படுகிறது. இந்நாவலில் இதுவும் அதீதன் மாதிாியே அதீதபடுத்தப்பட்டதாக தொிகிறது. இங்கு ‘தூய சார்புநிலை ‘ என்று எதுவும் இல்லை.

மிருகங்கள் தன்னை இன்றாக இருத்திக்கொள்ளும். அதற்கு எல்லாமே உடனடி காரணங்கள் தான். மனித நிலையில் எல்லாமே எதிர்காலம் சார்ந்ததாக மாறி வருகிறது. மனித – மிருகங்கள் அல்லது மனித மிருகங்கள் என்பதாக மனம் துள்ளி துள்ளிக்கொண்டே இருக்கிறது. அதீதனின் பேட்டியாக நமக்கு தொிகிறது இது. வரலாற்றிலிருந்து தப்பிக்க முடியாமை/ வரலாற்றிலிருந்து தப்புதல் இரண்டுமே இடைவிடாத நிகழ்வுதான். அதீதனின் எதிர்வுகளுக்கிடையேயான அனுபவங்கள் மனித / மிருகங்களின் தர்க்க ஒழுங்காக காட்சியமைக்கப்படுகிறது.

சம்பவங்களில் தொடர்ச்சியாக / நேர்கோடாக தமிழ் கதைக்களம் இதுவரை தொடர்ந்து வந்திருக்கிறது. வளைந்து செல்லும் கோடுகளாக தொடர்ச்சியற்ற சம்பவங்களாக நாவலழிப்பு செய்யப்படுகிறது. அதற்குள் கரைத்தழித்தல் செய்யப்படுகிறது. சொல் என்றொரு சொல்லில் பிரதிகள் புதைந்துகிடக்கின்றன. இன்னும் எழுதப்படாத மனிதர்கள் இறந்து கிடக்கிறார்கள். நாவற்ற நாவலாக சொல் என்றொரு சொல் நமக்குள் பிரதியாக வெளிப்பட்டிருக்கிறது. அகம் X புறம் அகமனம் X புறமனம் என்ற இரண்டிற்குள் எதற்குள்ளும் நின்று கொள்ளாமல் சொல்லாமலே சொல்லாக ஒதுங்கி கொள்கிறது.

***

சொல் என்றொரு சொல் (நாவல்)

ரமேஷ் : பிரேம்

வெளியீடு காவ்யா

14/ முதல் குறுக்குத்தெரு/ டிரஸ்ட் புரம்/

கோடம்பாக்கம்/ சென்னை 24.

விலை : ரூ.125

(சொல்புதிது புத்தக விமர்சன பகுதிக்காக எழுதப்பட்டது. )

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது