கணினி வலையம் (Computer Network)

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும் தவழ இருக்கிறது. தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக தொலைபேசி, மின்சாரம் போல் கணினி வலையமும் இவ்வுலகம் முழுதும் விரைவில் பரவ உள்ளது. இரயில் வண்டி நிலையத்தில் பயணச் சீட்டுகளை கணினி வழி முன்பதிவு செய்வதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்தும், வேறு எந்த இரு நகரங்களுக்குமிடையே பயணம் செய்ய பயணச்சீட்டை முன்பதிவு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக இருபது நாட்கள் கழித்து சென்னையிலிருந்து புது தில்லிக்குப் பயணம் செய்ய, இன்று மைசூர் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடிகிறது. இது இப்போதைய நிலை.

விரைவில் இச்செயலை இரயில் நிலையம் செல்லாமல் நம் வீட்டிலிருந்துகொண்டே செய்யப் போகிறோம். இந்த அதிசயத்தின் தொழில்நுட்பப் பின்னணி என்ன ?

தனிநபர் கணினி (personal computer – pc) வேறு கணினிகளுடன் இணைக்கப்படும்போது அது பல வியத்தகு செயல்களைச் செய்வதைக் காணலாம். இத்தனிநபர் கணினி மூலம் உலகின் எம்மூலையில் உள்ளவருக்கும் கடிதங்களை, தகவல்களை அனுப்பலாம்; ஒளிப்படங்கள், நகர்படங்கள், ஏன் இசையையும் கூட அனுப்பலாம்; தேவையான புத்தகங்களை, பொருட்களை விலைக்கு வாங்கலாம்; பணம் அனுப்பலாம், பெறலாம். நம் வீட்டை விட்டு வெளியே செல்லாமலே இவையனைத்தையும் செய்ய இயலும். அடுத்து ஒரு கட்டிடத்தில், ஒரு ஊரில், நகரத்தில், நாட்டில் ஏன் உலகின் எப்பகுதியிலும் உள்ள கணினிகளை ஒன்றோடொன்று ஒருங்கிணைக்க முடியும். இவ்விணைப்பு கம்பி மூலமோ, ஒளியிழைகள் (optical fibres) மூலமோ, துணைக்கோள்கள்கள் (satellites) மூலமோ நடைபெறக்கூடும். எனவே கணினி வலையம் என்பது பல கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதைக் குறிக்கும் என்பதை அறிவோமாக. ஒரு குறிப்பிட்ட கட்டிடம், அலுவலகம், வங்கி போன்ற இடங்களில் உள்ள ஒரு சில கணினிகளை மட்டும் இணைக்கும் வலயத்தை குறும்பரப்பு வலையம் (Local Area Network – LAN) என்பர். மிகப்பரந்த இடத்தில் அமைந்துள்ள ஏராளமான கணினிகளை இணைக்கும் வலையம் பெரும்பரப்பு வலையம் (Wide Area Network – WAN) எனப்படும். இவ்வலையமைப்பு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தவர் அல்லது அமைப்பினர் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்குமானல் அதனை அக இணையம் (Intranet) என்பர். உலகத்தில் யார் வேண்டுமானாலும் அணுகக்கூடிய முறையில் எண்ணிறந்த கணினிகளைத் தொடர்பு படுத்தும் அதாவது பல கணினி வலையங்களை ஒருங்கிணைக்கும் வலைய அமைப்பு, இணையம் (Internet) எனப் படுகிறது.

2

கணினியைப் பயன்படுத்தும் சாதாரணப் பயனாளருக்கு மேற்கூறிய தொழில்நுட்பக் கலைச்சொற்களைப் பற்றி ஏதும் தெரிந்திராவிட்டலும், இணையப் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடான உண்மை. இணையத் தொழில் நுட்பம் என்பது கடந்த பல ஆண்டுகளாக LAN, WAN போன்றவற்றில் இருந்து விளைந்த அறிவியல் முன்னேற்றமே. மிக விரைவில் மேற்கூறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையப் பயன்பாடு என்பது கம்பி இணைப்புத் தொலைக்காட்சி (Cable TV) போல அனைவர் இல்லங்களுக்கும் வரப்போவது உறுதி.

