This entry is in the series 20070628_Issue

தாஜ்



கதை ஒன்று எழுதனும்…..
சூரியன் சந்திரன் கிரகங்கள்
வானம் பூமி ஜனனம் மரணம்
சொர்க்கமும் நரகம்
ஜாதி மதம் பூதம் ரத்தக் காட்டேரி
பேய் பிசாசு – நம்ம
சின்னசாமி பெரியசாமி
மாடச் சாமி
சாமி சாமி ஸ்வாமி
சாமியாடி நம்ம கருப்புசாமி
மனுஷன் மனுஷி சைத்தான்
தலைவன் தலைவி பைத்தியம்
ஊடல் மோகம் காமம்
காதல் கத்தரிகாய்
என் படிம மனிதர்கள்
வென்றெழுதி விட்டார்கள்
காணக் கிடக்கிறது
கைவண்ணங்களின்
கதை முயற்சி
நான் எழுத
பார்த்து எழுதும்
நான்தான் பாக்கி.

*********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation