ராஜீவ் ஸ்ரீநிவாஸன்
‘ இந்த லெளகீகம் கடந்த பாதைக்கு ‘முடிவிலி ‘ எழுதுவதற்கு முன்பாகவே நகர்ந்திருக்கிறீர்கள். கருணாகர குருவின் பாதிப்பினால் இது நிகழ்ந்ததா ? கருணாகர குருவுக்கு நீங்கள் ஒரு புத்தகத்தைச் சமர்ப்பிக்கவும் செய்திருக்கிறீர்கள். ‘முடிவிலி ‘ யில் குஞ்சுண்ணி ஒரு குருவைக் கண்டடைவார் என்று நினைத்தேன், ஆனால் அவர் முக ஆச்சரியமான இடங்களிலேயும், தனக்குள்ளேயும் குருவைக் கண்டடைகிறார். ஒரு நீண்ட தேடலுக்குப் பின் ஓர் இனிய முடிவு அது. ‘
‘ சில அம்சங்களை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை – தேடலில், கடந்து போதலில் (transcendence) பக்தியின் அம்சங்கள் சில உள்ளன. இவை புனைகதையின் கருத்துத் தளத்தை மீறி வெளியாகின்றன. நான் மதத்தைப் பின்பற்றுபவனாய் ஆகிவிட்டேன் என்பதி இதன் பொருளல்ல. என் வாழ்க்கையிலேயே நான் – வேறு வார்த்தைகள் கிடைக்காததால் – மந்திரம் போன்ற சில அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
‘சில ஆச்சரியம் தரும் கதைகளையும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், ‘சின்னவர்கள் ‘, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள்..ஆவி.. ‘
‘நான் கண்ட கனவு ஒன்றின் விளைவு அது. கனவில் பல்லாயிரம் சங்குகள் உள்ளிருந்து ஒளிரக் கண்டேன். நம்மைச் சுற்றிலும் மாயமந்திரங்கள் உள்ளன, நாம் கண் திறந்து காணவேண்டும். ‘
‘மலபார் – அதன் திய்யம் நடனங்களுடனும், ஒடியான்(குட்டிச்சாத்தான்)களுடன் மாய மந்திரம் நிறைந்ததா ? ‘
‘பாலக்காட்டில் திய்யம் இல்லை. ஒடியன்கள் இருந்தனர். அவர்கள் உங்கள் மீது மந்திரம் ஏவிவிடுவார்கள் என்று பலரும் நம்பினார்கள். ‘
‘இதை மிகத் தயங்கித் தான் கேட்கிறேன். லத்தீன் அமெரிக்க மாந்திரீக யதார்த்த பாணி உங்களை பாதித்ததா ? ‘
‘அப்புக் கிளி (கஸாக்கில் வரும் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரம்) பற்றி , 1958-ல் மார்க்வெஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படும் முன்பே நான் எழுதியிருக்கிறேன். இது போன்ற, பாதிப்பு பற்றிய, கேள்விகள், எழுத்தாளர்களைச் சங்கடப் படுத்துவது. ‘
‘உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது, ஆங்கிலம் மலையாளத்தைவிட சிறப்பாக இருந்ததாய் எனக்குத் தோன்றியதுண்டு. ‘
‘ ஆங்கில மொழிபெயர்ப்பில் அவை மூலத்தை விட நன்றாக இருந்ததாய்த் தெரியவில்லை. கேரளாவின் கலாசாரப் பின்னணி உங்களுக்குத் தெரியும் ஆதலால் அப்படித் தோன்றியிருக்கலாம். இந்தக் கலாசாரத்திற்கு வெலியே இருப்பவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்காது. ‘
‘உங்கள் கதைகள் திரைப்படம் ஆனதுண்டா ? ‘
‘சில முயற்சிகள் இருந்தன. இயக்குனருடன் நான் உடன்பட்டு செய்ல்பட்டால் , என் கதைகளின் சாராம்சத்தைத் திரைப்படத்தில் பதிய முடியும். ‘
‘அடூர் கோபாலகிருஷ்ணன் அல்லது அரவிந்தன் போன்றவர்களுடன் ? ‘
‘திரைப்பட விழா கமிட்டிகளில் நான் அடூருடன் பணி புரிந்திருக்கிறேன். அவர் மிகப் பெரும் கலைஞர். அவரு தன்னுடைய வெளிப்பாட்டில் முழுக் கட்டுப்பாடு கொண்டிருந்தார். அரவிந்தன் தோழமை கார்ட்டூனிஸ்டாக அறிவேன். ஆனால் அவருடன் திரைப்படப் பணியில் ஈடுபட்டதில்லை. ‘
