கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

நிஸார் அகமது


கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான
தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை
சட்டவிரோதமானது
பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும் அவர்தம் குடும்பத்தின் மீது தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன் (அபீமுஅ)ஜமாத்
கடந்த 12-07- 2007 ம் தேதி முதல் ஊர்விலக்கம் சமூக புறக்கணிப்பை நடத்தி வருகிறது.இதற்கு காரணமாக மே 2007 உயிர்மை மாத இதழில் வெளிவந்த இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள் என்ற கட்டுரையாகும்
இக்கட்டுரையில் ரசூல் குரானியகருத்துப்படிபாலியல்குற்றம்,திருட்டுக்குற்றம் போல் குடியை தண்டனைக்குரியகுற்றமாய் சொல்லப்படவில்லை, வெறுக்கத்தக்கதாய் மட்டுமே சொல்கிறது,ஆனால் ஹதீஸ்களின்படி குடிக்கு தண்டனை உண்டு, மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் குடிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் முன்வைத்த கருத்துக்கள் என்பதான பிரச்சினைகளை வைத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த ஊர்விலக்கத்தை எதிர்த்து அபீமுஅஜமாத் மீது தொடரப்பட்ட வழக்கு எண் 231/2007.கடந்த நான்காண்டுகளாக பத்மனாப்புரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில்நடை பெற்றது. இதற்கு 12 – 04 – 2011 அன்று தீர்ப்புரை பகரப்பட்டது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக பெறப்பட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்டுள்ள இத்தீர்ப்புரையின் சில முக்கியப்பகுதிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

1)வாதியின் தன்னிலை விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் அபீமுஅ ஜமாஅத்தால் வாதிக்கு எதிரான எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் வாதியின் விளக்கம் ஏன் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதற்கு மேற்படி ஜமாஅத்தால் எவ்வித காரணமும் கூறப்படவில்லை.வாதிக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுப்பதற்கு முன் வாதியின் விளக்கத்தைக் கேட்டுள்ள ஜமாத் வாதியின் விளக்கம் ஏன் ஏற்கத்தக்கதல்ல என்பதற்கு எவ்வித காரணிகளையும் கூறாமல் வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது இயற்கை நெறியை மீறிய செயல் என்றும் சட்டவிரோதமானது என்றுமே இந்நீதிமன்றம் கருதுகிறது.
2) பிரதிவாதியின் சாட்சியம் வாதியையும், அவரது குடும்பத்தினரையும் பிரதிவாதிகள் ஜமாஅத்திலிருந்து சமூகவிலக்கம் செய்துல்ளனர் என்ற வாதியின் வழக்கை உறுதிபடுத்தும்வகையில் உள்ளது.வாதியின் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் பிரதிவாதிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டப்படி ஏற்கக் கூடியதாக இல்லை என்றே இந் நீதிமன்றம் கருதுகிறது.
3)வாதிக்கு எதிரான ஊர்நீக்க உத்தரவு வக்புவாரிய தீர்மானத்திற்கு எதிரானது என்று வக்பு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டபின்னரும் வாதிக்கு எதிரான மேற்படி ஊர்நீக்க உத்தரவை ரத்துசெய்யாததை பார்க்கும் போது வாதியின் மேல் உள்ள தனிப்பட்டவிரோதம் காரணமாக வாதிக்கு எதிராக பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற வாதியின் வாதம் ஏற்கத்தக்கதாக உள்ளது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது.இவ்வாறு அபீமுஅ ஜமாத் தன்னிச்சையாக வக்புவாரியத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டுல்ளதும் சட்டவிரோதமானது என்றே இந் நீதிமன்றம் கருதுகிறது.
4)இவ்வழக்கை விசாரிக்க வக்ப்வாரிய டிரிபியூனலுக்குத்தான் அதிகாரம் உண்டு என்பதற்கு எவ்வித சட்டவிதிமுறைகளும் பிரதிவாதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படாத நிலையில்பிரிவு 9 உரிமையியல் நடைமுறை சட்டத்தின்படி இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டு.வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரங்கள் வாதிக்கு கிடைக்கத்தக்கது.
5)தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன்(அபீமுஅ) ஜமாத் வாதியையும் அவரது குடும்பத்தினரையும் ஊர்நீக்கம் செய்துல்ளது சட்டவிரோதமானது,வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அரசியலமிப்பு உரிமைகளும் சிவில் உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன்.அபீமுஅவின் 12 – 07 – 2007 தேதியிட்ட ஊர்விலக்க உத்தரவு சட்டவிரோதமானது. வாதியயும் அவரது குடும்பத்தையும் பிரதிவாதிகள் ஊர்விலக்கம் செய்வதிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்காக இவ்வழக்கு விளம்புகை மற்றும் நிரந்தர தடை உத்தரவு கட்டளைப் பரிகாரம் கோரப்பட்டது.
6) முடிவாக இவ்வழக்கு வாதி கோரியபடி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி செலவுத்தொகையின்றி தீர்ப்பாணை பிறப்பித்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

Series Navigation

நிஸார் அகமது

நிஸார் அகமது