This entry is in the series 20100312_Issue

வே பிச்சுமணி


காக்கா கூட்டில் காக்காகுஞ்சின் அலகு
வெளியில் பசியுடன் நீட்டிகொண்டு
நீள அலகில் இரைவருமென
செவ்வாய் பிளந்து கிடக்கிறது

காற்றுபோன அடிகுழாய் ஒன்றில்
நீர்ஊற்றி நீர் வரும்
நீர் குடிக்கும் நீர் ஊற்றுகள்
நீருககாக காத்திருக்கின்றன

பாம்பை உண்ணும் பாம்பு
ராஜநாக பாம்பு குறும்படம் விரித்து
பாம்புக்காக காத்திருக்கின்றது

வியர்தது கொட்டும் உடம்பில்
ஈரக்காற்று படும் பொழுது
ஒரு சிலீர்ப்பு உண்டாகும்
அதனன்ன சுகம் தேடும்

அந்த நினைவுகள்
ஓட்டை பலூனில் காற்று அடைக்கிறது
நேரடியாய் வரும் நாளில்
அண்டத்தில் பறக்கவிடலாம் பறக்கலாம்

Series Navigation