காதல் பூக்கும் காலம்

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

இ.இசாக்


*

நேற்று
நாம்
தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது
வியர்த்துவடிகையில்
புரிந்துக்கொண்டேன்
நான்
வயதுக்கு வந்துவிட்டேனென்று.
*

நீ
என்னைப்பற்றி விசாரித்தாய்
நான்
உன்னைப்பற்றி விசாரித்தேன்
இன்று
ஊரே
நம்மைப்பற்றி விசாரிக்கிறது.
*

உன்
பொய்க்கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மனம் வீசவா மறுக்கும்
மல்லிகை.
*

மிகவும்
ஆபத்தானதென்கிறார்கள்
புதைக்குழி
அடா..
உன்
கன்னக்குழியைவிடவா ?
*

என்னைக் கொளுத்திப்போட்டு
குளிர்காய்கிறாய்
நீ
இருந்தும்
உன்னை சூடேற்றுவதிலும்
சுகம் காண்கிறேன்
நான்.
*
27.10.2002/துபாய்

thuvakku@yahoo.com

Series Navigation