அதிரை தங்க செல்வராஜன்
“நாராயணா நல்ல கதி கொடு”.
நினைவு நிலையாய் இல்லை. கால், கை அசைக்க முடியவில்லை. மரணம் நெருங்கிவிட்டது, பயமோ, பயமின்மையோ தெரியவில்லை. ராமசாமி செட்டியார் கண்ணை திறக்க முயற்சித்து முடியாமல், கத்திக் கூப்பிடுவதாக நினைத்துக் கொண்டு வாயில் எச்சில் ஒழுக விட்டார். செட்டியார் ஆத்திகருமில்லை, நாத்திகருமில்லை.சாகறப்போ கிருஷ்ணரை நெனைச்சா மீன்டும் பொறப்பில்லைன்னு, எப்பவோ சின்ன வயசுல கோயிலில் கதை கேட்டது. இப்போதெப்படி நெனைப்பு வந்துச்சுன்னு
தெரியல.
திருச்சிற்றம்பலத்தில் இறங்கி வல்லாங்கை பக்கம் ஒன்னரை மைல், வரப்பு மேல நடந்தா மடத்திக்காடு குக்கிராமம் வரும். அக்னி ஆத்துக்கும் காவிரியின் கிளை நதிக்கும் நடுவே ஐம்பது வீடுகள் கொண்ட கிராமத்தின், முதல் வீட்டின் திண்ணையில் போடபட்டிருந்தார். யார் சொல்லியும் அந்த கூரை வீட்டை, ஓடாகவோ, மச்சாகவோ மாற்ற அவர் சம்மதித்தில்லை. வீட்டைச்சுற்றி அவர் வைத்த தென்னை மரங்களும் வாசலில் வெயில் வராமல் மறைத்து நிற்கும் ஒட்டு மாமரமும், வேலியோரத்து வேப்பமரங்களும் அசையாது அவரை பார்த்தன. வாசலில் கட்டுக்கம்பை சுற்றி சுற்றி கயிறை அறுப்பது போல் வெறித்து கத்திக் கொண்டிருந்தது மாடு.
குளுக்கோஸ் கரைத்த நீரை சொட்டு சொட்டாக இருவர் உதவியோடு உள்வாங்கினார்.
படுக்கையில் பதிந்த உடம்பின் பகுதிகளில் அங்கங்கே காய்ந்தும்,
காயாமலும் புண். புண்ணைச்சுற்றிலும் எறும்பு. எறும்பு ஊரும் உணர்வு இல்லை.
தம்பிக்கு, தொண்டைக்கும் வயித்துக்கும் இழுத்திட்டிருக்கு, சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிடுங்கப்பா, செட்டியாரின் ஒரே அக்கா.
புள்ள குட்டி இல்லாத உன்னை விட்டுட்டு போய்டுவேனோன்னுதான் பயமாயிருக்குன்னு சொன்னியே, பேச்சு மூச்சில்லாம கெடக்கிறியே, நான் நாதியெத்து போ போறேனே, அழுகையினூடே, கொஞ்சம்
காபிதண்ணி கொண்டாடி, தலைவலி உயிர் போவுது என்றவாரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்.
உள்ளவங்களுக்கு உபகாரம் பன்னவே நேரத்தை காணும், இதுல
இவுங்க வேற படுத்துறாங்க, செட்டியார் ஆச்சி முனகி கொண்டே
எழுந்து போனார்.
என்ன மாப்ளே, டாக்டர் ராத்தாங்காதுன்னாரே எப்படி இருக்காக மாமா? செட்டியாரின் மூத்தமகன், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார். இழுத்துக்கிட்டுதான் கெடக்கு.
சரி மாப்ளே ஆச்சிக்கிட்டே கேட்டு செட்டியாரு போட்டோ ஒன்னு
வாங்கிட்டு வா.
எதுக்கு?
பசங்க நோட்டீசு அடிக்கனும்கிறாங்க, அதுக்குத்தான். சாகாமல், கண்ணீர் அஞ்சலி நோட்டீசில் செட்டியார் சிரித்துக் கொண்டிருந்தார். ·ப்ளெக்ஸ்ல அடிச்சா தூளா இருக்கும் மாப்ளே, என்ன கொஞ்சம் காசுதான் கூட போகும்.
நாளு பூரா போனதுதான் மிச்சம், மனுசன் விடுவேனான்னு இழுத்து பிடிச்சுக்கிட்டு இருக்காரு சம்பந்தி கிழவி பட்டும் படாமலும் முனுமுனுத்தது.
