கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

எஸ். இராமச்சந்திரன்


நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தங்குடியில் தரங்கம்பாடி ஜெபமாலை மாதா கோயிலுக்குரிய கத்தோலிக்கக் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்குள்ள கல்லறைக் கல்வெட்டொன்று கி.பி. 1852ஆம் ஆண்டுக்குரியது. மொரீஷியஸ் தீவில், அரசாங்க மொழிபெயர்ப்பாளராக இருந்த சஞ்சீவிராயலு செட்டியார் என்பவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை என்ற விவரம் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கி.பி. 18-19ஆம் நூற்றாண்டைய பிரெஞ்சுத் தமிழ் ஆவணங்களில் இடம்பெறும் இந்திரப் பிரேத்து என்ற சொல்வழக்கு இக்கல்வெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது மொழிபெயர்த்துச் சொல்பவர் என்று பொருள்படும் Interpreter என்ற ஆங்கிலச் சொல்லுடன் தொடர்புடையதாகும். துபாஷ் எனப் பாரசீகமொழி வழக்கில் அழைக்கப்படும் பதவி இதுவே.

கல்வெட்டு வரிகள்:

1 பிரியமானவர்களே
2 மோரீசில்
3 இங்கிலீசிலும் இந்துஸ்த்தானியிலும்
4 பிராஞ்சிலும் இந்திரப் பிறேத்துமாய்
5 இலக்கண விலக்கியங்களில்
6 தேர்ந்தவருமாய்
7 பானு இராயப்ப
8 அருளப்ப செட்டியார்
9 குமாரருமாகிய
10 சஞ்சீவிராயலு
11 செட்டியாரை
12 இதனடியிலடக்கஞ்
13 செய்யப்பட்டிருக்கின்றன1
14 ? ??௫௰௨ ?வு ௨?௨2

அடிக்குறிப்புகள்:

1. இலக்கணப் பிழையுடன் எழுதப்பட்டுள்ளது.

2. 185ஆம் வருடம் ஆவுகஸ்து மாதம் 29ஆம் தேதி (29-08-1852).

(நன்றி: பழங்காசு, நாணயவியல் வரலாற்றியல் காலாண்டிதழ், இதழ் 13, நிறுவனர்: ப. சீனிவாசன், 1/385, சீதக்காதி தெரு, காட்டூர் (தெற்கு), திருச்சி-620019, தொலைபேசி: +91-431-2532043, ஓரிதழ் நன்கொடை ரூ. 25/- ஓராண்டு நன்கொடை ரூ. 80/-)

maanilavan@gmail.com

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்