கவிதை பிறக்கும்!

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

பாத்தென்றல்.முருகடியான்


பாம்படித்தால் பாவமில்லை!
பசுவடித்தல் பண்புமில்லை!
காம்பறுக்க அஞ்சிடுவான்
கனிசுவைக்கப் போவதில்லை!
வேம்படியில் தேனிறைத்தால்
விளாம்பழங்கள் காய்ப்பதில்லை!
நாம்படிக்க வில்லையென்றால்
நற்றமிழ்தாய் என்னசெய்வாள்?
தேம்பனுவல் படித்திடுங்கள்
தௌ;ளுதமிழ்க் கவிதைவரும்

பாத்தென்றல்.முருகடியான்

Series Navigation

பாத்தென்றல்.முருகடியான்

பாத்தென்றல்.முருகடியான்