கல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

நேச குமார்


இந்தியாவின் கல்விக்கோள் (EDUSAT) தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டுள்ளது. சென்றமாதம் (செப்டம்பர் 20) விண்ணில் செலுத்தப் பட்ட இக்கோள், இயங்குமுறைக்கு அக்டோபர் 20லிருந்து மாறத்தொடங்கும்.

பூமிக்கு மேலே 180 கிலோமீட்டர் உயரத்தில், கிட்டத்தட்ட இரண்டு டன் எடையுடன் சுற்றும் இதன் பிண்ணனியில் தொக்கி நிற்கும் இந்தியாவின் பெருமிதம் அளப்பற்கரியது. வளர்ந்து வரும் நாடுகளில், வேறு எந்த நாடும் இந்தியாவுடன் இவ்விஷயத்தில் ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாத சிகரத்தை நமது விஞ்ஞானிகளும், திட்ட வல்லுனர்களும் சாதித்துள்ளனர்.

பின்னோக்கிப் பார்க்கையில், இத்துறையில் நமது விரைவான பரிணாம வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இதற்கான வித்து, பதினோரு வருடங்களுக்கு முன்பு இடப்பட்டது. 1993ல் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகமும்(Indira Gandhi National Open University – IGNOU) இஸ்ரோவும் (Indian Space Research Organisation – ISRO) இணைந்து தொலைதூரக் கல்விக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு செய்தன. இக்னோ(IGNOU)வில், இஸ்ரோ ஒரு அப்லிங்க் டெர்மினலை நிறுவியவுடன் இரு வழி டியோ மற்றும் ஒரு வழி வீடியோ சேவை துவங்கியது( 2A & 1V Network).

1995ம் ஆண்டு இந்த நேஷனல் 2A&1V நெட்வொர்க்கின் மூலம், இக்னோவின் பயிற்சி மற்றும் தகவல் முன்னேற்ற சானல் துவங்கப்பட்டது. 2000 ம் ஆண்டில் இது விரிவுபெற்று க்யான் தர்ஷன் டெலிகாஸ்ட் சானல் ஆகப் பரிமளித்து, NCERT, IGNOU,UGC, NIOS போன்றவற்றின் அதிகாரபூர்வ தகவல் ஒளிபரப்பு சேவை இந்த சானலின் மூலம் நடைபெற்றது. இதையடுத்து 2002ல் இன்சாட் 1C விண்ணில் ஏவப்படவே, இக்னோவிற்கு அதில் இடமளிக்கப் பட்டது. இதன் மூலம் இரண்டு தனித்தனி சானல்களை ஐஐடிக்களுக்கும், யுஜிசிக்கும் இந்திராகாந்தி திறந்தவெளிப்பல்கலைக்கழகம் தயாரித்து அளிக்க உதவியது.

இந்நிலையில், நாடுதழுவிய ‘எல்லோருக்கும் கல்வி ‘ பரப்புச்செயல் திட்டம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆசிரியர்களை பயிற்றுவிப்பது, மகளிர் பயிற்றுவிப்புத் திட்டம், ஊனமுற்றோருக்கான விஷேச கல்விப் பயிற்சி முறை என்று துணைக்கோள் மூலம் பயிற்றுவிக்கும் முறைக்கான தேவை அதிகரிக்கவே கல்விக்கோளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்பட்டது. இஸ்ரோ, இக்னோ, மத்திய அரசின் உயர்கல்வித்துறை ஆகியன இணைந்து , இந்த கல்விக்கோளை அனுப்ப முடிவு செய்தன. குறைந்த காலத்தில், இக்குறிக்கோள் இஸ்ரோவால் சிறந்தமுறையில் செயல்படுத்தப் பட்டது.

தற்போது விண்ணில் சுழன்று கொண்டிருக்கும் இக்கல்விக்கோள், தொழில்நுட்ப ரீதியாக முன்னெப்போதும் இருந்ததைவிட பன்மடங்கு ஆற்றலையும், வசதிகளையும் அள்ளித் தரவிருக்கிறது. இதில், இரண்டு வழி பட வசதி (Two way Video – 2V), கேயூ(KU) பாண்டில் நேஷனல் பீம் தவ்ிர இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய 5 ரீஜனல் பீம்கள், ஏற்கனவே உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள விஸ்தீகரிக்கப்பட்ட சி பான் ட்(extended C band)வசதிகள் ,சாலைவசதியில்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய வசதி, டெலிகான்பரன்சிங், வானொலி மற்றும் இணையம் மூலம் ஒலிபரப்பும் வசதி ஆகியவை அடங்கும்.

