கூனல்கள்

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

பாரதிராமன்


முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார்.

‘ஊர் உலகத்துலே நடக்காதது என்னய்யா இங்கே நடந்து போச்சின்னு இப்ப இவ்வளவு ஆர்ப்பாட்டமும் கலாட்டாவும் ? அப்பிடியே ஆட்சியைக் கவிழ்க்கப்போறாப்பலே! அங்கங்கே *தடுத்துநிறுத்தி/சுட்டுத்தள்ளி முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்கவேணாம் ? உங்களுக்கெல்லாம் நான் செஞ்சதைவிட எவன்யா கூட செஞ்சிருக்கான் ? எல்லாருமா சேந்துகிட்டு என்னையே கவுத்துடப் பாக்கறீங்களே! எவன்யா அந்த *பொழப்புகெட்ட/பொறுக்கி எஸ்.ஐ ? எங்கேய்யா இருக்கான் ?……… ஏன்யா எல்லாரும் *பேசாம/ கொட்டாப்புளிமாதிாி நிக்கறீங்க ? யாராவது *திரு/… வாயைத் திறவுங்களேன்,*கொழுக்கட்டையா அடைச்சிருக்கு/நாசமாப்போறவங்களே!(யாரும் ஆச்சாியப்படவேண்டாம். பிரச்சினையின் தீவிரம் அப்படி! எல்லோருமே நம்ம ஆட்கள்தானே, *வெட்கப்பட/ரோஷப்பட என்ன இருக்கு ?)

குழுமியிருந்தவர்களிடையேயிருந்து ஒரு குரல் எழும்பியது: ‘அந்த இன்ஸ்பெக்டர் பேரு கிருஷ்ணன் சார்! ‘

‘எந்தக் கிருஷ்ணன்யா அது ? சேலையைக்கொடுக்கவேண்டியவன்லாம் அதை உருவறனா மாறீருக்கான்! அவன் எப்பிடிய்யா இத்தினி வருஷமா குற்றப்பத்திாிக்கைக்கு டிமிக்கி கொடுத்துகிட்டு இன்னும் மூணு பேரோட வேற சேந்துகிட்டு தலைமறைவா இருக்கான் ? ‘-முதல்வர் கேட்க,

முதல்வாின் கிருஷ்ணர் பற்றிய நகைச்சுவையைப் பாராட்டிப் பலர் சிாிக்க நினைத்தாலும் சூழ்நிலையின் கடுமையில் எல்லோரும் மெளனம் காக்க முதலில் பேசிய போலீஸ் தலைதான் மீண்டும் பேசியது. ‘அவர் யாருமில்லே சார், வசூல் மன்னன் கிருஷ்ணன்தான் சார்! அவரு கூட தலைமறைவாயிடலே சார், இந்த மாதிாி கேசுகள்லே வழக்கமா செய்யறமாதிாிதான் அவங்களை நம்ப பாதுகாப்பிலேயே வச்சுக்கச்சொல்லி ரகசியமா உத்தரவு போயிருக்கு, எப்பவேணா அவங்களை வெளியே வரச் சொல்லலாம் சார்! அந்த தர்மாதேவி மட்டும் புகுந்து குழப்பலேன்னா கேஸ் இவ்வளவு தூரம் வந்திருக்காது சார்! ‘

‘அது யார்ய்யா பொம்பளை ? அவளுக்கு என்ன வேணுமாம் ? யாரும் *கண்டுக்க/வச்சுக்க மாட்டேங்கறாங்களாமா ? ‘ (மீண்டும் இயல்பாக வெடிக்கும் வார்த்தைகள் பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டத்தானே தவிர யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் அல்ல.)

‘ஒண்ணுமில்லே சார்! பொன்னகரம் புறம்போக்கு நிலம் ஒரு மூணு ஏக்கரா. தன் பேருக்கு பட்டா பண்ணச்சொல்லி கேட்டிருந்தாங்க அந்த அம்மா.பழைய அரசாங்கம் ஃபைலை பைசலே செய்யாம கிடப்பிலே போட்டுவிட்டாங்க! இப்பகூட அதைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். கிடைச்சதும் சாருடைய உத்தரவுக்காக அனுப்பறோம் சார்! ‘-அந்தப் போலீஸ் அதிகாாி விளக்கியதும் அறையில் இறுக்கம் சற்று குறைந்தது.

