குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

த.அரவிந்தன்


புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்

குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)

த.அரவிந்தன்

பக்கம்: 80

ரூ.40

சுகுமாரன் முன்னுரை:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை
நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்