வலையத்தின் வன்பொருள்கள்

ஒரு தனி நபர் கணினி (pc) சாதாரண நிலையில் பிற கணினிகளுடன் இணைக்கப் பெறுவதற்குரிய எல்லா வசதிகளையும் பெற்றிருப்பதில்லை. மற்றொரு கணினியுடன் இணைய அல்லது ஒரு வலையத்தில் இடம்பெற அதற்குச் சில கூடுதல் வசதிகள் தேவை. பல கணினிகளின் மையச் செயலகங்கள் (central processing unit – cpu) வட்டுகள் (disks) ஆகியவைகட்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் பலவழித் தொடர் தகவல்களை ஒரு வழித் தொடர் தகவல்களாக மாற்றவேண்டும். இத்தகவல்களின் சமிக்கைக் குறியீடுகள் (signals) நீண்ட தூரப் பரிமாற்றத்திற்கு ஏற்ற வலிமையுடையதாக ஆக்கப்படவேண்டும். இதற்குத் துணை புரியும் வன்பொருளாக அமைவன வலைய இடைமுக அட்டை (network interface/adapter card – nic) அல்லது மோடம் (modem) ஆகியவை. இவற்றை கணினிக்கு உள்ளேயும் பொருத்தலாம் அல்லது தனியாகவும் இணைக்கலாம். தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கான கணினிகள் மோடத்துடனும் பெரிய அலுவலகங்களின் பயன்பாட்டிற்கான கணினிகள் வலைய இடைமுக அட்டை (nic) உடனும் இணைக்கப் பெறுகின்றன.

இரு கணினிகளை இணைப்பதைப் பொறுத்தவரை வலைய இடைமுக அட்டையும், மோடமும் ஒரே பணியைச் செய்கின்றன எனினும், இரண்டின் செயல் முறையிலும் வேறுபாடு உள்ளது. மோடம் மேற்கூறிய இணைப்புப் பணியுடன் அனுப்புபவர் கணினியிலிருந்து இலக்கமுறை சமிக்கைகளை (digital signals) தொலைபேசிக் கம்பி வழியாக அதிர்விணக்கம் (modulation) செய்து ஒப்புமை சமிக்கைகளாக (anolog signals) அனுப்புகிறது. காரணம் தற்போதைய தொலைபேசிக் கம்பிகள் ஒலியலைகளின் அலைவெண் (frequency) அளவே கொண்ட மின் அலைகளை அனுப்புவதற்கேற்ற வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெறுபவர் கணினியிலுள்ள மோடமானது ஒப்புமை சமிக்களை மீண்டும் இலக்கமுறை சமிக்கைகளாக அதிர்விணக்க மீட்பாக்கம் (demodulation) செய்யும் பணியையும் மேற்கொள்ளுகிறது. எனவே மோடமும் வலைமுக அட்டையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதில்லை. அடுத்து மோடத்தின் விரைவுத்தன்மையும் குறைவு.

3

கம்பியில்லா மோடம் பயன்படுத்தப்படாத நிலையில் இரு கணினிகளைத் தொடர்புப் படுத்துவதற்கு, ஊடகம் ஒன்றும் தேவைப்படுகிறது. இவ்வூடகம் வழியாகவே மின்காந்த அலைகள் செல்லுகின்றன. பெரும்பாலும் ஒரு கணினியின் மோடம் அல்லது வலைய இடைமுக அட்டையை தொலைபேசி இணையத்துடன் இணைக்க செப்புக் கம்பியே பயன் படுத்தப்படுகிறது. அடுத்த முனையிலுள்ள கணினியுடன் தொலைபேசி வலையத்தை இணைக்க பொருத்தி (adaptor) அல்லது செலுத்து-வாங்கி (transceiver) கருவி பயன்படுத்தப் பெறுகிறது. பல கணினிகளை உள்ளடக்கிய வலையத்தில் ஒவ்வொரு கணினியும் குவியன் (hub) எனும் இணைப்பு மையத்தில் இணைக்கப்பெறுகிறது. அண்மையில் ஒளியிழைகள் (optical fibres) இவ்வூடகப் பணிக்கு சிறப்பானதாகக் கருதப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பல கணினிகள் இம்முறையில் இணைக்கப்பட்டு ஒரு கணினிப் பயனாளர் தேவையான தகவல்களையும், செய்திகளையும் பிற கணினிப் பயனாளர்களுடன் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.

