கேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி ?

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

ஸ்டார் ட்ரெக் நகைச்சுவை


1) ஒரே வார்த்தை: முடி

2) இதுவரை இருந்த எல்லா கேப்டன்களையும் விட அதிக முடி

3) ஜேன்வே காப்பி குடிக்கிறார். ‘எர்ல் கிரே ‘ லொல்லெல்லாம் கிடையாது

4) கிரகங்களுக்கு எப்படி ஒரு நிஜ காப்டன் பீம் டவுண் பண்ணுவாரோ அது போல ஜேன்வே பண்ணுகிறார்

5) டாக்டர் நொள நொள என்று பேசினால், டாக்டர் வாயை மூடுகிறார்.

6) விடலைப் பையன்களை விண்ணூர்திக்கு காப்டனாக ஆக்கியதில்லை – இதுவரை

7) இவர் கேப்டனாக இருந்த விண்ணூர்திகள் உடைக்கப்பட்டது. பிக்கார்ட் -2, ஜேன்வே – 0

8) வாயேஜருக்கு நிச்சயம் ஒரு பெண்தான் காப்டனாக இருக்கமுடியும். ஐய்யா வழி விட்டுவிட்டோம். கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி வழி கேட்க வேண்டும் என்று ஆண்களுக்குத் தோன்றுமா என்ன ?

9) பிக்கார்ட் பேசியே ஜெயிக்க முயல்வார். ஜேன்வே, எதிராளியை அடித்தே ஜெயிக்க முயல்வார்

10) ஜேன்வே இஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டியதில்லை – இதுவரை

11) தூங்கும் உடையில் அழகாக இருப்பது நிச்சயம் ஜேன்வேதான்

12) ஆங்கிலம் பேசும் பிரஞ்சு ஆள் கிடையாது

13) வாழ்க்கையை உடைக்கக்கூடிய நிகழ்ச்சி நடந்த பின்னர், அதிலிருந்து மீள குறைந்தது இரண்டு நாள் கொடுப்பார் ஜேன்வே

14) ஜேன்வே நேரடியாக எதிரிகளிடன் ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை ‘ என்று சொல்வார். பிக்கார்ட் நல்லபடி நடந்து கொள்ள அறிவுரை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

15) ஜேன்வேயின் முதல் ஆபீஸர் முகத்தில் பச்சை குத்தியிருக்கிறார்

16) ஜேன்வேயின் ஹோலோடெக்கில் உபயோகமான டாக்டர், செயற்கை நுரையீரல் போன்றவை உருவாக்கப்படுகின்றன. பிக்கார்டின் ஹோலோடெக்கில் கொடுமைக்கார புத்திசாலி வில்லன்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

17) ஜேன்வே எழுந்து நிற்கும்போதெல்லாம் யூனிபார்மை சரிசெய்வது கிடையாது

18) வெளிகிரக மொழிகளைக் கற்றுக்கொள்ள பிக்கார்ட் மாதிரி கஷ்டப்படுவதில்லை. டெல்டா க்வாட்ரண்ட் கிரகங்கள் அனைத்தும் அழகான அமெரிக்க ஆங்கிலம் பேசுகின்றன

19) பிக்கார்ட் வெளிக்கிரக கலாச்சாரங்களிடம், ‘ஒரு நாள் நம் இருவரது கலாச்சாரங்களும் புரிதல்களோடு இருவரை ஒருவர் அணுகும் ‘ என்று நம்பிக்கைப் படுவார். ஜேன்வே, அந்த கிரகங்களை ‘மிகவும் கடுமையான சக்தியோடு ‘ தாக்கப் போவதாக பயமுறுத்துவார்.

20) பேசாமல் வெறும் முகத்திலேயே ‘டேய் பாரிஸ் பையா, இதைவிட முட்டாள்தனமாக இதுவரை நீ இருந்ததில்லை ‘ என்று ஜேன்வேயால் காண்பிக்க முடியும்.

21) நல்ல ஆண்மைத்தனமான குரல், ஜேன்வேக்கு

22) ரைக்கர் எப்போதுமே பிக்கார்டைப் பார்த்து அப்படி புன்முறுவல் பூத்ததில்லை

Series Navigation

ஸ்டார் ட்ரெக் நகைச்சுவை

ஸ்டார் ட்ரெக் நகைச்சுவை