கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

நீ “‘தீ”


சிங்கப்பூரகத்தில் உள்ள தமிழ் அமைப்பான கடற்கரை சாலை கவிமாலை அமைப்பின் 80வது (மாதாந்திர) நிகழ்வு 27.01.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள ஜாலன்பஜார் சமூகமன்றத்தில் நடைபெற்றது

முதிர்ச்சி எனும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள் தத்தம் கவிதையினை படைத்தனர்

சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர்.மறைமலை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிங்கப்பூர் சித்தார்தன் பேராசிரியர்.மறைமலையின் தந்தை பேராசிரியார்.இலக்குவனார் பற்றி பேசினார். இன்றும் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியம் வெகு தூரத்தில் உள்ளது. ஆனால் பேராசிரியார். இலக்குவனார் 1965ல் தொல்காப்பியம் பற்றி ஆராய்ச்சி செய்து பலத்த போராட்டதிற்கு பின் புத்தகவடிவில் வெளியிட்டதையும் கலைஞர் மு.கருணாநிதி படைத்த தொல்காப்பிய பூங்காவில் ஓர் இடத்தில் என் ஆசான இலக்குவனார் என கூறிஉள்ளதையும் தெரிவித்தார். மேலும் பேராசிரியார். இலக்குவனாரை தமில் மொழி போராளி வாழநாள் முழுவதும் பண்பாடு மொழி வரலாறு என அயராது பாடுபட்டதை நினைவுகூறினார். மேலும்பேராசிரியார். இலக்குவனார் தனக்கும் ஆசான் உன கூறி உரையை முடித்தார்.

கவிஞர் பிச்சனிகாட்டு இளங்கோ பேசியபோது 6ஆண்டு முடிந்து 7வது ஆண்டாக கவிமாலை வெற்றிகரமாக நடகிறது என்றும் கவிகோ அப்துல்ரகுமான் ஈரோடு தமிழன்பன் கவிஞர் விமர்சகர் பாலா என கலந்துகொண்டு சிறப்பித்த எமுத்தாளர்களை நினைவுகூர்ந்தார். பேராசிரியர்.மறைமலை 36 ஆண்டு காலம் பேராசிரியராக பணிபுரிந்ததையும் சென்னை பல்கலைகழகத்தில் பணிஆற்றி ஓய்வு பெற்றவிபரத்தையும் தெரிவித்தார்.

பேராசிரியர் மறைமலை அவர்கள் பேசியதில் என் மனதில் பதிந்தது உங்களுடன்.

மகாகவி பாரதி பற்றி கூறும் போது பாரதியார் புதுக்கவிதை எழுதவில்லை என்றும் அவர் மொழியாக்கம் செய்து தமிழில் எளியநடையில் எழுதியதை இங்கு சிலர் புதுக்கவிதை என கூறிவருவதாகவும் கூறினார். அவரிடம் உரைநடை எழுதும் எண்ணம் அதிகமிருந்தது என்றார். குயில் பாட்டு எந்தசூழ்நிலையில் பிறந்தது என்று விளக்கினார். பின் பாரதியை அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதன் என்று வர்ணித்தார்.

புதுக்கவிதை பற்றி கூறும் போது ஜரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டது அதன் பாதிப்பு எல்லா துறைகளிலுமிருந்தது. அந்த பாதிப்பு ஓவியம் கவிதையிலும் எற்படுத்தியது என்றார். புதுக்கவிதை காலத்துடன் இயைந்து வரகூடியதாகவும் நெகிழ்வுதன்மை கொண்டதாகவுமிருக்கவேண்டும் என்றார் நாட்டுப்புற இலக்கியததில் அதிகம் குறியீடுகள் படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உதாரணத்துடன் விளக்கினார் (ஒரு நெல்லை குத்தவெசச்சா வீடு பூறாம் தவிடாச்சு). மரபுநிலை சமுகத்தில் மதவெறி மூடப்பழக்கவழக்கம் மடமை முற்போக்கு கிளர்ச்சி இதர்க்;கு எதிராக எழுத ஆரம்பித்ததே புதுக்கவிதை என்றும் அப்படிப்பார்த்தால் பாரதிதாசன் எழுதியது புதுக்கவிதை என்றார். மேழும் அவர் காலகட்டத்தில் சம காலபுலவர்கள் சமுகநீதிக்கு போராடும் எண்ணத்தில் மக்களை சென்றடைய எழுதபட்டதே புதுக்கவிதை என்றார். 1960 காலகட்டம் கவிதை உலகின் பொற்ககாலம் என்றார் எழுத்து கணையாழி ஞானரதம் உள்ளிட்ட 15 இலக்கிய இதழ் வெளிவந்ததாகவும் கவிதையே இலக்கியம் என்றும் கவிதையின் தாக்கத்தை உரைநடைகள் ஏற்படுத்தாது என்றும் கூறினார். சுpற்பி மேத்தாவின் வருகை;கு பின் புதுக்கவிதையினை எல்லோரும் எழுத ஆரம்பித்ததாகவும் இன்று இளையர்கள் சுருக்கமாக எழுத முற்படுவதால் கைகூ கவிதை ஒரு வடிவம் பெற்றது என்றார்
பாவம் பசு
வுழிப்பறி செய்கின்றன
வைக்கோல் கன்றுகள்