நீண்ட தூரங்கட்கிடையேயுள்ள மிகப்பெரிய எண்ணிக்கையிலான கணினிகளைக் கொண்ட ஏராளமான வலையங்களை இணைப்பதற்கு வேறு சில சாதனங்களும் தேவைப்படும். அவை மறுவுருவாக்கிகள் (repeaters), இணைப்பான்கள் (bridges), வழிப்படுத்திகள் (routers), நிலைமாற்றிகள் (switches), நுழைவாயில்கள் (gateways), ஆகியனவாகும். மறுவுருவாக்கி என்பது செய்தித்தொடர்புகளில் அனுப்பப்படும் தகவல்களின் மின்சமிக்கைகள் வலிமை குறைந்து போகும்போது அவற்றின் வலிமையை மறுவுருவாக்கம் செய்து பெரிதுபடுத்துகிற ஒரு சாதனமாகும். இணைப்பான் என்பது பல்வேறு வலையங்களை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனைச் சுற்றினை உருவாக்கும் அமைப்பு. இது தேவையானவற்றை மட்டும் அனுமதிக்கும் ஒரு வாயில்காவலனைப் போன்று மேலும் பணிபுரிகிறது. வழிப்படுத்திகளும், நுழைவாயில்களும் தொலைபேசி மையங்களைப் போன்று விளங்குகின்றன. இவற்றுள் வழிப்படுத்தியானது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வலையங்களை இணைப்பதுடன், தகவல் பொதிவுகளை சரியான பாதையில் அனுப்புவதற்கும் துணை செய்கிறது. நிலை மாற்றியானது ஒரு குவியனைப் போன்று பல வலையங்களைக் கட்டுப்படுத்துகின்றது. வலையத்தின் திறனைப் பராமரிப்பதில் இதற்குப் பெரும் பங்கு உள்ளது. இணையம் போன்ற மிகப் பெரும் வலையத்தில் நிலைமாற்றியின் பங்கு இன்றியமையாதது. நுழைவாயிலானது இரண்டு வலையங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் இணைப்பாக விளங்குகிறது எனலாம். இவ்விரண்டுள் ஒன்று குறும்பரப்பு வலையமாகவும் (LAN) மற்றொன்று முதன்மைப் பொறியமைவுக் கணினியால் (Main Frame Computer) கட்டுப்படுத்தப்பெறும் பெரும் வலையமாகவும் இருக்கும். இந்தியாவில் இணையப் பயனாளர் ஒருவரின் கணினிக்கு VSNL நிறுவனம் உலக வலையத்தின் நுழைவாயிலாக விளங்குவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும் இந்நுழைவாயில் யூனிக்ஸ் (unix) போன்ற ஓர் இயக்க அமைப்பைப் (operating system – os) பயன்படுத்தும் சேவையகத்திற்கும் (server) விண்டோஸ் என் டி (Windows NT) போன்ற வேறோர் இயக்க அமைப்பில் பணியாற்றும் மற்றோர் சேவையகத்திற்கும் இடையே தகவல் பரிமாற்ற வசதியையும் செய்து தருகின்றது.

4

வலையக் கட்டமைப்பு

பல கணினிகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு வலையத்தை உருவாக்கப் பல வழிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் வன்மை மென்மைகள் உள. இவ்வழி முறைகளுள் மிகவும் சாதாரணமானது நேரடித் தொடர்பு வலையம் (peer to peer network) ஆகும். இம்முறையில் இணைக்கப்படும் எல்லாத் தனிநபர் கணினிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை; மற்றும் அவைகட்கிடையே மிகுதியாக அடிக்கடி தகவல் பரிமாற்றம் நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் எல்லாக் கணினிப் பயனாளர்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே தகவலைத் தேடினால் – எடுத்துக்காட்டாக வங்கி ஒன்றின் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் வங்கி இருப்பை ஒரே நேரத்தில் காண விரும்பினால் – இவ்வலைய அமைப்பு திருப்தியாகப் பணியாற்றாது. காரணம் வலைய இணைப்புக் கம்பியானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியின் சமிக்கைகளை மட்டுமே எடுத்துச் செல்ல இயலும்; எல்லாக் கணினி சமிக்கைகளையும் எடுத்துச் சென்றால் அவை ஒன்றோடொன்று குறுக்கிட்டு குழப்பமே மிஞ்சும்.

ஒரு கணினி வலையத்தில் பல கணினிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியுடன் தொடர்பு கொள்ள விரும்புவது இயற்கையே. அத்தருணத்தில் பல்வேறு கணினிகளின் சமிக்கைகளுடைய உடன் நிகழ்வுப் பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டியதாகிறது. இத்தகைய வலைய அமைப்பை ஒரு வகுப்பறையிலுள்ள மாணவர்களுடன் ஒப்பிடலாம். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் தங்கள் கருத்தைக் கூற விரும்பினால் குழப்பமே மிஞ்சும். எனவே பேச விரும்புகிற மாணவர்கள் கையை உயர்த்தினால் ஆசிரியர் அனைவர்க்கும் ஒழுங்கு முறையாக வாய்ப்பளிப்பார். அனைவர் கருத்தும் எல்லோர்க்கும் விளங்கும். இத்தகைய ஆசிரியர் போன்றே வலைய இடைமுக அட்டையும் பிற கணினிகளுடன் தொடர்பு கொள்வதற்குத் தகுதியான வழிமுறைகளைக் கையாளுகிரது. தற்போது கையாளப் பெறும் வழிமுறைகளுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஊர்தி உணர் பல் அணுக்கம் (Carrier Sense Multiple Access – CSMA)/மோதல் அறிதல் (Collision detect–CD) என்பதாகும். இம்முறையில் வலைய இடைமுக அட்டை அதனுடன் இணைக்கப் பட்டிருக்கும் கம்பி (cable) மூலம் செல்லும் செய்திகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும். ஏதேனும் சமிக்கைகளை அனுப்பவேண்டியிருப்பின் கம்பியில் போக்குவரத்து குறையும் வரை காத்திருக்கும். ஆனால் ஏதேனும் இரு கணினிகள் தங்கள் முறைக்காகக் காத்திருந்து ஒரே நேரத்தில் சமிக்கைகளை அனுப்பினால் இரண்டும் ஒன்றோடொன்று மோதி அதனால் விளையும் புது சமிக்கை இரு கணினிகளின் சமிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்கும். இந்நிலையில் வலைய இடைமுக அட்டை கணினி சமிக்கைகளின் தவறுகள் நீங்கும்வரை தனது சமிக்கைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருக்கும். இதனால் பல கணினிகள் வேறோர் கணினியுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் காலதமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது.