‘இத பாருங்கப்பா! என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ, தொியாது.இன்னைக்கு வெள்ளிக்கிழமையில்லையா,அடுத்த ஆறாவது வெள்ளிக்கிழமைக்குள்ள விவகாரத்தைப் பைசல் பண்ணாட்டி யார் தலைக்கும் நான் காரண்டி கொடுக்க முடியாது. புாிஞ்சுதா ? போய் உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுங்க. பத்திாிக்கைகளையும் கொஞ்சம் விவரப்படுத்திவைங்க.அந்த *முழுகிப்போன/மூதேவி ஃபைலைத் தேடி எடுத்து உடனே எனக்கு அனுப்புங்க. கொஞ்சம் சுறுசுறுப்பா நடங்க. இன்னொரு தேர்தலை என் தலையில் கட்டப் பார்க்காதீங்க, போங்க1 ‘- தலைக்கு நேராகப் புறங்கையைத்தூக்கி அசைத்து கூட்டத்தை விரட்டினார் முதல்வர். (அப்பாடா!* திட்டுக்களே இல்லை!/விட்டாப்போதும் சாமி!)

அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. பாஞ்சாலியின் வழக்கை விசாாிக்க ஒரு பெண் நீதிபதியின் தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. மூன்று வருடங்களாகத் தேங்கிக் கிடந்த கோப்புகள் தூசிதட்டி அடுக்கிவைக்கப்பட்டன. தலை மறைவாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட காவலர் நால்வரும்- எஸ்.ஐ கிருஷ்ணன் உள்பட- தீர்த்த யாத்திரை செய்துவிட்டு திரும்பி வந்ததாகவும் வந்த உடனேயே தாங்கள் தேடப்பட்டு வந்ததாக அறிந்து கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும் கூறி தம்மீதான குற்றப்பத்திாிக்கையைப் பெற்றுக் கொண்டார்கள். தங்களுடைய வக்கீல்கள் மூலம் தாங்கள் நிரபராதிகள் என்று வாதாடினார்கள். ஜாமீனில் வெளியேயும் வந்து விட்டார்கள்.

பொது மக்களின் நன்மை கருதி எல்லாப் பத்திாிக்கைகளும் பாஞ்சாலியின் வழக்கை ஆதியோடந்தமாக மீண்டும் விவாிக்கத் தொடங்கின.

சோகத்திலிருக்கும்போது ஒரு பெண்ணை வர்ணிக்கக் கூடாதுதான். இருந்தாலும் கூட அசோகவனத்து சீதை, சுடுகாட்டு சந்திரமதி, பாதிப் புடைவை தமயந்தி என்று பண்டைய அழகிகள் பலரும் வர்ணிக்கப்பட்டிருப்பது, சோகம் எப்படி அவர்களது அழகை உருக்குலைத்துவிட்டது என்பதைக் காட்டவும் நம் அனுதாபங்களை இரட்டிப்பாக்கவும் என்றுதான் படுகிறது. பாஞ்சாலியிடமும் அழகை அள்ளிக்கொட்டியிருந்தது இயற்கை.அலை அலையாய் நெளிகின்ற கருமேகக் கூந்தல்,நாவற்பழ கண்கள்,எள்ளுப்பூ போன்ற எடுப்பான நாசி, மாதுளை மொட்டுப்போன்ற இதழ்கள், குன்றிமணிப் பல்வாிசை, மாம்பழக்கன்னங்கள், சங்குக் கழுத்து,கால்வாய்க் கரை கரும்பாசிநிற மேனி.

மேற்கூறிய அத்தனையையும் அள்ளிப்பருகிடத் துடித்துக் கிடந்தவன் அவளது மாமன் மகன் ஏட்டு காளியப்பன். போக்கிாி, குடிகாரன். அதிகார மமதையில் அக்கிரமங்களுக்கு அஞ்சாதவன். அதனால்தான் பாஞ்சாலி அவனை வெறுத்தாள்.தன் தாயின் வற்புறுத்தல்களுக்கும் இணங்காமல் சால்சாப்பு சொல்லித் திருமணத்தைத் தட்டிக்கழித்து வந்தாள்.தாயின் மறைவுக்குப்பின் வயதான தன் அத்தையிடம் தஞ்சம் புகுந்தாள். அத்தைக்கு ஒரு மகன் இருந்தான். பிறவிக் கூனன், இரட்டைத்திமில்கள் கொண்ட ஒட்டகம் போல இருந்தான். வேர்க்கடலை, இளநீர்,கரும்புச்சாறு என்று பாதையோரம் கடைகள் போட்டு பிழைப்பை நடத்திவந்தான். அவனது கண்ணியமும் தன்னம்பிக்கையும் பாஞ்சாலியை ஒரு புறம் அவனிடம் ஈர்த்தன என்றால் காளியப்பனின் மிரட்டல்கள் இன்னொரு புறம் அவர்களுடைய திருமணம் விரைந்து முடியக் காரணமாயின.இருந்தாலும் காளியப்பனின் பெரு மூச்சுகளுக்கும் உறுமல்களுக்குமிடையேதான் பாஞ்சாலி வாழ்க்கை நடத்த வேண்டிவந்தது. அவள் பயந்திருந்தபடியே ஒரு நாள் நடந்தும்விட்டது.

