- உயிர்த்திருத்தல்
- வளைந்து போன வீரவாள்
- தீவுகள்..
- அதீதப் புள்ளி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- பருவகாலம்
- நீள்கிறது கவலை
- பச்சை மிருகம்
- அவனது கவிதைகள்
- பிரிவோம்…சந்திப்போம்!
- தாயின் உயிர்க்கொடிகள்
- நான் மரணித்து விட்டேன்
- எது காதல் ?
- குடை வாசிக்கும் கவிதை
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- International Thirukkural Conference, July 8-10, 2005, Smith Auditorium, Howard Community College, 10901 Little Patuxent Parkway
- நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
- வாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005
புதியமாதவி.

சூடான வாடாபாவுக்காக
ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய்,
அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான்.
ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில்
சாலைவிதிகளை மறந்து
ஓடிவந்து
உன்னுடன் கலந்து
ஒன்றாக நனையலாம்தான்.
ஆடைகள் நனைந்துவிடுமே..
அச்சத்திலேயே
குளிர்காய்கிறது என் நெருப்பு.
**
உன்னோடு உன் குடையில்
உன்னோடு ஒரே மழையில்
ஒன்றாக நனையும்
ஒற்றை நிமிடத்திற்காய்
குடை மறைத்து வருகிறது
என் காற்று.
குடைவாங்கித்தந்துவிட்டு
குடைப்பிடித்தே நடக்கிறது
உன் கால்கள்.
குடைக்கிழித்து தடம்மாறிப்
புயலாகப் புறப்படுமோ ..என் காற்று!.
நடுக்கத்திலேயே கழிகிறது
இருட்டைக்கிழிக்கும் மின்னலுடன் மழை.
**
தலை நனைகிறது
குடைப் பிடிக்கிறாய்
உடை நனைகிறது
குடைப் பிடிக்கிறாய்
குடை நனைகிறது
நீயும் நனைகிறாய்..
இருந்தாலும்
குடைப்பிடித்தே நடக்கிறாய்
மழையில் நனையாமல்
நடக்கின்ற பாவனையில்
மழையை ஏமாற்றி
மனசை ஏமாற்றுகிறாய்!.
**
நனைக்கமறுத்த மழைத்துளிகள்
வெள்ளப்பெருக்காய்
வீடுடைத்து
காடுடைத்து
யாரைத் தேடுகின்றன ?
எதற்காக அலைகின்றன ?
காலம் தவறிக் கொட்டும்மழையில்
கல்லறைகள் நனைவதில்லை.
**
puthiyamaadhavi@hotmail.com