5

ஒரே கணினித் தகவல்களைப் பல கணினிப் பயனாளர்கள் பெறவேண்டுமெனில் பயனர் – சேவையர் வடிவமைப்பு (client – server configuration) மிகவும் சரியானதாக இருக்கும். இவ்வடிவமைப்பில் இணைக்கப்பெறும் பல கணினிகளைப் பயனர்களாகவும், தகவல்களைத் தரும் ஒரு கணினியைச் சேவையராகவும் கருதலாம். இந்த ஒரு கணினி மூலம்தான் பிற அனைத்துக் கணினிகளுக்கும் தேவையான தகவல்கள் அனுப்பபெறும்; இவ்வமைப்பை ஒரு தொலைபேசி மையத்தில் (telephone exchange) இணைக்கப் பெறும் பல தொலைபேசிகளுடன் ஒப்பிடலாம். கணினி வலையத்தில் சேவையர் (server) எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கும்; ஒவ்வொரு சேவையர்க்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பெறும்; ஒரு குறிப்பிட்ட சேவையர் அச்சடிக்கும் பணியையும், வேறொன்று அஞ்சல்களை அனுப்பவும், மற்றுமொன்று அஞ்சல்களைப் பெற்று உரிய பயனர்க்கு அனுப்பிடவும், இன்னுமொன்று கோப்புச் சேவையராகவும் (file server) இவ்வாறு பலபணிகளைச் செய்யலாம். எனவே பயனர்-சேவையர் வலையமானது ஒரு சேவையரை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்றில்லை; மாறாக குறிப்பிட்ட பணிகளுக்கென ஒதுக்கப்பெற்ற பல சேவையர்கள் தமக்குள் ஒன்றோடொன்றும், பல பயனர் கணினிகளுடனும் இணைக்கப் பெற்றிருக்கலாம்.

அடுத்து கணினி வலையம், வளைய வடிவமைப்பு (ring configuration), விண்மீன் வடிவமைப்பபு (star configuration), பாட்டை வடிவமைப்பு (bus configuration) எனப் பல வகைகளில் அமைந்திருக்கும். வளைய வடிவமைப்பில் கணினிகள் ஒன்றோடொன்று முடிவுற்ற கொக்கி வடிவத்தில் இணைக்கப்பெற்றிருக்கும். இவ்வமைப்பில் ஒரு கணினி சமிக்கைகளை அனுப்பினால் வலையத்தில் உள்ள அடுத்த கணினிக்கு அவை அனுப்பப்பெறும். இச்சமிக்கைகள் அக்கணினிக்கு உரியவை அன்று எனில் அடுத்த கணினி, அதற்கடுத்த கணினி எனத்தேடி உரிய கணினிக்கு அனுப்பப்பெறும். அடுத்து இவ்வமைப்பில் கணினிகள் ஒன்றோடொன்று நேரடியாக இணைக்கப் பெறுவதில்லை; மாறாக ஒவ்வொரு கணினியும் (பயனர் அல்லது சேவையர் எதுவாக இருப்பினும்) குவியனுடன் (hub) இணைக்கப்பெறும்; இக்குவியனுள்தான் வளையம் (ring) உள்ளது. விண்மீன் வடிவமைப்பில் ஒரு மையக் கணினி அல்லது சேவையர் (central computer or server) மேற்கூறிய குவியனுக்குப் பதிலாக அமைக்கப் பெற்றிருக்கும். பாட்டை (bus) அல்லது நேரியல் (linear) வடிவமைப்பில் எல்லாக் கணினிகளும் ஒரு குறிப்பிட்ட பாட்டையில் இணைக்கப்பெறும்; எந்த ஒரு கணினியின் சமிக்கையும் பாட்டை வழியாகவே செல்லும். பிற கணினிகளும், அச்சுப்பொறி, வருடி போன்ற சாதனங்களும் அச்சமிக்கைகள் தமக்குரியவைதானா எனச் சோதித்து அறிந்துகொள்ளும். பாட்டையின் இரு முனைகளும் முடிப்பான் (terminator) என்ற கருவியில் இணையும்.

