காத்திருத்தலின் கணங்களில்…

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

ராபின்


உங்களின் இரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருக்கையில்
நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள்
கடிகாரம் பார்த்து, தலை சிலுப்பி
காற்றைக் காலால் உதைக்கின்றீர்கள்
உதடுகளின் மடிப்பில் உங்கள்
எதிர்பார்பபை புதைக்க முயன்றீர்கள்
பின் முஷ்டி மடக்கி
இரும்புத் தூணில் குத்தவும் செய்கின்றீர்கள்
தூணிலும் உடலின் நரம்புகளிலும் பரவும்
அதிர்வுகளின் ஒத்திசைவு நாதத்தில்
ஆசுவாசமடைந்து தணிகின்றீர்கள்
அரவம் கேட்டு கண்கள் சுருக்கி
தொலைவில் பார்க்கின்றீர்கள்
முன்சென்ற ஆத்துமத்தின் குரல் உங்கள் மனதில்…
ஒன்று என் பஸ் வர வேண்டும்
அன்றேல்
என் இன்மை நிரப்பும்
பெண் வர வேண்டும்

— ராபின்
amvrobin@yahoo.com

Series Navigation