கூண்டுச் சிறுமி

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

ஹெச்.ஜி.ரசூல்


mylanchirazool@yahoo.co.in

கூண்டுக்குள் அடைத்துப் போடப்பட்டிருந்த
சிறுமி
ஒவ்வொரு கம்பிகளுக்குமாய்
தாவிக் கொண்டிருந்தாள்.
கூண்டுக்குள்
நிலக்கடலையும் பொரியும்
பிய்த்தெறியப்பட்ட பழங்களும்
குவிந்து கிடந்தன.
தாகம் வந்தபோது
யாரோ ஊற்றிய மினரல்தண்ணீரை நக்கி
வறண்ட நாக்கை ஈரப்படுத்தினாள்
எந்த ஒரு பெண்ணும்
இதுவரையிலும் வீசியெறியாத
ஒருமுழம் மல்லிகைப் பூவை
கற்பனையாக சூடிக் கொண்டபோது
பனியில் உறைந்த உடல் சில்லிட்டது.
நாட்கள் செல்ல செல்ல
கூண்டுச் சிறுமியைப் பார்ப்பதற்கு
நிறைய குரங்குகள் படையெடுத்துவந்தன.
அவ்வப்போது தன் உடல்மீதுதாக்கிய
கற்களை சேகரித்து
கூண்டுக்குள் ஒரு சிறுவீட்டை
கட்டிக் கொண்டிருந்தாள் சிறுமி.

Series Navigation