பயனர்-சேவையர் வலைய அமைப்பில் சேவையராகப் பணிபுரியும் கணினி, ஒரு சாதாரண தனி நபர் கணினியாக (pc) இருப்பினும் அதன் சேவை மிகப் பெரிதும், முக்கியமானதும், வேறுபட்டதுமாகும். பயனர் கணினிகள் நீண்ட நேரம் காத்திருப்பதற்கில்லை; எனவே சேவையர் கணினி மிகக்குறைந்த கால அளவில் ஏராளமான பணிகளைச் செய்யவேண்டியுள்ளது. இதற்காக சேவையர் கணினிகளில் மிகுந்த கடிகார வேகம் (clock speed) கொண்ட மையச் செயலகங்களைப் (central processing units – cpu) பொருத்துவர். சில சேவையர் கணினிகள் பன்முகச் செயலிச் சில்லுகளையும்

6

(multiple microproceessor chips) கொண்டிருப்பதுண்டு. மேலும் வட்டுகளிலிருந்து (disks) தகவல்களை விரைந்து பெறுவதற்கு தனி நபர் கணினிகளில் இருப்பதைவிட சேவையர் கணினிகளில் அதிகமான நேரணுகல் நினைவகங்கள் (RAM) இருக்கும். இதற்காகவென்றே தனிவகையான வன்தட்டுகளையும் பயன்படுத்துவர். பொதுவாக சேவையர் கணினி வன்பொருட்கள் (hardwares) மிகவும் உறுதி வாய்ந்தைவையாக இருக்கும். எடுத்துக்காட்டாக சேவையர் கணினிகளில் பல் ஆற்றல் வழங்கு கட்டகங்கள் (multiple power supply modules) பல் மையச் செயலகங்கள் (multiple CPUs), விரைந்து செயற்படும் பல் வன்தட்டு இயக்கிகள், சிறப்பான குளிரூட்டும் அமைப்பு ஆகியன அமைக்கப் பெற்றிருக்கும். சேவையர் கணினியில் ஏதேனும் பிழை/தவறு நேர்ந்தால் அதைப் பயன்படுத்தும் நிறுவனமே பெரும் இழப்புக்கு உட்பட நேரிடும். எல்லா வேலைகளும் நிலைகுலைந்து போகும். இதைத் தவிர்க்கும்பொருட்டே மேற்கூறியவாறு சேவையர் கணினிகள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் சேவையர் கணினியின் விலை, சாதாரணத் தனிநபர் கணினியின் விலையை விடப் பன்மடங்கு அதிகமாகிறது.

வலையத்தின் பல கருவிகளையும் இணைப்பதற்கு மூன்று வகையான கம்பிகள் (cables) பயன் படுத்தப்படுகின்றன. அவை முறையே முறுக்கு இணைக்கம்பி (twisted pair cable), ஒன்றிய அச்சுக்கம்பி (co-axial cable), ஒளியிழைக்கம்பி (fiber optical cable) என்பன. முறுக்கு இணைக்கம்பி என்பது தொலைபேசி மையத்துடன் தொலைபேசியை இணைக்கப் பயன்படுத்தப்படும் கம்பியை ஒத்தது; விலை மலிவானது; மெதுவாகச் செயல் படுவது; ஒலியைத் தவிர்க்க இயலாததால் அதிக பிழை வீதத்திற்கு (error rate) உள்ளாவது. கம்பி இணைப்புத் தொலைக்காட்சியில் பயன் படுத்துவதைப் போன்றது ஒன்றிய அச்சுக்கம்பியாகும். இதன் உட்பகுதியில் ஒரு கம்பியும், அதைச் சுற்றி மின்காப்பு (insulation material) உறையும், அதையும் சுற்றி ஒலி புகாமல் காக்கும் வண்ணம் ஒலிகாப்பு உறையும் இருக்கும். ஒன்றிய அச்சுக் கம்பியின் மூலம் அனுப்பப்படும் செய்தி, முறுக்கு இணைக்கம்பியின் மூலம் அனுப்பபடும் செய்தியைவிட விரைந்து செல்லும். இறுதியாக ஒளியிழைக் கம்பியானது பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி இழைகளால் ஆனது; இவ்விழை மனித மயிரிழையை விட மெல்லியது. ஒளி புகுவதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் இந்த இழையைச் சுற்றிக் காப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் அனுப்பப்பெறும் தகவல்கள் விரைந்தும், பிழையின்றியும், நம்பகத்தன்மையுடனும் செல்லும். மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான சமிக்கைகளையும் அனுப்ப இயலும். செப்புக் கம்பியின் விலையைவிட, ஒளியிழைக் கம்பியின் விலை கூடுதல் என்பது உண்மையே; இருப்பினும் அண்மைக்காலமாக இதன் விலை குறைந்து வருவதால் விரைவில் செப்புக்கம்பியின் இடத்தை ஒளியிழைக்கம்பி பிடித்துவிடும் என நம்பலாம்.

