காகிதச்செடிகள்
ராம்ப்ரசாத்

அவர்களுள் யாரும்
விதவைகள் இல்லை…
வெகுபலர் பச்சை…
ஒரு சிலர் வெளிர் மஞ்சள்…
மரப்பிசின்களின் கருவறைகளில்
பிறந்துவிட்டு தூசிகளுக்கு
வாழ்க்கைப்பட்டவர்கள்…
ஈக்களின் சாபங்களில்
நிறைகிறது அவைகளின்
பிச்சைப் பாத்திரங்கள்…
காட்சிப்பிழைகளில் ஆயுளை
எண்ணிக்கொண்டிருக்கும்
தற்காலிக அழகிகள்…
– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)