அடியே பித்தளை படியையும், அரிக்கன்சட்டியையும் வெளக்கி போடு.ஒரு படி நெல்லெடுத்து தனியா வை. துணிமணிய மடிச்சு ரூமுக்குள்ளே போடு.நல்ல விளக்கெ எடுத்து வை. செட்டியாராச்சி மருமகள்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
மாமா போறத்துக்கு, இது போச்சுன்னாலும் மனுசாளுக்கு சித்த நிம்மதியாயிருக்கும்.மருமகள் வெளியே சொல்லமுடியாம மனசுக்குள் பொருமினாள்.
ஏந்தம்பி, வெட்டியான் வீட்டுல முறத்தை கவுத்து போட்டா பொனம் விழும்னு சொல்லுவாக, ஒரு எட்டு போய் சொல்லிட்டு வாறீயா? செட்டியார் மகனுக்கு எரிச்சல் தாங்கலை, என்ன எளவு மூட நம்பிக்கைடா இது, இருந்தாலும் மறுக்க முடியவில்லை. அப்பாவின் கஷ்டம் பார்க்க சகிக்கலை.
ஏம்பா, எங்க மாமியாருக்கு இப்படித்தான் இழுத்துச்சு, நல்லெண்ணையை தேச்சு குளிக்க ஊத்துன ஒரு மணி நேரத்தில போய் சேர்ந்துட்டாங்க.
சாவுங்கிறது அதுவா வரனும், நம்மளா கொல்லவா முடியும்? அப்படி கொன்னா பாவமில்லையா?
பாவமுமில்லை, புண்ணியமுமில்லை போயி பெரியாத்தாவ கூட்டிட்டு வா, இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கெறத எத்தினி நேரம் பாக்குறது. அவருக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டம்.
ராவெல்லாம் நாய்படை ஊளைச் சத்தம் தாங்கலை, மவராசன் போயிருப்பாகன்னு நெனைச்சேன், பாம்படம் ஆட வந்த பெரியாத்தா வெத்தலை எச்சிய ஓரமா துப்பிட்டு செட்டியாரின் தலைமாட்டில் உக்காந்தார்.
கோவணத்தை கட்டி ஸ்டூல்ல உக்கார வச்சு ரப்பர் பொம்மைய குளிக்க ஊத்துன மாதிரி நல்லெண்ணை குளியலாச்சு, இழுப்பு மட்டும் கொறையல. மனுசனுக்கு இன்னும் என்ன ஆசை கிடந்து இழுக்குதோ யாருக்கு தெரியும்.
எலேய் பெரியவனே கொஞ்சம் பால் கொண்டு வந்து ஊத்துடா, பால் க்டக், க்லஹ்ல என்ற சத்தத்தோடு உள்ளே போனது. கழுத்த புடிச்சு நெறிச்சு கொல்றதுக்கும் இதுக்கும் என்னம்மா வித்யாசம், அழுது கொண்டே வெளியே போனான்.
அட இந்த புள்ளெ ஊத்துன பாலுலதான் போவல, அவர் வச்ச தென்னம்புள்ளேலேந்து ரெண்டு இளநி பறிச்சுட்டு வந்து ஊத்துங்கப்பா, தன்னாலெ போவும்.
செட்டியார் கைலியிலிருந்து வேஷ்டிக்கு மாறியிருந்தார், நெற்றியில் விபூதி பட்டை இழுவை சற்று மட்டுபட்டது போலிருந்தது. லோட்டாவில் வந்த இளனியை பெரியாத்தா செட்டியாரின் வாயில் வழிய வழிய ஊத்த கடக் என்ற சத்தத்தோடு நின்று போனது.
எப்ப சாவார்னு இருந்த சனம், அய்யோ ராசா விட்டுட்டு போய்டியே என்று அழத் தொடங்க, செட்டியார், காலில் மிதிபட்ட எறும்பு போல் கிடந்தார்.
- ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9
- அச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)
- இருளைக் கடப்பதுதான் தைரியமா?
- துயரம் ஒரு வரைபடம்
- ” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”
- ‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.
- கடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- திரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.
- அறுபடும் மரணங்கள்….
- யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?
- அக்னிக்கூத்து – நாடக அறிமுகம்
- Dear Editor,
- தமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி
- நிர்வாண நடனம்
- அறிதல்..
- மூன்று கவிதைகள்
- பாலாவை இழந்த கணங்களில்…
- நண்டு சொன்ன `பெரியவங்க` கதை
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- கருணை கொலை
- சுழற்பந்து
- அநாகரிகமான விவகாரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- நினைவுகளின் தடத்தில் – (33)
- ஓரினசேர்க்கை
- தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்
- அத்துமீறல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை
- வேத வனம் விருட்சம் – 41
- யாருக்கும் பொதுவான
- கவிதைகள்
- மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்
- அறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்