சம்பவ தினத்தன்று இரண்டாவது ஆட்டம் முடிந்து ஆள் நடமாட்டம் குறைந்துவிட்ட நிலையில் கடையைக் கட்டிக் கொண்டிருந்தான் கூனன். திடாரென நான்கு ஜோடி பூட்ஸ் கால்கள் அவன் முன் நின்றன. அந்தக் கால்களுக்குச் சொந்தமானவர்களில் காளியப்பனும் எஸ்.ஐ கிருஷ்ணனும் இருந்தனர். எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாகக்கூறி கூனனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று கட்டி வைத்தனர். தன் கணவனைக் கட்டிவைத்திருக்கிறார்கள் என்று தொிந்ததுமே பதைபதைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாள் பாஞ்சாலி. அவ்வளவுதான்! கிளி கூண்டில் சிக்கிக்கொண்டது!

‘கிருஷ்ணா, நீ பஞ்சபாண்டவர் பெண்டாட்டிக்குத்தான் உதவிக்கு வருவாயா ? எளியவர்களை ஏறிட்டுப் பார்க்க மாட்டாயா ? ‘- முறையிட்டது கிளி.

‘ஆமாம், முதல்லே உன்னை அஞ்சு பேருக்கு பொண்டாட்டி ஆக்கிட்டு அப்புறமா சேலை தருவான் இந்த கிருஷ்ணன்! ‘-ஆபாசக் கூச்சலிட்டது போலீஸ் புலி. ஓநாயும், நாியும்,காட்டுப்பூனையும் புலியுடன் சேர்ந்து பாய்ந்தன.

சமூக சேவகி தர்மாதேவிக்கு சேதி எட்டி அவள் ஸ்டேஷனுக்கு வந்து பார்த்தபோது பாஞ்சாலி மயங்கிக் கிடந்தாள்.அவள் காலடியில் பிாியாணிப் பொட்டலமும் ஒரு புதிய சேலையும் கிடந்தன.

தர்மாதேவி மூலம் விஷயம் அரசியல் முக்கியத்துவம் பெற்று விட்டது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தந்திகள் பறந்தன. கடை அடைப்பு நடந்தது. அரசோ எதிாிகளின் சதி என்றது. போலீஸ் ஸ்டேஷனில் ஒரு குற்றமும் நடக்கவில்லை என்றது. பல்லி விழுந்த பிாியாணியைச் சாப்பிட்டதால் மயங்கிக்கிடந்த பாஞ்சாலியை போலீஸ் நிலயத்தில் வைத்து மருத்துவ உதவி தரப்பட்டது என்றது போலீஸ். மருத்துவம் முடிவதற்குள் அரசியல் ஆதாயம் கருதி சிலர் பிரச்சனையைக் கிளப்பிவிட்டதாகக் குற்ற்மும் சாட்டியது அது. இருப்பினும் இறுதியில் எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பணிந்து நான்கு காவலர்கள் மீதும் குற்றப்பத்திாிக்கை தாக்கல் செய்ய முன் வந்தது அரசு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காணாமற்போனார்கள். மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன.காவலர்களது விடுமுறைச் சம்பளம் அவர்கள் குடும்பத்தினரால் பெறப்பட்டு வந்தது. மாமூல் வசூல்களும் வழக்கம்போல நிலயத்துக்கு வந்துகொண்டிருந்தன. காணாமல் போனவர்களுக்குப் பதிலாக யாரும் நியமிக்கப்பட்டதாகத்தொியவில்லை. மீதி இருந்தவர்களே பார்த்துக் கொண்டார்கள் போலும்!