இன்றுவரை பயனர்-சேவையர் கணினி வலையத்தில் உள்ள பயனர் கணினியானது செயலி, இயக்க அமைப்பு (operating system – os), வன் வட்டு ஆகிய அனைத்தும் கொண்ட தனிப்பட்ட ஒரு கணினியாகவே இருந்து வருகிறது. இவ்வமைப்புகள் ஏதுமில்லாத ஒரு கணினியைப் பயனர் கணினியாகப் பயன்படுத்தும் நிலை விரைந்து உருவாகி வருவதும் உண்மை. இவ்வகைப் பயனர் கணினியை மென்பயனர் (thin client) எனபர். இந்த மென்பயனர் இண்டெல் 386 செயலியும்,

(7)

4 மெகா பைட் நேரணுகல் நினைவகமும் கொண்ட மிகச் சாதாரணமான ஒரு பொதுக் கணினியாகும்; வன்தட்டு, நெகிழ்வட்டு இயக்கி (floppy drive) ஆகியவை எதுவும் தேவையில்லை. ஆனால் இம்மென்பயனர்கணினி எல்லாக் கணினிகளையும் போன்று அச்சுக்கருவி (printer), வருடி (scanner), மோடம் போன்ற வன்பொருட்களைப் பயன்படுத்துவதுடன், வேர்ட், எக்செல், ஆக்செஸ் போன்ற மென்பொருட்களையும் விண்டோஸ் 98 ஐயும் கூட பயன்படுத்துகின்ற வகையில் இருக்கும். இதன் ரகசியம் வேறொன்றுமில்லை; எல்லாக் கணிப்புச் செயல்களையும் சேவையர் கணினியே மேற்கொள்ளுவதுதான் இதற்குக் காரணம். மேலும் மென்பயனர் கணினிகளைப் பயன்படுத்துவோர்க்கு மென்பொருட்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டிய தேவையுமில்லை; சேவையர் கணினியைக் கையாளும் ஒருவரே இவையனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்வார். இத்தகைய அமைப்பை நிறுவியுள்ள நிறுவனத்திலுள்ள எல்லாக் கணினிகளிலும் வன்பொருட்கள்/மென்பொருட்கள் ஆகியவற்றை அவ்வப்போது மேம்படுத்த வேண்டிய தேவையுமில்லை.

தரவுப் பாதுகாப்பு (Data Security)

ஒரே கணினியைப் பலர் பயன்படுத்தும்போது, கணினியில் சேமிக்கப்படும் செயற்பாடுகள், தகவல்கள், முடிவுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். வலையங்களில் நிறுவப்படும் சில இயக்க அமைப்புகள் முடிந்த அளவுக்கு பாதுகாப்பைத் தருகின்றன. ஒவ்வொரு கணினிப் பயனாளரும் இதற்காகக் கடவுச் சொல்லை (pass word) உருவாக்கிப் பயன்படுத்தலாம். இச்சொல்லைப் பயன்படுத்தாமல் கணினியைத் துவக்கவே இயலாது. மேலும் ஒவ்வொரு பயனாளருக்கும் கணினி வன்வட்டில் குறிப்பிட்ட அளவு இடத்தை ஒதுக்கியும் தரலாம். இவ்விடத்தில் தன்னுடைய கோப்புகளை (files) பயனாளர் சேமித்து வைத்துக்கொள்ள இயலும். பயனாளர் விரும்பினால் தனது கோப்புகளை மற்றப் பயனாளர்கள் திறந்து படிக்கும் உரிமையை/அனுமதியை வழங்க முடியும். இவ்வாறு பயன்படுத்தும் பிற பயனாளர்கள் அக்கோப்புகளைப் படிக்க மட்டுமே கூடும்; உரிமையாளரின் அனுமதியின்றி அவற்றை நீக்கவோ, மாற்றவோ, அழிக்கவோ இயலாது.

