குளிர்பானங்கள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

அஃபிபா ஜவ்வாத் மணியர்


**

சாக்கோ வாழைப்பழ குளிர்பானம்

தேவையான பொருட்கள்

1 கோப்பை பால்

1 கோப்பை கோகோ தூள்

2 வாழைப்பழங்கள் உரித்தது

2 மேஜைக்கரண்டி கிரீம் (வேண்டுமாயின்)

2 மேஜைக்கரண்டி சர்க்கரை

4 உடைத்த ஐஸ் சதுரங்கள்

1 கோப்பை வாழைப்பழ ஐஸ்கிரீம் அல்லது சாக்கலேட் ஐஸ்கிரீம்

செய்முறை

ஐஸ்கிரீம், ஐஸ் கட்டிகள் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு நைய அடியுங்கள். பிறகு ஐஸ் கட்டிகளை போட்டு சிறிதளவு அடியுங்கள். இதனை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மீது ஐஸ்கிரீம் சிறிதளவு போட்டு பரிமாறலாம்

***

குளிர் ஆப்பிள் காப்பி

தேவையான பொருட்கள்

1 கோப்பை புதுப்பால்

2 மேஜைக்கரண்டி கிரீம்

2 மேஜைக்கரண்டி சர்க்கரை

1 மேஜைக்கரண்டி உடனடி காப்பித்தூள் (இன்ஸ்டண்ட்)

1 சிறிய ஆப்பிள் உரித்தது

5 ஐஸ் கட்டிகள்

1 கோப்பை காப்பி ஐஸ்கிரீம்

செய்முறை

காப்பித்தூளை ஒரு டம்ளரில் போட்டு ஒரு மேஜைக்கரண்டி கொதிக்கும் தண்ணீரை அதில் கொட்டவும். இன்னொரு டம்ளரைக் கொண்டு டா ஆற்றுவது போல ஆற்றவும். டிகாஷன் ஆயத்தமாகிவிட்டது. இதனை குளிர்ந்த நீரில் வைத்து குளிரவைத்துக்கொள்ளவும். பால், காப்பித்தண்ணீர், சர்க்கரை, ஆப்பிள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நுரைவரும் வரை அடிக்கவும். இதன் மீது ஐஸ் கட்டிகள், கிரீம் ஆகியவற்றைப் போட்டு இன்னும் சில வினாடிகள் அடிக்கவும். இதனை கண்ணாடி டம்ளர்களில் போட்டு அதன் மீது ஐஸ்கிரீம் போட்டு பரிமாறவும். கண்ணாடி ஓரத்தில் ஒரு ஆப்பிள் துண்டும் வைக்கலாம்.

***

சாக்கோ ஆரஞ்சு பழச்சாறு

தேவையான பொருட்கள்

1 கோப்பை ஆரஞ்சு பழச்சாறு

1 மேஜைக்கரண்டி சாக்கலேட் ஐஸ்கிரீம்

2 தேக்கரண்டி கோகோ தூள்

5 ஐஸ் கட்டிகள்

1 மேஜைக்கரண்டி சர்க்கரை

செய்முறை

ஆரஞ்சு பழச்சாறு, கோகோ தூள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இதன் மீது ஐஸ் கட்டிகள், சாக்கலேட் ஐஸ்கிரீம் ஆகியவற்றை போட்டு இன்னும் சில வினாடிகள் அடித்துக்கொள்ளுங்கள்.

குளிருடன் பரிமாறவும்

***

Series Navigation

அஃபிபா ஜவ்வாத் மணியர்

அஃபிபா ஜவ்வாத் மணியர்