குற்றச்சாட்டுகள் கோப்பளவில் நின்று கொண்டிருந்தன. அவ்வப்போது பாஞ்சாலியும் அவளது கணவனும் நீதிமன்றத்துக்கு கட்டை வண்டியிலேறி வந்து போய்க்கொண்டிருந்தார்கள். குற்றவாளிகள் பிடிபட்டதும் கேஸ் விசாரணை துவங்கி அவர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மூன்று நீதிபதிகள் மாற்றலாகிப்போயினர். ஒவ்வொரு நீதிபதி முன்பும் விரைவிலேயே தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடித்துவந்து நிறுத்துவோம் என்று போலீசார் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

நாளடைவில் மக்கள்முன் வேறு பல பிரச்சினைகள் தோன்றிவிட்டன. விலைவாசிப் போராட்டங்கள், சாதிக் கலவரங்கள், லஞ்ச ஊழல்கள் போன்றவைகளுக்கு முன்னே பாஞ்சாலியின் வழக்கு ஆறிய கஞ்சியாகிப் போனது.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிப்போய் மூன்றாவது வருடம் நடந்துகொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் ராஜஸ்தான் மாநிலத்தில் இதேமாதிாி வழக்கொன்று தோண்டி எடுக்கப்பட்டு மக்கள் விழித்தெழுந்து அரசை விரட்டிக்கொ ண்டிருந்ததைக் கண்ட தர்மா தேவி தன் பங்குக்கு இங்கே மீண்டும் ஆதாயம் தேடத் துவங்கினாள். இம்முறை கடை அடைப்பு வன் முறையில் முடிந்தது. பேருந்துகள் தீக்கிரையாயின.தடியடியும், சிறைவாசமும் சகஜமாகிப் போயின. நிலைமை கட்டுமீறுவதான இந்த அளவில்தான் முதல்வர் தலையிட்டு திடார் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பாஞ்சாலி வழக்கு விறுவிறுப்புடன் தொடர்ந்து நடத்தப்பட்டது. விசாரணையின்போது பாஞ்சாலியின் விருப்பத்துக்கு மாறாக கூனன் அவளைக் கெடுத்துவிட்டு கல்யாணம் செய்துகொண்டதாகவும், பாஞ்சாலி உண்மையில் காளியப்பனையே விரும்பியதாகவும். அப்படித்தான் அவளுடைய தாயிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்ததாகவும், கல்யாணத்திற்குப்பிறகுகூட காளியப்பனுடன் தொடர்பு கொள்ள விரும்பியதாகவும்,காளியப்பன்தான் தக்க புத்திமதிகள் கூறி, புடைவை, மற்றும் மணிகள் வாங்கித் தந்து கூனனிடம் அனுப்பிவைத்ததாகவும் சாட்சிகள் ஜோடனை செய்யப்பட்டன. பாஞ்சாலி அப்படியொன்றும்

பத்தினி அல்ல என்று நிரூபிக்கப்பார்த்தன அவை.

சம்பவதினத்திற்குச் சில வாரங்கள் கழித்து ஒரு நாள் கூனனின் தாய் கூலிக்காரப் பெண் ஒருத்தியிடம் ‘அதென்னமோம்மா, பயாஸ்கோப்பிலே வில்லன் கெடுத்தா மாத்திரம் உடனே உண்டாகிர்ராளுங்கோ. நாலுபேர் கெடுத்தும் இங்கே ஒண்ணும் உண்டாகல்லே.இந்தக் கூனப்பயலுக்கு எப்பத்தான் ரோசம் வரப்போகுதோ! ‘ என்று புலம்பிக் கொண்டிருந்ததைக் கேட்டு துடிதுடித்துப் போனாள் பாஞ்சாலி. கூலிக்காரப் பெண்ணின் வாயை அடைக்க அவள் பிரம்மப் பிரயத்தினம் செய்ய வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் இது கூட நீதிமன்ற ாிகார்டுகளில் ஏறிவிட்டிருக்கும்.

ஆறாவது வெள்ளி. தீர்ப்பு நாள். நீதிபதி தீர்ப்பை வாசித்தார். ‘மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த வழக்கில் விசேஷமாக எதுவும் இல்லை.குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் காவலர்மீது பாஞ்சாலிக்கும் கூனனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.பாஞ்சாலிக்கு காளியப்பன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கோபம், கூனனுக்கு போலீஸ் தன் மீது அடிக்கடி கேஸ் போடுகிறது என்ற கோபம். இதன் விளைவாகத்தான் தர்மாதேவியின் தூண்டுதல் போில் இந்த வழக்கு ஏற்பட்டுள்ளது.சாட்சிகளின் கூற்றுகளிலிருந்து போலீஸார்மீது எவ்வித குற்றமும் இல்லை என்று நிரூபணமாகியிருக்கிறது.பலத்த அரசியல் அதிர்வுகளைக்கிளப்பி அனாவசியமாக மக்களைத் திசை திருப்பி போலீஸ ‘க்கும் அரசுக்கும் அவப்பெயர் உண்டாக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை மக்களும் அரசாங்கமும் இனம் காணவேண்டும். தக்க சமயத்தில் தலையிட்டு சட்டத்தின் கூனல்களை நிமிர்த்தி நீதியை விரைவில் வழங்கிட முதல்வர் எடுத்த நடவடிக்கைகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ‘

நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும் அவருக்குப் பின்புறச் சுவாிலிருந்த காந்திஜாயின் படம் திடாரென அறுந்து கீழே விழுந்து கண்ணாடி நொறுங்கியது.

