கணையாழியில் நான் கண்டது

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

நீ”தீ”


பாரட்டுகளும் விமர்சனங்களும் வரவேற்க்கதக்கதே. விமர்சனங்கள் குறைகளை சுட்டிக்காட்டி நிறைவான பாதைக்கு அழைத்து செல்வதாக அமையவேண்டும்.

கணையாழியில் நான் கண்டது

நிகழ்வின் சிகரம் திரு.சித்தார்தன் இருக்கஇ நிகழ்சியின் சிகரமாய் அமைந்த சில நிகழ்வுகள் உங்களுடனே………

திரு.இனியதாசன், திரு.முத்துகுமாரின் பாடல்கள் நல்வரவேற்பை பெற்றதுஇ சிறப்பு விருந்தினரும் இக்கருத்தையே வலியுறுதினார்.

கவிஞர் சேவகன் தலைமையில் நடைபெற்ற கவிமாலையில் கவிஞர்கள் கண்ணன், திருமுருகன், அழகுராஜா, சின்னபாரதி, நான் உள்ளிட்ட கவிசகோதரர்கள் அவரவர் பார்வையில் நட்சதிரமாய் மின்னினர். கவிஞர் சேவகன் அவர்களும் அவருக்கே உரிய நையாண்டி கலந்த தொணியில் அறிமுகபடுத்தியும்இ விமர்சித்தும் இன்னும் அழகுபடுத்தினார்.

கவிமாலையின் சிறப்பே கலைஞர்களை அடையாளம் கண்டுகொண்டு வாயப்;புகொடுத்து வளரசெய்வதேஇ இதற்கு சான்று 75வயது முதியவரை கொரவபடுத்தியது.

பெண்கவிஞர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருட்டடிப்பு செய்யபட்டே வருகின்றனர்.
விதிவிலக்கு கவிமாலை.

கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கமே சான்று.

கவிஞர் மலர்விழி இளங்கோவன் கவிஞர் மாதங்கி தவிர்த்து எனக்கு அனைவருமே புதுமுகம். கவிஞர் இன்யாஇ கவிஞர் சரண்யாவின் பேச்சுக்கள் சிறப்பாக அமைந்தன. என் நண்பர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். கவிஞர் சரண்யாவின் பேச்சுக்களால் கவியரங்கம் இன்னும் அழகுபெற்றது. கவிஞர் மாதங்கி அவர்களின் பேச்சுக்கள் என்றும் தனி மகுடமே. கவிஞர் மலர்விழி இளங்கோவன் அவர்களும் திறம்படவே செய்தார். இவரது பேச்சுகளால் கேட்டுணர்தவர்களின் மனது நிரம்பியிருக்க வேண்டும். கவியரங்க முடிவில் என் ஊர் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.

முக்கனி, முத்தமிழ் , மூவேந்தர் போல

கவிமாலை பிறக்க முக்கவிகள் காரணம்

ஆனால் கணையாழி நிகழ்வில் களபணியாற்றிய முக்கவிஞர்களை சொல்லவேண்டும். கவிஞர் பிச்சனிகாடு இளங்கோ மற்றும் ந.வீ சகோதரர்கள். ந.வீ சகோதரர்கள இரட்டைபிறப்போ என நான் எண்ணியது உண்டு, காரணம் இரட்டையர்களின் குணாதிசயங்கள், எண்ணங்கள்தான் 95% ஒத்துபோகுமாம்.

கவிஞர் பிச்சனிகாடு இளங்கோ அவர்களை குறிப்பிட்டே சொல்லியாக வேண்டும். அங்கும், இங்கும் ஓடி என்னை ஒத்த இளைஞனாக காட்டிக்கொண்டார். மேலும் திரு. சித்தார்தன் பேசும் போது அவரின் பேச்சுகளை நாங்கள் செவிமடுக்க கவிஞர் பிச்சனிகாடு அவர்கள் மைக்கை ஏந்திகொண்டது அவரை குழந்தையாகவே மாற்றியது. ( ஆம் கவிதை இளமையானது, கவிதை குழந்தையிடமிருந்துதான் பிறக்கிறது).

முன்வரிசை தேடி அமர்வர் மத்தியிலே கவிஞர் அன்பழகன் பின்னே அமர்ந்து இருந்து பேச்சாளர்களின் பேச்சுகளை நாங்கள் உள்வாங்கஇ நண்பர் முத்துகுமாரிடம் ஆலோசனை வழங்கிய விதமும், விருது நாயகரை அறிமுகபடுத்தியதையும் நினைவுகூறுகிறேன்

புரியாத புதிர்
புதிர் போட்டி நடந்திருந்தால் 20 நிமிடம் காலவிரயம் ஆகியிருக்கும்.
இந்த போட்டியை தமிழ்முரசுவில் வெளியிடளாமே?

சிறப்பு விருந்தினர் கவிஞர் பாலாவின் பேச்சுகள்இ நான் கண்டு ரசித்த கவிஞர்களிலிருந்து வித்தியாசபடுத்தி காட்டியது. காலத்தை சுருக்கிஇ பிறர் காலத்தை சுருக்கி கவிஞர் பாலாவின் பேச்சுகளை பெருக்கிகாட்டியிருந்தால் இன்னமும் மகிழ்திருப்பேன்.

இவ்;வளவையும் சொல்லிவிட்டு ஒன்றை மட்டும் மறந்துவிடுவேனா என்ன?

என் பார்வையில் முதல் சிகரம்

கவி கோ. இளங்கோவின் “ இசை நாட்டியத்தில் இலக்கியம’ “

திரு.ஸ்டாலின் கவிதையை நேசித்து வாசித்தது நாட்டியத்தின் கம்டபீரத்தை அதிகரித்தது எனலாம். இதில் சிறப்பு கவி கோ. இளங்கோ தவிர அனைவரும் புதுமுகமேஇ நண்பர் பிரபு நிகழ்சியின் முதல்நாள் தான் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடதக்கது. நாட்டியத்தில் கவி கோ. இளங்கோ வெளிவந்த தருணம் எல்லோரையும் கவர்ந்ததுஇ அதற்கு அரங்கம் நிறைந்க கரவொலியே சான்று. ( இந் நிகழ்வின் முதல் வாரத்தில்தான் கவி கோ. இளங்கோ சிலப்பதிகாரத்தை எளிய நடையில் எழுதி நாட்டிய வடிவில் மலேசியாவில் அரங்கேற்றம் செய்யபட்டதை நினைவு கூறவேண்டும்)

நிகழ்வுகள் பதிவுசெய்யபடவில்லைஇ இதை நேரிடையாகவே வெளிகாட்டினேன். இன்னும் கொஞ்சமாய் நாம் முயன்றிருக்க வேண்டும்.

நிகழ்வுகள் பதிவுசெய்யபடவில்லை என்பதைவிட கவி கோ. இளங்கோவின் “ இசை நாட்டியத்தில் இலக்கியம’ பதிவுசெய்யபடாததே என்னில் வருத்ததை அளித்தது.

நன்றி
நட்புடனே
நீ”தீ”

Series Navigation