‘நீங்கள் ஹைதராபாதில் வாழ்வது எனக்கு வியப்பு அளிக்கிறது. தில்லியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள் ? ஏன் கேரளா செல்லவில்லை ? ‘
‘ என் மனைவிக்கு இங்கே கொஞ்சம் குடும்பச்சொத்து உண்டு. தில்லி வாழ்க்கை அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது. ஹைதராபாத்தில் நான் அன்னியனாய் உணர்வேன். கேரளா சென்று விடலாமா என்று மிகத் தீவிரமாய் யோசித்து வருகிறேன். கேரளாவில் என்னை மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பது பிரசினை தான், ஆனால் அது என் வீடு. தில்லியும் கேரளாவில் என் அந்தரங்கத்தனிமை பிரசினையாகி விட்டது. என்னைப் பலரும் அணுகுவார்கள். கொஞ்சம் புகழ் வந்தால் இப்படித்தான். ஆனால் தில்லியில் இருக்கும்போது கூட, நான் பாலக்காடு பற்றித் தான் எழுதினேன். பாலக்காட்டின் உலர்ந்த பெருங்காற்றும், மலைக்காடுகள் வழியாகச் செல்லும் போது எழும் ஓசையை நினைத்துக்கொண்டே நான் பாலக்காடு பற்றித் தான் எழுதினேன்.எல்லாவிதமான மனிதர்களும் என்னை வந்து பார்த்துப் பேசுகிறார்கள். இது எனக்குத் தன்னடக்கத்தையும் கொடுக்கிறது. புகைவண்டியில்போகும்போது கூட பலதரப்பட்ட மக்களும் விஜயன் சார் என்று என்னை அழைத்து என் புத்தகத்தை அவர்கள் ரசித்ததைக் சொல்கிறார்கள். எல்ல விதமான மக்களும் என்னைப் படிப்பது மகிழ்வாக இருக்கிறது. ‘
‘உங்கள் குடும்பத்தில் சமீபத்தில் ஒரு மரணம்.. ‘
‘ என் சகோதரி சமீபத்தில் இறந்து விட்டார். அவர் இறந்த உடலைப் பார்க்கத் தான் என்னால் போக முடிந்தது. என் சகோதரி என்பதைக் காட்டிலும் என்னுடைய விளையாட்டுத்தோழி அவள். நாங்கள் மிக நெருக்கமாய் இருந்தோம். அவள் மரணம் என்னை வெகுவாக பாதித்தது. ‘
‘கார்ட்டூனிஸ்டாய் எப்படி ? ‘
‘ என்னுடைய பழைய கார்ட்டூன்களை புத்தக வடிவில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளே. புதிதாகக் கார்ட்டூன்கள் எதுவும் பண்ணுவதாய் இல்லை. ‘
‘1970-களில் உங்கள் கார்ட்டூன்களையே மீண்டும் போடலாம். சோனியா காந்தி பற்றி நீங்கள் சொன்னது எல்லாமே உண்மையாகி வருகிறது. ‘
‘எனக்கு தீர்க்க தரிசனம் இருந்ததோ என்னவோ ?(சிரிக்கிறார்.) ‘
‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ? ‘
‘தலைமுறைகளுக்கு ஒரு தொடர்ச்சியை எழுதலாம் என்று எண்ணம். ஆங்கில மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளேன். பேனா பிடிக்கக் கஷ்டமான நிலையில் நான் என் எழுத்தைச் சொல்லியாக வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கேட்டு எழுதக் கூடிய ஒரு செயலாளர் இருந்தார், ஆனல் அவர் போய் விட்டார். அதனால் மிக மெதுவாகத் தான் எழுத முடிகிறது. பேசப்பேச பதிவு செய்கிர இயந்திரம் வாங்கிக் கொள்ளும்படி ந் மகன் சொல்கிறான், ஆனால் எனக்கு இந்த டெக்னாலஜி அவ்வளவாக இணக்கமாய் இல்லை.
‘கேரளாவில் தலைமுறைகள் எப்படி எதிர்கொள்ளப் பட்டது ? ‘
‘ மிக உயரிய வரவேற்பு அதற்குக் கிடைத்தது. நல்லபடியாக விமரசனங்கள் வந்தது மட்டுமல்லாமல் வாசகர்களிடமும் நல்ல வரவேற்புப் பெற்றது. கொஞ்சம் கடினமானது என்று என்றாலும் நல்ல வரவேற்புத்தான். மார்க்ஸிஸ்டுகளைக் கொஞ்சம் கிண்டல் அடித்ததையும் மார்க்ஸிஸ்டுகள் விரும்பவில்லை. பல தளங்களில் உள்ள அந்தக்கதை அடிப்படையில் எளிமையான கதை தான்.