சத்தம் கேட்டு திடுக்கிட்ட நீதிபதி ‘ ஆர்டர்,ஆர்டர் ‘ என்று கூறி சுத்தியலால் மேசை மீது இரண்டு முறை தட்டினார். அருகேயிருந்த உதவியாளர் நீதிபதியை நெருங்கி ‘இரண்டு ஆர்டர்களும் காலையிலேயே வந்துவிட்டதே மேடம்! ஒன்று உங்களுடைய பதவி உயர்வுக்கானது; மற்றது தர்மாதேவிக்கு நிலம் ஒதுக்கி பட்டாசெய்வதற்கானது. இரண்டு நகல்களையும் நீங்கள் பார்த்துவிட்டார்களே மேடம், இன்னும் எந்த ஆர்டரைக் கேட்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார்.

அதில்லேய்யா, கீழே கண்ணாடி உடைந்து சிதறிக் கிடப்பதை சுத்தமாக்கிவிட்அந்த இடத்தை ாஆர்டர்ா படுத்துங்கள் என்றுதானே சொன்னேன்,ம்,சீக்கிரம் ஆகட்டும்! ‘ என்று கூறிக்கொண்டே எழுந்தார் நீதிபதி. கோர்ட் கலைந்தது.

மறுநாள் எல்லா முக்கிய ஊர்களிலும் ‘சட்டக்கூனல்களை நிமிர்த்திய சனநாயகச் செம்மல் ‘ போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.மாற்றுக் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் மூன்று வருடங்களாக முடியாதிருந்த வழக்கை முடித்துவைத்த அரசுக்குப் பாராட்டுத் தொிவித்தார்கள். அமொிக்க ாடைம்ா பத்திாிக்கையில் இந்திய சனநாயகத்தின் வெற்றி பற்றி ஒரு பத்தி கட்டம் கட்டிப் பிரசுரம் ஆகியது. கலெக்டாின் ஆணை இன்னும் கைக்கு வந்து சேராத நிலையில் தர்மாதேவி முழு தீர்ப்பும் வெளியான பின்னர் மேல்முறையீடு பற்றி யோசிப்போம் என்று அறிக்கை விட்டாள்.

பாஞ்சாலிக்கும் அவளுடைய கணவனுக்கும் இனியும் கோர்ட்டுக்குக் கட்டை வண்டியிலேறி போய் வந்துகொண்டு அலைய வேண்டியிருக்காது என்ற நிம்மதி ஏற்பட்டது. அந்த நிம்மதியில் மீண்டும் துளிர்த்த பாஞ்சாலியின் அழகை சற்றே பெருத்துக் கூனலிட்டிருந்த அவளுடைய அடிவயிறு பன் மடங்காகப் பெருக்கிக் காட்டியது.

பின் குறிப்பு:- மன்னிக்கவும்! எல்லோரையும்போல பாஞ்சாலியின் கணவனையும் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி- யிருக்கவேண்டும். அது இயலாமற்போனது வருத்தமளிக்கிறது. எல்லா தஸ்தாவேஜ ‘களிலும் அவருக்கு கூனன் என்ற பெயரே காணப்பட்டது.அவரது தாயாரே கூட ‘கூனப்பயலுக்கு வேறென்ன பேரு வேண்டிக்கிடக்கு ? ‘ என்று கூறிவிட்டார். பாஞ்சாலியைக்கூட ‘கூனப்பய பொஞ்சாதி ‘ என்றே எல்லோரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவளுக்குப் பிறக்கப் போகும் சிசுவைக்கூட ‘கூனப்பய மவ ‘—– ஐயோ, வேண்டாம் இன்னொரு பாஞ்சாலி ‘கூனப்பய மகன் ‘ என்று தான் ——

மீண்டும் மன்னிக்கவும்!

* இக்குறியிட்ட இடங்களிலுள்ள தொடர்களில் ஏதாவதொன்றை வாசித்துக் கொள்ளவும்.வாசகர் எந்தக் கட்சி ஆதரவாளர் என்று தொியாததால் இந்த கோாிக்கை!

———————————————————————————-

Series Navigation