பயனர்-சேவையர் வலையத்தில் இணைக்கப் பெற்றிருக்கும் சேவையர் கணினிகள் மற்றும் பயனர் கணினிகளை நிர்வகிப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும் உயரளவு அதிகாரமும் உரிமையும் பெற்ற வலைய நிர்வாகி (network administrator) ஒருவர் இருப்பார். ஒரு குறிப்பிட்ட பயனர் கணினியில் பிழை ஏதேனும் ஏற்படுமானால்– அக்கணினியில் அடங்கியுள்ள தரவுகளையும் தகவல்களையும் பார்வையிடாமல்– பிழைகளைக் கண்டறிந்து களைவதே இந்நிர்வாகியின் பணி. புதிய பயனாளர்களை அனுமதிப்பதும், ஒரு குறிப்பிட்ட பயனாளரின் கடவுச்சொல்லைப் பாதுகாப்பதும்கூட இந் நிர்வாகியின் கடமையேயாகும்.

***

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை(தமிழ்)

மண்டலக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570023.

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD Dept. of Language Education (Tamil) Regional Institute of Education (NCERT) MYSORE 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

கணினி வலையம் (Computer Network)

This entry is part [part not set] of 11 in the series 20010122_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

1

இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும் தவழ இருக்கிறது. தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக தொலைபேசி, மின்சாரம் போல் கணினி வலையமும் இவ்வுலகம் முழுதும் விரைவில் பரவ உள்ளது. இரயில் வண்டி நிலையத்தில் பயணச் சீட்டுகளை கணினி வழி முன்பதிவு செய்வதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்தும், வேறு எந்த இரு நகரங்களுக்குமிடையே பயணம் செய்ய பயணச்சீட்டை முன்பதிவு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக இருபது நாட்கள் கழித்து சென்னையிலிருந்து புது தில்லிக்குப் பயணம் செய்ய, இன்று மைசூர் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடிகிறது. இது இப்போதைய நிலை.

விரைவில் இச்செயலை இரயில் நிலையம் செல்லாமல் நம் வீட்டிலிருந்துகொண்டே செய்யப் போகிறோம். இந்த அதிசயத்தின் தொழில்நுட்பப் பின்னணி என்ன ?

தனிநபர் கணினி (personal computer – pc) வேறு கணினிகளுடன் இணைக்கப்படும்போது அது பல வியத்தகு செயல்களைச் செய்வதைக் காணலாம். இத்தனிநபர் கணினி மூலம் உலகின் எம்மூலையில் உள்ளவருக்கும் கடிதங்களை, தகவல்களை அனுப்பலாம்; ஒளிப்படங்கள், நகர்படங்கள், ஏன் இசையையும் கூட அனுப்பலாம்; தேவையான புத்தகங்களை, பொருட்களை விலைக்கு வாங்கலாம்; பணம் அனுப்பலாம், பெறலாம். நம் வீட்டை விட்டு வெளியே செல்லாமலே இவையனைத்தையும் செய்ய இயலும். அடுத்து ஒரு கட்டிடத்தில், ஒரு ஊரில், நகரத்தில், நாட்டில் ஏன் உலகின் எப்பகுதியிலும் உள்ள கணினிகளை ஒன்றோடொன்று ஒருங்கிணைக்க முடியும். இவ்விணைப்பு கம்பி மூலமோ, ஒளியிழைகள் (optical fibres) மூலமோ, துணைக்கோள்கள்கள் (satellites) மூலமோ நடைபெறக்கூடும். எனவே கணினி வலையம் என்பது பல கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதைக் குறிக்கும் என்பதை அறிவோமாக. ஒரு குறிப்பிட்ட கட்டிடம், அலுவலகம், வங்கி போன்ற இடங்களில் உள்ள ஒரு சில கணினிகளை மட்டும் இணைக்கும் வலயத்தை குறும்பரப்பு வலையம் (Local Area Network – LAN) என்பர். மிகப்பரந்த இடத்தில் அமைந்துள்ள ஏராளமான கணினிகளை இணைக்கும் வலையம் பெரும்பரப்பு வலையம் (Wide Area Network – WAN) எனப்படும். இவ்வலையமைப்பு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தவர் அல்லது அமைப்பினர் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்குமானல் அதனை அக இணையம் (Intranet) என்பர். உலகத்தில் யார் வேண்டுமானாலும் அணுகக்கூடிய முறையில் எண்ணிறந்த கணினிகளைத் தொடர்பு படுத்தும் அதாவது பல கணினி வலையங்களை ஒருங்கிணைக்கும் வலைய அமைப்பு, இணையம் (Internet) எனப் படுகிறது.

2

கணினியைப் பயன்படுத்தும் சாதாரணப் பயனாளருக்கு மேற்கூறிய தொழில்நுட்பக் கலைச்சொற்களைப் பற்றி ஏதும் தெரிந்திராவிட்டலும், இணையப் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடான உண்மை. இணையத் தொழில் நுட்பம் என்பது கடந்த பல ஆண்டுகளாக LAN, WAN போன்றவற்றில் இருந்து விளைந்த அறிவியல் முன்னேற்றமே. மிக விரைவில் மேற்கூறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையப் பயன்பாடு என்பது கம்பி இணைப்புத் தொலைக்காட்சி (Cable TV) போல அனைவர் இல்லங்களுக்கும் வரப்போவது உறுதி.