‘உங்கள் சொந்த வாழ்க்கையும், உங்கள் மூதாதையர் குடும்பமும் எந்த அளவு தலைமுறைகளில் உண்டு ? ‘
‘சுயவரலாற்று அம்சங்கள் சில உள்ளன. என் குடும்பக் கதைகளில் சிலவும் சிறுகதைகளாய் ஆகியுள்ளன. ஆனால் புனைவும், கற்பனையும் மிகுதியாய் உண்டு. பொன்முடி இல்லம் என் மூதாதையர் குடும்பத்தை அடிப்படையாய்க் கொண்டது தான் . நான் குழந்தையாய் இருந்த்போதே என் பூர்விக வீடு எனக்கு அன்னியமாகி விட்டது. அதனாலேயே அது மந்திர வீடு போல் தோன்றியது. ஒரு கடவுள் சிலை, பிரமிடைக் கவிழ்த்தாற்போல் இருந்த ஒன்று, குப்பையில் கிடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘
‘தலைமுறைகளின் ‘ஒரு முக்கியக் கரு சாதி. ‘
‘ சாதி பற்றியும், சாதி ஏற்படுத்தும் மனச்சிதைவுகளையும் பற்றி எனக்கு , கல்லூரி வாழ்க்கைக்கு முன்னால் எதுவும் தெரியாது. நான் பிற்படுத்தப்பட்ட ஈழவ வகுப்பைச் சார்ந்திருந்தாலும், வசதியுடன், மேல் மத்திய தரவர்க்கத்தின் வாழ்க்கையே கொண்டிருந்தேன். ஆனால் சாதி இப்போதும் நம் வாழ்க்கையின் ஒரு பெரும் அங்கம் தான். அதை நான் உணர்ந்து கொண்டு விட்டேன். நம் முன்னோர்களின் வாழ்க்கையில் நிச்சய்மாக அது ஒரு பெரும் அங்கம் வகித்தது. அதில்லாமல் சாதிகள் தொடரும் என்று தான் எண்ணுகிறேன். சாதியம் என்ற இறுகிப்போன , நெகிழ்ச்சியற்ற அமைப்பு தொடராது. மனிதர்க்கிடையில் உள்ள உள்ளார்ந்த வேறுபாடுகளே சாதியாகத் தொடரும். ‘
‘ சற்று சந்தோஷமான முடிவையே வழங்கியிருக்கிறீர்கள் – அது மிகக் சோகமான கதை என்றாலும். ‘
‘ அந்த சந்தோஷமான முடிவு வலிந்து திணிக்கப் பட்ட ஒன்றல்ல. அது எனக்கு ஒரு நல்ல உணரவி அளித்தது. இனவாதமற்ற, பரிவு நிரம்பிய ஒரு எதிர்காலம் பற்றிய கனவு அது. அது நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் ஒருசேர உள்ளடக்கியது. ‘
‘தலைமுறைகள் பற்றி விமர்சனம் எழுதும்போது , உங்களுக்கு ஞானபீடம் அளிக்கப் படவேண்டும் என்று எழுதினேன். ‘
‘(ஒ வி விஜயன் சிரிக்கிறார்) என்னைப் பற்றி நல்லதாய்ச் சொல்லும் எதுவுமே எனக்கு ஒப்புதல் தான். சமீபத்தில் யு ஆர் அனந்த மூர்த்தி சொன்னார்- இலக்கிய உலகம் விஜயனுக்கு நியாயம் செய்யவிலை என்று. ஆக இன்னும் நம்பிக்கை வைக்கலாம். ‘
‘நோபல் பரிசு ? ‘
‘ நான் அதற்கு எந்த முயறிச்யும் செய்யவில்லை.அதற்கு எப்படியெல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்று உஙக்ளுக்குத் தெரியுமல்லவா ? (சிரிக்கிறார்) வைக்கம் முகம்மது பஷீர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது ஒரு முறை. அந்தச் சமயம் அவரைப் பற்றி மோசமான விமர்சனங்களும் வந்தன. ‘
***
விஜயன் பேட்டி போதும் என்று குறிப்பிட்டார். பிரிவுப் பரிசாக கஸாக், மற்று ‘இறைத்தூதர் ‘ புத்தகங்களைக் கையெழுத்திட்டு அளித்தார். ‘ராஜீவிற்கு அன்புடன் ‘ என்று நடுங்கும் கைகளால் குறித்தார். அவர் அன்பு என் மனதைத் தொட்டது. மீண்டும் ஒரு முறை இந்தியப் புனைகதை உலகின் முக்கியமான அவருடன் பேசுவதற்குத் திரும்பவும் ஒரு முறை ஹைதராபாத் வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
(1998)
—முற்றும்—
நன்றி : rediff.com
- தெருவொன்றின் குறு நேர வாழ்வு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)
- கடிதம்
- ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு
- சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்
- தமிழ் வாழ்க!
- கவிதைகளின் திசைக்காட்டி
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3
- பூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்
- பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)
- ‘தறு ‘
- பாடங்கள்
- எறும்புக்கடி.
- ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….
- மாநிலத்திலும் கூட்டாட்சி!
- ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி
- உறவின் முறிவு
- புண்ணும் மீன்களும்
- வாமனர்கள்
- உதவி
- ஈஸுக்கா ரூமி