குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கனாடாவில் உள்ள ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்கள் ஆகஸ்டில் உலக வர்த்தக அமைப்பில் எற்பட்ட முடிவினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிமங்கள் குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.இந்த முடிவு குறித்து ஏற்கனவே குறிப்புகள் சில பகுதியில் எழுதியுள்ளேன். இந்த திருத்தம் மூலம் கனடாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு AIDS குறித்த சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை குறிப்பாக நோய் எதிர்ப்புத்திறனை வலுப்பட்டுத்தும் மருந்துகளை குறைவான விலையில் தயாரித்து விற்க முடியும்.

கனடாவில் உள்ள பல நிறுவனங்களின் தயாரிப்பு திறன் அதிகம். எனவே இந்தியா, பிரேசில், சீனா, கனாடா ஆப்பிரிக்காவின் தேவையை பெருமளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். வளர்ச்சியுற்ற நாடுகள் ஆகஸ்டில் எட்டப்பட்ட முடிவினை பயன்படுத்துவதில்லை என அறிவித்திருந்தன. இருப்பினும் கனடா இவ்வாறு முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

கனடாவில் ஜெனரிக் மருந்து தயாரிக்கும் தொழில் வலுவாக உள்ளது.எனவே அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் மருந்துகள் விலை குறைவு. மேலும் கனடாவின் இம்முடிவு கட்டாய லைசென்சிங்

முறையை பல ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்தி இறக்குமதி செய்து கொள்வதை எளிதாக்குகிறது.இந்த முடிவினை பல அமைப்புகள் வரவேற்றுள்ளன.பிரான்ஸ், பிரிட்டன் இதே போல் முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்.ஆனால் மருந்துத் தொழில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு இதற்கு தடையாக

இருக்கும்.ஒரு முன்மாதிரியாக கனடா இந்த விஷயத்தில் திகழ்கிறது.


Open Source போன்ற புதிய முறைகள்,கண்டுபிடிப்பு, அறிவு சார் சொத்துரிமைகள் குறித்து WIPO (World Intellectual Property Organisation) ஒரு மாநாட்டினை கூட்ட வேண்டும் என பல விஞ்ஞானிகள்,அமைப்புகள் கோரின.நோபல் பரிசு பெற்ற இரு நிபுணர்கள் உட்பட பலர் இதை ஆதரித்த்தால் WIPO ஒப்புக்கொண்டது. ஆனால் மைக்ரோ சாப்ட் Open Source மாதிரியை எதிர்க்கிறது. அமெரிக்காவின் உரிமங்கள்,வணிக முத்திரைகள் அலுவலகம்(PTO) இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த்து. எனவே WIPO இம்முயற்சியில் மேலும் அக்கறை காட்டவில்லை, மாநாடு நடத்த ஒப்புதல் தரவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குள்ளானது. இது WIPO வின் நோக்கத்திற்கு முரணானது என்ற அமெரிக்காவின் வாதம் விமர்சிக்கப்பட்டது.

இப்போது இது குறித்த முயற்சிகள் தொடர்கின்றன. அமெரிக்காவின் எதிர்ப்பினையும் மீறி இம்மாநாடு நடந்தால் அது Open Source ஐ ஆதரிப்போருக்கு வெற்றிதான். Open Source என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. மென்பொருள் மட்டுமன்றி மனித ஜீனோம் குறித்த தகவல் பரிமாற்றம்/பயன்பாடு போன்றவற்றிலும் இதை முன்மாதிரியாகக் கொண்டு சில முயற்சிகள் நடைபெறுகின்றன.


ரேடியோ அலைவரிசைகள் பொதுச்சொத்து என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறி சில ஆண்டுகள் ஆன பினும் இந்தியாவில் சமூக வானொலி துவங்க பல தடைகள் உள்ளன. அரை டஜன் அமைச்சங்கள்/துறைகள்

அனுமதி பெற்ற பின்னே துவங்க முடியும்.வணிக ரீதியான வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் பலவற்றிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சமூக வானொலிகளுக்கு ஒப்புதல் தர அரசு தயங்கக் காரணம் பிரிவினைவாதக் குழுக்கள், ஆயுதம் ஏந்தும் குழுக்கள் உள்ளதே என அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இது ஏமாற்று ஏனெனில் வானொலி மூலம் என்ன நிகழ்ச்சிகள் தரப்படுகின்றன என்பதை கண்டறிவது எளிது.

அனுமதி பெற்ற வானொலியின் அங்கீகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினால் ரத்து செய்ய முடியும்.அண்டை நாடான இலங்கையில் சமூக வானொலி நிலையங்கள் உள்ளன. அங்கும் ஆயுதம் ஏந்தும் குழுக்கள் உள்ளன. சமூக வானொலி இந்தியாவில் சிறப்பான பணிகளை ஆற்ற முடியும்.கல்வி, வேளாண்மை, சுகாதாரம் போன்ற துறைகளில் சமூக வானொலி அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க முடியும்.அரசின் அக்கறையின்மை தவிர இத்தகைய முயற்சிகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற அச்சமும் அரசு அனுமதி தருவதை எளிதாக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம்.


ravisrinivas@rediffmail.com

Series Navigation