அனைவருக்கும் கல்வி
மசோதா அரங்கேறியது
அமைச்சர் கைநாட்டு

மேலும் இன்று நம்மவர் மேலை நாட்டு கவிதையை நாடி அதிகம் படித்து புகழ்வதை அந்த நாடடு கவிதைக்கு மட்டும் இலக்கண இலக்கிம் யாப்பு சீர் இல்லையா என்று வினவி மேலை நாட்டவர் தான் இன்னும் நம்மிடம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார். திருக்குறள் ஆத்திச்சூடியை அவர்கள் ஊன்றிப்படிக்கும்போது அறிவர்.

இன்றய கால கட்ட கவிதை பற்றி கூறும் போது கவிதை மொழிக்கு பாலமாக இருக்க வேண்டும.; மொழிக்கு திரையாக இருக்ககூடாது என்றார். மேலும் ஒரு கவிதையை படிக்கும் போது பலர் பலவிதத்தில் புரிந்து கொள்வதே புதுக்கவிதையின் வெற்றி என்றார். ஒரு கவிதையை புரிந்து கொள்ள இயலாதபோது ஏன் தமிழில் எழுத வேண்டும் அதற்கு பதில் நாம் அஸ்ஸாம் ஆப்பிரிக்க கவிதையை படிக்கலாமே என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

பின்நவினத்துவம் தலித்தியம் பெண்ணியம் இவை எல்லாம் தமிழ் தேசியத்தை சிதைக்க வந்துள்ளதாகவே தோன்றுகிறது என்றார். சமுதாயம் எங்கே போகிறது? என்ற வினாவினை எழுப்பி இன்று பெண்எழுத்தாளர்கள் உறுப்பு சுதந்திரம் என்று கூறிக்கொண்டு இளைஞர்களை திசை திருப்புவதாகவும் அதே கவிதையை இன்று ஆண்கள் எழுதினால்? என கேள்விகுறியுடன் முடித்துவிட்டார். மேலும் பெண்ணியம் என சொல்லிக் கொண்டு எழுதி குடும்ப மரபையும் பெண்மையையும் சீர் குலைப்பதாக கூறினார். மேலும் அவர் ஆதிக்க எழுத்தாளர்கள் பற்றி கூறும் போது அவர்களால் சமுகநீதிக்கெதிராக வாள் ஏந்தி சமரசம் செய்ய முடியாது என்றும் இன்று அவர்கள் வேறு உடை தரித்து நம்மிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் கண்கட்டுவித்தை காட்டி செல்கின்றனர் என்றார் (எப்படித்தான் இவர்கள் எழுதினனாலும் இவர்களின் அன்ன வாசமிங்கே ஆசாபாசம் அங்கே)

புதுக்கவிதையின் 3 கூறுகளாக அவர் கூறியது 1. பிரம்மையை தகர்த்து எரிதல் 2.தொழில்நுணுக்க புத்தாக்கம் 3. திகைப்பூட்டும் கருத்துக்கள். என கூறி உரையை முடித்தார்.

குறிப்பு: 1986ல் இவர் எழுதிய புதுக்கவிதையின் தேக்க நிலை என்னும் நூல் வெளிவந்த ஆறுமாதகாலம் பத்திரிக்கைகளில் செய்தியாக இருந்தது எனறும் பலர் விமர்சித்ததும் இன்னும் சிலர் இப்புத்தகம் பற்றி சில பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதியதையும் நினைவு கூறுகிறேன்.

புதுக்கவிதை தேக்கநிலை புத்தகத்தின் சுருக்கம் 1. கிழி நாக்குகள் 2. வணிக காதல் 3. காகித முரசு

நட்புடன்
பகிர்வு: நீ ‘தீ”


hsnlife@yahoo.com

Series Navigation