நாகூர் ரூமி
அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்.
ஒரு உதவி வேண்டி இக்கடிதம் எழுதுகிறேன்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இஸ்லாத்தைப் பற்றிப் படித்ததையும் கேட்டதையும் என் மண்டைக்குள் போட்டு வைத்ததையும் அடிப்படையாக வைத்து, பல standard நூல்களின் உதவியுடனும், ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் ‘என்ற தலைப்பில் ஒரு நூலை ஒரு ஆறுமாத காலம் உறக்கமின்றி உழைத்து எழுதி முடித்தேன்.
தமிழ் அறிந்த அனைவரும் இந்த நூலைப் படித்து இஸ்லாத்தைப் பற்றிய ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியும். இஸ்லாத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் கொண்ட முஸ்லிம்களுக்கும் இது மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும்.
இஸ்லாத்தைப் பற்றி இந்த உலகம் எந்தெந்த விஷயங்களிலெல்லாம் தவறாக எண்ணிக்கொண்டிருக்குமோ அதிலெல்லாம் ஒரு தெளிவை இந்த நூல் ஏற்படுத்தும். உதாரணமாக திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதம் என்பது முஸ்லிம்களுடைய நம்பிக்கை ஆனால் மற்றவர்கள் இதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இந்த நூலைப்படித்தால், அது வெறும் நம்பிக்கையல்ல, நிரூபிக்க முடிகின்ற ஒரு மறுக்கமுடியாத உண்மை என்பது புரியும்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல
திருமறை இறைவனால் அருளப்பட்ட வேதம்
அது புனித பைபிளில் இருந்து காப்பியடிக்கப்படதல்ல
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற உரிமைகள்
போன்ற முக்கியமான அனைத்து விஷயங்களுக்கும் ஒரு Reference work ஆகவும் இந்த நூல் பயன்படும்.
அதேசமயம், அலுப்பூட்டாத விதத்தில் அனைவரும் படிக்குமாறு எழுதியுள்ளேன்.
இது என்னுடைய 11வது புத்தகம். என்னுடைய மிகச்சிறந்த படைப்பு இதுவாகத்தான் இருக்கும். ஒரு திருப்தியுடன் இறப்புக்குப்பின் இறைவனைச் சந்திக்க ஒரு ஏற்பாட்டை இந்த நூலின் மூலமாக என் வாழ்நாளிலேயே செய்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.
இந்த நூலை வாங்குவதும், வாங்கிப் படிப்பதும், வாங்கி அன்பளிப்பு செய்வதும், இதைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் நிச்சயமாக ஒரு நல்ல அமலாக, இஸ்லாமிய சேவையாக இருக்கும். இந்த விஷயத்தை நானே சொல்கிறேனே என்று எண்ண வேண்டாம். ஒரு உரிமையில் எழுதுகிறேன். ஆனாலும் நான் சொல்வது உண்மை.
இந்த நூலைப் படித்துவிட்டால் இஸ்லாத்தைப் பற்றிய தரமான நூல்கள் ஒரு 100ஐப் படித்த மாதிரி. அதோடு, அந்த நூல்களில் இல்லாத பல விஷயங்களும் இதில் உண்டு.
புத்தகம் வெளி வந்துவிட்டது. ரொம்ப அழகான முறையில், பார்ப்பவர் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் விதத்தில் International Standard-இல் கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் பதிப்பாசிரியர் எழுத்தாளர் பா.ராகவன் கொண்டுவந்திருக்கிறார்.
புத்தகம் 536 பக்கங்கள்.
விலை இந்திய ரூபாய்கள் 200 /-
இந்த நூலை
Kizhakku Pathippagam
16, Karpagambal Nagar
Mylapore
Chennai – 600 004
Tel : 044 – 52009601 / 52009602 / 52009603
Fax : 52009604
Email : sales@newhorizonmedia.co.in
என்ற முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து எத்தனை பிரதிகள் முடியுமோ அத்தனை பிரதிகளை கூரியர் பண்ணச் சொன்னால் ராகவன் செய்துவிடுவார். அல்லது மேற்கொண்டு அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்.
புத்தகத்தை வாசித்த பிறகு ஒரு கூட்டம் போட்டு விவாதியுங்கள்.
இன்னும் என்னென்ன வழிகளில் இதை பரவலாக அறியவைக்க முடியுமோ செய்யுங்கள்.
எனக்கு இது சம்மந்தமாக ஒருவரி பதில் போட்டால் ரொம்ப மகிழ்வேன்.
நூலின் அட்டைப்படத்தை கீழ்க்கண்ட எனது ப்ளாக்-கில் பார்க்கலாம் :
அன்புடன்
நாகூர் ரூமி
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- வசந்தம் காணா வாலிபங்கள்
- வாழ முற்ப்படுதல்….
- ரம்…ரம்மி…ரம்யா
- வெள்ளைக் குதிரை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- பெண்கள் சொத்துரிமை
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- அணிந்துரைகள்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- கவிதை உருவான கதை-3
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- ஹலீம்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- தாயே
- நீயும்…
- இரு கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 4
- எல்லை!
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- இறுதி சில நொடிகளில்
- உன் நினைவுகள்
- அறைகூவல்!
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- காடுகளால் ஆன இனம்
- விட்டில் என்றொரு பொய்
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- பிசாசின் தன் வரலாறு-2
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- எழில் எது ?
- அவரே சொல்லி விட்டார்
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- தொழில்நுட்பச் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16
- இழப்பு