முன்னெப்போதிலும் இல்லாத புதுமை இந்த இணைய இணைப்புக்கு உண்டு.512/ 384kbps ல் இக்கோள் அளிக்கும் இருவழி இணைய வசதியினால், வர்ச்சுவல் வகுப்புகள்(Virtual classrooms), டேட்டா பேஸ்களை அனுகும் வசதி, டியோ நெட்வொர்க்குகளை மூலை முடுக்குகள், காடு மேடுகள் எல்லாவற்றிலும் பரப்பும் வசதி கியவை ஏற்பட்டுள்ளன. புதிதாக உபயோகப் படுத்தப் படும் கேயு பாண்ட், ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள சி பாண்டைக்காட்டிலும் இரண்டரை மடங்கு பாண்ட்வித் கொண்டதாகும். கல்விக்கோள் முழுமையாகச் செயல் படும்போது , கிட்டத்தட்ட 74 டிவி சானல்களை நாம் துவங்கி உபயோகிக்கலாம். ரீஜனல் பீம்கள் உள்ளதால், ஒவ்வொரு மாநிலமும், தனக்கென ஒரு பிரத்தியேக சானலின் மூலம் கல்வியைப் பரப்ப, சிரியர்களை பயிற்றுவிக்க பயன்படுத்திக் கொள்ளளாம். கேயு பாண்டினால், உள்வாங்கும் டிஷ் அளவும் சிறிதாகிறது. எளிதில் அனுகமுடியாத மலைப்பகுதிகளிலும், இதன் மூலம் தொலைதூரக் கல்விச் சேவையை அளிக்க முடியும். கல்விக்கோளின் இரண்டாவது நிலையில் டி.டி.எச் (DTH) மூலம் பள்ளிகளே நேரடியாக தகவல்களைப் பெறும் வசதியும் ஏற்படும். தொலைபேசி மூலம் இணைப்பு, வெப்காமிராவை உபயோகப் படுத்துதல் போன்றவை இதனை எளியதாக்கும் வாய்ப்பு இருக்கிறது.டிடிஎச் இணைப்பு ஏற்பட்டவுடன் தொலைபேசி வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இணைய வசதி கிட்டும்.

இந்நிலையில், இவ்வசதிகளை நாம் முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்கிறோமா என்று கேட்டால், அது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. ஏற்கெனவே அப்லிங்க் வசதி இருக்கும் ஏழு மாநிலங்களில் நம் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்தும், சென்னையைத் தவிர ஐந்து இடங்களில் மட்டுமே(கன்யாகுமரி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கரூர்) இவற்றை இப்போது முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இயலும். இங்கும், பெரும்பாலும் அவை அரசு சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில், எக்ஸ்டென்டட் சி பாண்டை பயன்படுத்டிக்கொள்ள அப்லிங்க் மற்றும் தமிழகமெங்கும் இருநூறு வாங்கிக்கொள்ளும் கோளாங்கிகள் (Receive only Satellite Terminals) அமைக்கப் படவிருக்கின்றன என்று இஸ்ரோ தெரிவிக்கிறது. யினும், இது குறித்த தயாரிப்புகள் மிகவும் பின் தங்கியே உள்ளன. உதாரணத்திற்கு, கர்னாடகம் தவிர ஏனைய தென்மாநிலங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்வது குறித்த முடிவு எதையும் எடுக்கவில்லை. வன்பொருள் சம்பந்தமான பிரச்சினைகளும் ங்காங்கே இன்னும் தீர்க்கப் படாமலேயே இருக்கின்றன.

தொழில்நுட்ப சமாச்சாரங்களை விடவும் முக்கியமானது அவற்றின் மூலம் ஒளிபரப்பப்படும்/

பரிமாறிக்கொள்ளப்படும் / இறக்கிக் கொள்ளப்படும் விஷயங்கள். இவ்விஷயத்தில், தேசிய அளவிலும் கூட இன்னும் நிகழ்சிகள் தயாரிப்பு, இணையத்திற்கான கன்ட்டென்ட் ஆகியவற்றில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். இணையத்திற்கான டேட்டா பேஸில் தனியார் பங்களிப்பையும், கமர்சியலைஷேஷன் பற்றியும் இஸ்ரோ யோசித்தாலும் கூட, அது உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சாரமாக அரசியல் கட்சிகளாலும், ஏனைய அமைப்புகளாலும் திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக இதுவரை எந்த முடிவும் இது குறித்து எடுக்கப் படாததாக தெரிகிறது.

இப்போது உடனடியாக செய்ய வேண்டியது:

1. மென்பொருள் தயாரிப்பு (நிகழ்சிகள் மற்றும் இணைய டேட்டா பேஸ்களுக்கான கண்டென்ட்.)

2. எளிய செலவில் வன்பொருள் ( அனுப்பும், வாங்கும் தகவல் மையங்கள்) தயாரிப்பு.

3. கல்வி நிறுவனங்களையும், பள்ளிகளையும் பயன்படுத்திக் கொள்ள வைப்பது.

ஆனால், இணைய வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால்,

மேற்குறிப்பிட்ட அனைத்து பகுதிகளிலும், தனியார் துறையையின் உதவியைக் கொள்வது மிகவும் அவசியம். தனியார் துறையின் பங்களிப்பையும், வியாபார ரீதியிலான அணுகுமுறைகளையும் அனுமதித்தால் தான், இவ்வசதி விரைவாக, எளிமையாக அனைவரையும் சென்றடையும். இக்கேள்விகளுக்கு இப்போதைக்கு பதில்கள் எதுவும் தெரியவில்லை. கல்விக்கோள் இரண்டாம் கட்டத்தை அடைந்து முழுமையாக செயல்படும் போதுதான் இப்பிரச்சினைகள் முன்னுக்கு வரும் , அதற்குள் அனைத்து அரசுத் துறைகள், நிறுவனங்கள் இணைந்து இச்சவால்களை எதிர்கொள்ளாக வேண்டும். இல்லையேல், பெருமை கொள்ளத்தக்க இச்சாதனை, பின் புலமாக இருந்த எண்ணற்ற விஞ்ஞானிகளின் உழைப்பு முடங்கிப் போய் உதாசீனப்படுத்தப் படும் அபாயம் உள்ளது.

– நேச குமார் –

Nesa_kumar2003@yahoo.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்