வலையத்தின் வன்பொருள்கள்

ஒரு தனி நபர் கணினி (pc) சாதாரண நிலையில் பிற கணினிகளுடன் இணைக்கப் பெறுவதற்குரிய எல்லா வசதிகளையும் பெற்றிருப்பதில்லை. மற்றொரு கணினியுடன் இணைய அல்லது ஒரு வலையத்தில் இடம்பெற அதற்குச் சில கூடுதல் வசதிகள் தேவை. பல கணினிகளின் மையச் செயலகங்கள் (central processing unit – cpu) வட்டுகள் (disks) ஆகியவைகட்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் பலவழித் தொடர் தகவல்களை ஒரு வழித் தொடர் தகவல்களாக மாற்றவேண்டும். இத்தகவல்களின் சமிக்கைக் குறியீடுகள் (signals) நீண்ட தூரப் பரிமாற்றத்திற்கு ஏற்ற வலிமையுடையதாக ஆக்கப்படவேண்டும். இதற்குத் துணை புரியும் வன்பொருளாக அமைவன வலைய இடைமுக அட்டை (network interface/adapter card – nic) அல்லது மோடம் (modem) ஆகியவை. இவற்றை கணினிக்கு உள்ளேயும் பொருத்தலாம் அல்லது தனியாகவும் இணைக்கலாம். தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கான கணினிகள் மோடத்துடனும் பெரிய அலுவலகங்களின் பயன்பாட்டிற்கான கணினிகள் வலைய இடைமுக அட்டை (nic) உடனும் இணைக்கப் பெறுகின்றன.

இரு கணினிகளை இணைப்பதைப் பொறுத்தவரை வலைய இடைமுக அட்டையும், மோடமும் ஒரே பணியைச் செய்கின்றன எனினும், இரண்டின் செயல் முறையிலும் வேறுபாடு உள்ளது. மோடம் மேற்கூறிய இணைப்புப் பணியுடன் அனுப்புபவர் கணினியிலிருந்து இலக்கமுறை சமிக்கைகளை (digital signals) தொலைபேசிக் கம்பி வழியாக அதிர்விணக்கம் (modulation) செய்து ஒப்புமை சமிக்கைகளாக (anolog signals) அனுப்புகிறது. காரணம் தற்போதைய தொலைபேசிக் கம்பிகள் ஒலியலைகளின் அலைவெண் (frequency) அளவே கொண்ட மின் அலைகளை அனுப்புவதற்கேற்ற வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெறுபவர் கணினியிலுள்ள மோடமானது ஒப்புமை சமிக்களை மீண்டும் இலக்கமுறை சமிக்கைகளாக அதிர்விணக்க மீட்பாக்கம் (demodulation) செய்யும் பணியையும் மேற்கொள்ளுகிறது. எனவே மோடமும் வலைமுக அட்டையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதில்லை. அடுத்து மோடத்தின் விரைவுத்தன்மையும் குறைவு.

3

கம்பியில்லா மோடம் பயன்படுத்தப்படாத நிலையில் இரு கணினிகளைத் தொடர்புப் படுத்துவதற்கு, ஊடகம் ஒன்றும் தேவைப்படுகிறது. இவ்வூடகம் வழியாகவே மின்காந்த அலைகள் செல்லுகின்றன. பெரும்பாலும் ஒரு கணினியின் மோடம் அல்லது வலைய இடைமுக அட்டையை தொலைபேசி இணையத்துடன் இணைக்க செப்புக் கம்பியே பயன் படுத்தப்படுகிறது. அடுத்த முனையிலுள்ள கணினியுடன் தொலைபேசி வலையத்தை இணைக்க பொருத்தி (adaptor) அல்லது செலுத்து-வாங்கி (transceiver) கருவி பயன்படுத்தப் பெறுகிறது. பல கணினிகளை உள்ளடக்கிய வலையத்தில் ஒவ்வொரு கணினியும் குவியன் (hub) எனும் இணைப்பு மையத்தில் இணைக்கப்பெறுகிறது. அண்மையில் ஒளியிழைகள் (optical fibres) இவ்வூடகப் பணிக்கு சிறப்பானதாகக் கருதப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பல கணினிகள் இம்முறையில் இணைக்கப்பட்டு ஒரு கணினிப் பயனாளர் தேவையான தகவல்களையும், செய்திகளையும் பிற கணினிப் பயனாளர்களுடன் எளிதில் பறிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.